பாடம் : 114
ரத்தப் போக்குள்ளவள் ஒரு நாளைக்கு ஒரு முறை குளித்தல்.
301. கஃகாஃ, ஸைது பின் அஸ்லம் ஆகிய இருவரும் அபூபக்கர் (ரலி) அவர்களின் அடிமையான சுமைய்யீ என்பவரை சயீத் பின் அல்முஸய்யிப் (ரலி) யிடம் சூதக ரத்தப் போக்குள்ளவர் எவ்வாறு குளிக்க வேண்டும் என்று கேட்டு வருமாறு அனுப்பி வைத்தார்கள். அப்போது சயீத், அப்படிப் பட்டவர் ழுஹ்ருக்கு லுஹர் குளிக்க வேண்டும். (அதாவது இன்று லுஹர் – நண்பகல் நேரத்தில் குளித்தால் அவர் குளிப்பு மறுநாள் லுஹர் வரை செல்லுபடியாகும்.) மேலும் அவர் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்ய வேண்டும். அவருக்கு ரத்தம் மிகைத்து வருமானால் பஞ்சிட்ட ஆடையை கொண்டு துணியில் இறுக்கிக் கட்டிக் கொள்ளவும் என்று பதிலளித்தார்கள் என்று சுமைய்யி அறிவிக்கின்றார்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
இப்னு உமர் (ரலி) யிடம் இருந்தும் அனஸ் பின் மாலிக் (ரலி) யிடம் இருந்தும் அவர் ழுஹருக்கு லுஹர் குளிக்க வேண்டும் என்றே அறிவிக்கப் படுகிறது. ஆயிஷா (ரலி)யிடம் இருந்து கமீர் வழியாக தனது மனைவி மூலம் அறிவிக்கும் ஷுஃபீ வழியாக தாவூத், ஆஸிம் ஆகியோரும் இவ்வாறே அறிவிக்கின்றனர். أَنَّ الْقَعْقَاعَ، وَزَيْدَ بْنَ أَسْلَمَ أَرْسَلَاهُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ يَسْأَلُهُ كَيْفَ تَغْتَسِلُ الْمُسْتَحَاضَةُ فَقَالَ: «تَغْتَسِلُ مِنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ، وَتَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ، فَإِنْ غَلَبَهَا الدَّمُ اسْتَثْفَرَتْ بِثَوْبٍ»
சமீப விமர்சனங்கள்