Author: Farook

Abu-Dawood-375

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

375. அலீ (ரலி) அவர்களின் மகனார் ஹுசைன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மடியில் இருக்கும் போது அவர்கள் மடி மீது சிறுநீர் கழித்து விட்டார்கள். வேறு ஆடையை அணிந்து கொண்டு உங்களின் இடுப்பாடையை கழுவுவதற்கு என்னிடம் கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். பெண் குழந்தையின் சிறுநீருக்காக மட்டுமே கழுவப் பட வேண்டும். ஆண்குழந்தையின் சிறுநீருக்காக தண்ணீர் தெளிக்கப் படவேண்டும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : லுபாபா பின்த் அல்ஹர்ஸ்.


كَانَ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي حِجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَالَ عَلَيْهِ فَقُلْتُ: الْبَسْ ثَوْبًا وَأَعْطِنِي إِزَارَكَ حَتَّى أَغْسِلَهُ. قَالَ: «إِنَّمَا يُغْسَلُ مِنْ بَوْلِ الْأُنْثَى وَيُنْضَحُ مِنْ بَوْلِ الذَّكَرِ»


Abu-Dawood-374

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 137

குழந்தையின் சிறுநீர் பட்ட ஆடையை எவ்வாறு கழுவுவது ?

374. உம்மு கைஸ் பின்த் பிஹ்சன் அவர்கள் உணவு உட்கொள்ளாத தனது சிறு குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த குழந்தையை தனது மடியில் உட்கார வைத்தார்கள். அப்போது குழந்தை அவர்களது ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் உடனே தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதை கழுவாமல் அதில் தண்ணீர் தெளித்தார்கள்.

அறிவிப்பவர் : உம்மு கைஸ் பின்த் மிஹ்சன்.


أَنَّهَا، «أَتَتْ بَابُنٍ لَهَا صَغِيرٍ لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حِجْرِهِ فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ»


Abu-Dawood-373

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

373. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் இருந்து இந்திரியத்தை தான் அடிக்கடி கழுவுவதாக கூற நான் செவியுற்றிருக்கின்றேன். (அவ்வாறு கழுவிய பின்பு) கரையை அல்லது கரைகளை நான் காண்பேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸுலைமான் பின் யஸார்.


«إِنَّهَا كَانَتْ تَغْسِلُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَتْ: «ثُمَّ أَرَى فِيهِ بُقْعَةً أَوْ بُقَعًا»


Abu-Dawood-372

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

372. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து இந்திரியத்தை நான் அடிக்கடி சுரண்டிக் கொண்டிருப்பேன். அந்த ஆடையிலேயே அவர்கள் தொழுவார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி)

(குறிப்பு : முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றிருக்கின்றது.)

அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

முகீரா, அபூமுஃஷா, வாஸில் ஆகியோர் இந்த அறிவிப்புக்கு ஒத்ததாக அறிவிக்கின்றார்கள்.


«كُنْتُ أَفْرُكُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيُصَلِّي فِيهِ»


Abu-Dawood-371

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 136

விந்துபட்ட ஆடை பற்றிய சட்டம்.

371. ஹம்மாம் பின் ஹாரிஸ் ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்களிடம் தங்கியிருந்தார்கள். அப்போது அவர் (தூங்கும் போது) ஸ்கலிதமாகி விட்டார். தன் ஆடையில் பட்ட இந்திரியத்தின் கரையையோ அல்லது ஆடையையோ கழுவும் போது அன்னையாரின் அடிமைப் பெண் பார்த்து விட்டு அன்னையாரிடம் தெரியப்படுத்தி விடுகின்றார். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், நிச்சயமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து இந்திரியக் கரையை நானே சுரண்டியிருக்கிறேன். (அதனால் கரையை நீக்குவதற்காக ரொம்ப நீ அலட்டிக் கொள்ளத் தேவையில்லை) என்று சொன்னார்கள் என்று ஹம்மாம் பின் அல் ஹாரிஸ் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸை ஹகம் அவர்கள் அறிவிப்பது போன்று அஃமஷ் அவர்களும் அறிவிக்கின்றார்.


أَنَّهُ كَانَ عِنْدَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَاحْتَلَمَ، فَأَبْصَرَتْهُ جَارِيَةٌ لِعَائِشَةَ وَهُوَ يَغْسِلُ أَثَرَ الْجَنَابَةِ مِنْ ثَوْبِهِ، أَوْ يَغْسِلُ ثَوْبَهُ، فَ أَخْبَرَتْ عَائِشَةَ فَقَالَتْ: «لَقَدْ رَأَيْتُنِي وَأَنَا أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Abu-Dawood-370

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

370. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தொழுவார்கள். மாத விலக்கான நிலையில் நான் அவர்களுக்கு அருகில் (படுத்து) இருப்பேன். எனக்குள்ள மேலாடை என் மீதும், அதன் ஒரு பகுதி அவர்கள் மீதும் கிடக்கும் என்று அன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்கள் கூறினார்கள்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِاللَّيْلِ وَأَنَا إِلَى جَنْبِهِ، وَأَنَا حَائِضٌ وَعَلَيَّ مِرْطٌ لِي وَعَلَيْهِ بَعْضُهُ»


Abu-Dawood-369

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 135

பெண்ணின் ஆடையை அணிந்து தொழ அனுமதி.

369. நபி (ஸல்) அவர்கள் தன் மீது ஒரு மேலாடை கிடக்கும் நிலையிலும், அதன் ஒரு பகுதி மாதவிலக்கான தனது மனைவியரில் ஒருவர் மீது கிடக்கும் நிலையிலும் தொழுதார்கள் என்று மைமூன் (ரலி) அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى وَعَلَيْهِ مِرْطٌ وَعَلَى بَعْضِ أَزْوَاجِهِ مِنْهُ وَهِيَ حَائِضٌ، وَهُوَ يُصَلِّي وَهُوَ عَلَيْهِ»


Abu-Dawood-368

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

368. நபி (ஸல்) அவர்கள் நாங்கள் எங்களுடைய உடல்களை மூடிக் கொள்ளும் ஆடைகளில் தொழமாட்டார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

இதை இப்னு சிரீன் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஹம்மாத் கூறுகின்றார் :

நான் முஹம்மத் பின் சீரின் அவர்களிடம் இந்த ஹதீஸ் பற்றி கேட்டபோது அவர் இந்த ஹதீஸ் (யாரிடமிருந்து கேட்டேன் என்று) அறிவிக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு முன்பு இதை நான் செவியுற்றேன். மேலும் இதை யாரிடமிருந்து நான் செவியுற்றேன் என்று எனக்கு தெரியவில்லை. சரியான ஆளிடம் கேட்டேனா? இல்லையா? என்றும் தெரியவில்லை. எனவே இந்த ஹதீஸ் பற்றி மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். என்று சயீத் பின் அபீ சதாகா கூற நான் செவிமடுத்தேன்.

முகீரா, அபூமஃஷர், வாஸில் ஆகியோர் ஹம்மாத் என்பாரின் அறிவிப்பில் ஒன்று படுகின்றனர்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يُصَلِّي فِي مَلَاحِفِنَا»


Abu-Dawood-367

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 134

பெண்களின் ஆடையை அணிந்து தொழலாமா ?

367. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாங்கள் எங்களுடைய உடலில் மூடிக் கொள்ளும் ஆடைகளில் தொழமாட்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் ஷுமர் அல்லது லுஹுப் என்று தனது தந்தை ஷகீக் அறிவிப்பதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைத்துல்லாஹ் தெரிவிக்கின்றார். லுஹுப் என்றால் ஒரு ஆடைக்கு மேல் மூடப்படும் இன்னொரு ஆடை என்பதாகும்.

ஷுமர் என்றால் இன்னொரு ஆடையின்றி உடலை ஒட்டி மூடப்படும் ஆடையாகும் ஆக இரு வார்த்தைகளும் கிட்டதட்ட ஒரே பொருளையே தருகின்றன.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّ فِي شُعُرِنَا، أَوْ فِي لُحُفِنَا» قَالَ عُبَيْدُ اللَّهِ: شَكَّ أَبِي


Abu-Dawood-366

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 133

உடலுறவின் போது அணிந்திருந்த ஆடையுடன் தொழுவது.

366. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த ஆடையில் உடலுறவு கொள்கிறார்களோ அந்த ஆடையிலேயே தொழுவார்களா? என்று தனது சகோதரியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியுமான உம்மு ஹபீபா (ரலி) அன்ஹா அவர்களிடம் கேட்டார்கள். ஆம்! அதில் அசுத்தத்தை காணவில்லை என்றால் என்று பதில் சொன்னார்கள் என்று முஆவியா பின் ஹதைஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّهُ سَأَلَ أُخْتَهُ أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّ فِي الثَّوْبِ الَّذِي يُجَامِعُهَا فِيهِ؟ فَقَالَتْ: «نَعَمْ إِذَا لَمْ يَرَ فِيهِ أَذًى»


Next Page » « Previous Page