Author: Farook

Abu-Dawood-386

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

386. மேலுள்ள ஹதீஸின் பொருளை தான் இதன் அறிவிப்பாளர் அறிவிக்கின்றார்.

தனது இரு காலணிகளால் அசுத்தத்தை மிதித்து விட்டால் மண் அவ்விரண்டையும் துப்புரவளிக்கக் கூடியதாகும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«إِذَا وَطِئَ الْأَذَى بِخُفَّيْهِ، فَطَهُورُهُمَا التُّرَابُ»


Abu-Dawood-385

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 141

செருப்பில் பட்ட அசுத்தம்.

385. உங்களில் இருவர் தன் இரு செருப்புகளால் அசுத்தத்தை மிதித்து விட்டால் (அதன் பின் அவர் மிதிக்கும்) மண் அந்த செருப்பிற்கு துப்புரவளிக்கக் கூடியதாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).


«إِذَا وَطِئَ أَحَدُكُمْ بِنَعْلِهِ الْأَذَى، فَإِنَّ التُّرَابَ لَهُ طَهُورٌ»


Abu-Dawood-384

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

384. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! எங்களுக்கு பள்ளிக்கு வர அசுத்தம் நிறைந்த ஒரு பாதைதான் உண்டு! மழை பெய்தால் நாங்கள் என்ன செய்வது என்று கேட்டேன். அதற்கு, பின்னால் உள்ள பாதை அதை விட நல்லது அல்லவா? என்று வினவினார்கள். நான் ஆம் என்றேன். அது இதற்கு பரிகாரமாகி விடும் என்று விளக்கம் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்.


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لَنَا طَرِيقًا إِلَى الْمَسْجِد مُنْتِنَةً فَكَيْفَ نَفْعَلُ إِذَا مُطِرْنَا؟ قَالَ: «أَلَيْسَ بَعْدَهَا طَرِيقٌ هِيَ أَطْيَبُ مِنْهَا؟» قَالَتْ: قُلْتُ: بَلَى. قَالَ: «فَهَذِهِ بِهَذِهِ»


Abu-Dawood-383

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 383

விளிம்பில் இரத்தக்கரை படிந்த ஆடை.

383. நான் ஆடையின் ஓரத்தை (தரையில் உரசும் அளவிற்கும்) நட்டி உடுத்தி கொண்டு அசுத்தமான இடத்தில் நடந்து செல்லும் பெண்ணாவேன்? என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) கேட்டார்கள்.

அதற்கு பின்னால் வரும் (சுத்தமான) பாதை அதை சுத்தப் படுத்தி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று பதில் சொன்னார்கள்.


أَنَّهَا سَأَلَتْ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنِّي امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي، وَأَمْشِي فِي الْمَكَانِ الْقَذِرِ فَقَالَتْ: أُمُّ سَلَمَةَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُطَهِّرُهُ مَا بَعْدَهُ»ك


Abu-Dawood-382

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 139

காய்ந்து விட்டால் மண் தூய்மையானதாகும்.

382. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நான் பள்ளியிலேயே இரவு தங்குவேன். நான் திருமணமாகாத இளைஞனாகவும் இருந்தேன். நாங்கள் சிறுநீர் கழித்து கொண்டும், பள்ளிக்குள் முன்னும் பின்னும் வந்து போய்க் கொண்டிருப்போம்! இதற்காக அவர்கள் எதையும் தெளிக்கமாட்டார்கள். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி).


«كُنْتُ أَبِيتُ فِي الْمَسْجِدِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكُنْتُ فَتًى شَابًّا عَزَبًا، وَكَانَتِ الْكِلَابُ تَبُولُ وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي الْمَسْجِدِ، فَلَمْ يَكُونُوا يَرُشُّونَ شَيْئًا مِنْ ذَلِكَ»


Abu-Dawood-381

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

381. நபி (ஸல்) அவர்களுடன் ஒரு கிராமவாசி தொழுதார். இதன் அறிவிப்பாளர் மேற்கண்ட அந்த சம்பவத்தை அறிவிக்கின்றார்.

மண்ணில் அவர் சிறுநீர் கழித்த பகுதியை எடுத்து அதை (வெளியே அள்ளி) போடுங்கள். அந்த இடத்தில் தண்ணீரையும் ஊற்றுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவிப்பாளர் அறிவிக்கின்றார் என்று அறிவிப்பாளர் அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்:

இது முர்ஸலாகு. இப்னு மஃகல் என்பார் நபி (ஸல் அவர்களை சந்தித்தது இல்லை.


صَلَّى أَعْرَابِيٌّ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذِهِ الْقِصَّةِ قَالَ فِيهِ: وَقَالَ يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذُوا مَا بَالَ عَلَيْهِ مِنَ التُّرَابِ فَأَلْقُوهُ، وَأَهْرِيقُوا عَلَى مَكَانِهِ مَاءً»


Abu-Dawood-379

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

379. தனது தாயார் உம்மு ஸலமா (ரலி) அவர்களை உணவு சாப்பிடாத ஆண் குழந்தையின் சிறுநீர் மீது தண்ணீர் ஊற்ற கண்டார்கள். குழந்தை உணவு சாப்பிடுமானால் அக்குழந்தையின் சிறுநீரை கழுவுபவர்களாக இருந்தனர் என்று ஹஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّهَا أَبْصَرَتْ أُمَّ سَلَمَةَ «تَصُبُّ الْمَاءَ عَلَى بَوْلِ الْغُلَامِ مَا لَمْ يَطْعَمْ، فَإِذَا طَعِمَ غَسَلَتْهُ، وَكَانَتْ تَغْسِلُ بَوْلَ الْجَارِيَةِ»


Abu-Dawood-377

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

377. பெண் குழந்தையின் சிறுநீர் கழுவப்பட வேண்டும். உணவு சாப்பிடாத வரை ஆண் குழந்தையின் சிறு நீருக்கு தண்ணீர் தெளிக்கப் பட வேண்டும்.

அறிவிப்பவர் : அலீ (ரலி).


«يُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ، وَيُنْضَحُ مِنْ بَوْلِ الْغُلَامِ مَا لَمْ يَطْعَمْ»


Abu-Dawood-376

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


كُنْتُ أَخْدِمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ إِذَا أَرَادَ أَنْ يَغْتَسِلَ قَالَ: «وَلِّنِي قَفَاكَ». فَأُوَلِّيهِ قَفَايَ فَأَسْتُرُهُ بِهِ، فَأُتِيَ بِحَسَنٍ، أَوْ حُسَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَبَالَ عَلَى صَدْرِهِ فَجِئْتُ أَغْسِلُهُ فَقَالَ: «يُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ، وَيُرَشُّ مِنْ بَوْلِ الْغُلَامِ» قَالَ عَبَّاسٌ: حَدَّثَنَا يَحْيَى بْنُ الْوَلِيدِ


Next Page » « Previous Page