Author: Farook

Abu-Dawood-409

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

409. கன்தக் போரின் போது நடுத் தொழுகையான அஸர் தொழுகையை தொழ விடாது அவர்கள் (எதிரிகள்) நம்மை தடுத்துவிட்டனர். அவர்களது வீடுகளையும், அவர்களது மண்ணறைகளையும் அல்லாஹ் நெருப்பால் நிறைப்பானாக! என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ الْخَنْدَقِ: «حَبَسُونَا عَنْ صَلَاةِ الْوُسْطَى صَلَاةِ الْعَصْرِ مَلَأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا»


Abu-Dawood-408

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

408. நாங்கள் மதீனாவிற்கு அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் வருகையுற்றோம். அவர்கள் அஸர் தொழுகையை சூரியன் தெளிவான வெண்மையான தோற்றத்தில் இருக்கும் வரை பிற்படுத்துவார்கள் என்று அலி பின் ஷைபான் அறிவிக்கின்றார்.


«قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَكَانَ يُؤَخِّرُ الْعَصْرَ مَا دَامَتِ الشَّمْسُ بَيْضَاءَ نَقِيَّةً»


Abu-Dawood-407

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

407. சூரிய ஒளி (சுவர்களில்) ஏறுவதற்கு முன்பாக தன்னுடைய வீட்டில் பட்டுக் கொண்டிருக்கும் போதே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ تَظْهَرَ»


Abu-Dawood-406

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

406. சூரியன் உயிருடன் உள்ளது என்பதின் பொருள் அதன் வெப்பத்தை நீ உணர்வதாகும் என்று கைஸாமா தெரிவிக்கின்றார்.


«حَيَاتُهَا أَنْ تَجِدَ حَرَّهَا»


Abu-Dawood-405

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

405. அவாலி (மதீனாவிலிருந்து) இரண்டு மைல்கள் அல்லது மூன்று மைல்கள் தூரத்தில் உள்ளது என்று ஜுஹ்ரி தெரிவிக்கின்றார்.

நான்கு மைல்கள் என்றும் ஜுஹ்ரி கூறியதாக நான் எண்ணுகின்றேன் என்று இதன் அறிவிப்பாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.


وَالْعَوَالِي عَلَى مِيلَيْنِ أَوْ ثَلَاثَةٍ قَالَ: وَأَحْسَبُهُ قَالَ: أَوْ أَرْبَعَةٍ


Abu-Dawood-404

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 148

அஸர் தொழுகையின் நேரம்.

404. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழுகை தொழுவார்கள். அப்போது சூரியன் (வானில்) உயர்ந்தே இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும்போது ஏற்படும் நிறமாற்றம் ஏற்படாமல்) தெளிவாகவே இருக்கும். (அஸர் தொழுதுவிட்டு மதீனாவை அடுத்திருக்கும்) மேட்டுப் பகுதி (கிராமங்)களுக்குச் செல்பவர் அங்கு சென்று சேரும்போதும் சூரியன் உயர்ந்தே இருக்கும்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ» وَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ


Abu-Dawood-403

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

403. சூரியன் உச்சி சாய்ந்ததும் பிலால் (ரலி) அவர்கள் ழுஹருக்கு பாங்கு சொல்வார் என்று ஜாபிர் பின் சமூரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ் முஸ்லிம், இப்னுமாஜாவில் இடம் பெறுகின்றது.


«أَنَّ بِلَالًا كَانَ يُؤَذِّنُ الظُّهْرَ إِذَا دَحَضَتِ الشَّمْسُ»


Abu-Dawood-402

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

402. வெப்பம் கடுமையாகி விட்டால் வெப்பம் தணிகின்ற வரையில் தொழுகையை பிற்படுத்துங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஏனெனில், கடுமையான வெப்பம் நரகத்தின் நெருப்பாகும் என்று இப்னு வஹப் என்பாரின் அறிவிப்பில் இடம் பெறுகின்றது.

இந்த ஹதீஸ் புகாரி, திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.


«إِذَا اشْتَدَّ الْحَرُّ، فَأَبْرِدُوا عَنِ الصَّلَاةِ» قَالَ: ابْنُ مَوْهَبٍ: «بِالصَّلَاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ»


Abu-Dawood-401

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

401. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது முஅத்தின் ழுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்ததும் நபி (ஸல்) அவர்கள் சூடு தணியட்டும் என்றார்கள். மீண்டும் முஅத்தின் ழுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்ததும் நபி (ஸல்) அவர்கள் சூடு தணியட்டும் என்றார்கள். இரு தடவையோ அல்லது மூன்று தடவையோ சொன்னார்கள். கடைசியில் நாங்கள் மலைக்குன்றுகளின் நிழலை கண்டோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் கடுமையான வெப்பம் நரகத்தின் அனலாகும் நெருப்பாகும். எனவே, வெப்பம் கடுமையாகி விட்டால் சூடு தணிந்து தொழுங்கள் என்று சொன்னார்கள் என்று அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது.


كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ الظُّهْرَ فَقَالَ: «أَبْرِدْ». ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ فَقَالَ: «أَبْرِدْ» – مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا – حَتَّى رَأَيْنَا فَيْءَ التُّلُولِ، ثُمَّ قَالَ: «إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلَاةِ»


Abu-Dawood-400

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

400. கோடைக் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் லுஹர் தொழுகையின் (நேர) அளவு, ஒருவரின் நிழல் அவரது மூன்று பாதங்கள் அளவிற்கு வந்ததிலிருந்து ஐந்து பாதங்கள் வரும் வரை இருக்கும். குளிர் காலத்தில் ஐந்து பாதங்கள் முதல் ஏழு பாதங்கள் அளவிற்கு வரும் வரை இருக்கும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

(குறிப்பு: இந்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் லுஹர் தொழுகையின் நேரத்தை எவ்வாறு கணக்கிட்டனர் என்று கூறப்படுகிறது. சூரியன் நடுஉச்சியை விட்டு மேற்கில் சாய்ந்த பின் ஏற்படும் நிழலின் அளவைப் பற்றியே இந்த செய்தியில் கூறப்படுகிறது)


«كَانَتْ قَدْرُ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّيْفِ ثَلَاثَةَ أَقْدَامٍ إِلَى خَمْسَةِ أَقْدَامٍ، وَفِي الشِّتَاءِ خَمْسَةَ أَقْدَامٍ إِلَى سَبْعَةِ أَقْدَامٍ»


Next Page » « Previous Page