Author: Farook

Abu-Dawood-419

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 150

இஷா தொழுகை நேரம்.

419. இந்த தொழுகையின் அதாவது பிந்தி இஷா தொழுகையின் நேரத்தை மக்களில் நன்கு அறிந்தவன் ஆவேன். இரவின் மூன்றவது பகுதியில் சந்திரன் மறைந்ததும் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் அந்த தொழுகையை தொழுவார்கள் என்று நுஃமான் அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, நஸயீ, தாரமீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)


أَنَا أَعْلَمُ النَّاسِ بِوَقْتِ هَذِهِ الصَّلَاةِ «صَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهَا لِسُقُوطِ الْقَمَرِ لِثَالِثَةٍ»


Abu-Dawood-418

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

418. அபூஅய்யுப் போர் செய்ய போகும் போது எங்களிடம் வருகையளித்தார். அன்றைய தினத்தில் உக்பா பின் ஆமிர் எகிப்தின் ஆளுநராக இருந்தார். அவர் மக்ரிபை பிற்படுத்தினார். அவரிடம் அபூஅய்யூப் சென்று இந்த தொழுகை என்ன தொழுகை? என்று வினவினார். அதற்கு பணியில் ஈடுபட்டு விட்டோம் என்று பதில் சொன்னார். அதற்கு அபூஅய்யூப் நட்சத்திரங்கள் தெரியும் அளவுக்கு மக்ரிபை பிற்படுத்தாத வரை எனது சமுதாயத்தவர் நன்மையிலேயே அல்லது சரியான நடைமுறைலேயே இருக்கின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீ செவியுறவில்லையா? என்று கேட்டார்கள் என மிர்சத் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார்கள்.


لَمَّا قَدِمَ عَلَيْنَا أَبُو أَيُّوبَ غَازِيًا وَعُقْبَةُ بْنُ عَامِر يَوْمَئِذٍ عَلَى مِصْرَ فَأَخَّرَ الْمَغْرِبَ فَقَامَ إِلَيْهِ أَبُو أَيُّوب، فَقَالَ: لَهُ مَا هَذِهِ الصَّلَاةُ يَا عُقْبَةُ، فَقَالَ: شُغِلْنَا، قَالَ: أَمَا سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  يَقُولُ: «لَا تَزَالُ أُمَّتِي بِخَيْرٍ» – أَوْ قَالَ: عَلَى الْفِطْرَةِ – مَا لَمْ يُؤَخِّرُوا الْمَغْرِبَ إِلَى أَنْ تَشْتَبِكَ النُّجُومُ


Abu-Dawood-417

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

417. நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைகின்ற நேரத்தில் அதனுடைய மேல்விட்டம் மறைந்ததும் மக்ரிப் தொழுவார்கள் என ஸலமா பின் அக்வப் அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ், புகாரி, முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது.)


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْمَغْرِبَ سَاعَةَ تَغْرُبُ الشَّمْسُ إِذَا غَابَ حَاجِبُهَا»


Abu-Dawood-416

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 149

மக்ரிப் தொழுகை.

416. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுவோம். பிறகு நாங்கள் அம்பு எறிவோம். எங்களில் ஒருவர் (அந்நேரத்தில்) தனது அம்பு போய் விழும் இடத்தைக் கண்டு கொள்வார் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இது போன்ற ஹதீஸ் புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)


«كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ نَرْمِي فَيَرَى أَحَدُنَا مَوْضِعَ نَبْلِهِ»


Abu-Dawood-415

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

415. சூரிய வெளிச்சத்தில் பூமியில் உள்ள பொருட்கள் மஞ்சளாக காட்சியளிக்கும் நேரமே தவறிவிட்ட அஸர் நேரமாகும் என்று அவ்ஸாயீ விளக்கமளிக்கின்றார்.


قَالَ أَبُو عَمْرٍو يَعْنِي الْأَوْزَاعِيَّ: وَذَلِكَ أَنْ تَرَى مَا عَلَى الْأَرْضِ مِنَ الشَّمْسِ صَفْرَاءَ


Abu-Dawood-414

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

414. அஸர் தொழுகையை தவர விடுபவர் தனது குடும்பம், பொருளாதாரம் ஆகியவை பறிக்கப் பட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

பறிக்கப்பட்டவர் என்பதற்கு அரபியில் உதிர என்று சொல்வதாகும். உபைதுல்லாஹ் பின் அம்ர் என்பார் என்று அறிவிக்கப்படுகின்றார். இந்த தடுமாற்றம் ஐய்யூப் என்ற அறிவிப்பாளரிடம் ஏற்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து தன் தந்தை வாயிலாக அறிவிக்கும் ஸாலிம் மூலம் அறிவிக்கும் ஜுஹ்ரி என்றே அறிவிக்கின்றார்.


«الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ، فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ»


Abu-Dawood-413

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

413. நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி)யிடம் சென்றோம். அப்போது அவர் அஸர் தொழுகையை தொழலானார். அவர் தொழுது முடித்ததும் தொழுகையை (அதன் நேரத்தை விட்டும் தாமதப் படுத்தி) விரைவாகத் தொழுவதை நாங்கள் குறிப்பிட்டோம் அல்லது அவர் குறிப்பிட்டார். அப்போது, அவர் அது நயவஞ்சகர்களின் தொழுகையாகும், அது நயவஞ்சகர்களின் தொழுகையாகும். அவர்களில் ஒருவர் சூரியன் மஞ்சள் நிறமாகி அது சைத்தானின் இரு கொம்புகளுக்கிடையில் அல்லது இரு கொம்புகளின் மீது (அறிவிப்பாளர் ஐயம்) ஆகிவிடும் வரை உட்கார்ந்து விட்டு பிறகு எழுந்து நான்கு ரக்அத்துக்களை மிக வேகமாக தொழுவார். அவற்றில், மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ்வை கொஞ்சமாகவே தவிர நினைவு கூற மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது.)


دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ بَعْدَ الظُّهْرِ، فَقَامَ يُصَلِّي الْعَصْرَ، فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ ذَكَرْنَا تَعْجِيلَ الصَّلَاةِ أَوْ ذَكَرَهَا، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِينَ، تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِينَ، تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِينَ يَجْلِسُ أَحَدُهُمْ حَتَّى إِذَا اصْفَرَّتِ الشَّمْسُ فَكَانَتْ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ، أَوْ عَلَى قَرْنَيِ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَ أَرْبَعًا لَا يَذْكُرُ اللَّهَ فِيهَا إِلَّا قَلِيلًا»


Abu-Dawood-412

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

412. சூரியன் மறைவதற்கு முன்பு அஸர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் அஸர் தொழுகையை அடைந்தவராவார். சூரியன் உதிப்பதற்கு முன்பு பஜ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் பஜ்ர் தொழுகையை அடைந்தவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


«مَنْ أَدْرَكَ مِنَ الْعَصْرِ رَكْعَةً قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ، وَمَنْ أَدْرَكَ مِنَ الْفَجْرِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ»


Abu-Dawood-411

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

411. அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ழுஹரை கடுமையான வெப்பத்தின் போது தொழுபவர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தொழுகின்ற தொழுகையிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு இந்த லுஹர் தொழுகையைத் தவிர வேறு எந்த தொழுகையும் கஷ்டமானதாக இல்லை. அப்போது தான் ) என்ற தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள் (2 : 23) என்ற வசனம் இறங்கியது என்றும் இந்த தொழுகைக்கு முன் இரண்டு தொழுகைகளும் அதற்கு பின்பு இரு தொழுகைகளும் உள்ளன என்றும் ஜைத் பின் சாபித் (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸை இமாம் புகாரி தனது நூலான தாரிக்கில் பதிவு செய்திருக்கின்றார்கள்.)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ، وَلَمْ يَكُنْ يُصَلِّي صَلَاةً أَشَدَّ عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا، فَنَزَلَتْ {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى} [البقرة: 238] وَقَالَ: «إِنَّ قَبْلَهَا صَلَاتَيْنِ، وَبَعْدَهَا صَلَاتَيْنِ»


Abu-Dawood-410

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

410. தனக்கு ஒரு குர்ஆனை எழுதி தருமாறு எனக்கு ஆயிஷா (ரலி) உத்தரவிட்டார்கள். தொழுகைகளையும் நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள் (2 : 238) என்ற வசனத்தை அடைந்ததும் எனக்கு தெரிவி என்றும் சொன்னார்கள். நான் அந்த வசனத்தை அடைந்ததும் அதை அவர்களிடம் தெரிவித்தேன். 

தொழுகைகளையும் நடுத் தொழுகையையும் அஸர் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள். மேலும் (தொழுகையில்) அல்லாஹ்வுக்கு அஞ்சி மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள் என்று (அஸர் தொழுகை என்பதை சேர்த்து) எழுதச் செய்தார்கள். பிறகு இதை நான் அல்லாஹ்வின் தூதரிடம் செவியுற்றேன் என்றும் தெரிவித்தார்கள் என அபூயூனூஸ் அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.)


أَمَرَتْنِي عَائِشَةُ أَنْ أَكْتُبَ لَهَا مُصْحَفًا وَقَالَتْ: ” إِذَا بَلَغْتَ هَذِهِ الْآيَةَ فَآذِنِّي: {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى} [البقرة: 238] «، فَلَمَّا بَلَغْتُهَا آذَنْتُهَا، فَأَمْلَتْ عَلَيَّ» حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى، وَصَلَاةِ الْعَصْرِ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ “، ثُمَّ قَالَتْ عَائِشَةُ: «سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلّمَ»


Next Page » « Previous Page