Author: Farook

Abu-Dawood-134

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

134. அபூஉமாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் உலூவின் முறையை விவரிக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு கண்களின் குழிகளையும் தேய்த்துக் கழுவுவார்கள் என்று கூறிவிட்டு, இரு காதுகளும் தலையின் ஒரு பகுதி தான் என்றும் கூறினார்கள் என அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(இது காதுகளும் தலையின் ஒரு பகுதியே) இந்த கருத்தை அபூஉமாமா (ரலி) அவர்கள்தான் கூறுகிôர்கள் என சுலைமான் பின்ஹர்ப் அறிவிக்கிறார்.

இரு காதுகளும் தலையின் ஒரு பகுதியே என்ற சொல் நபி (ஸல்) அவர்கள் கூறியதா? அல்லது அபூஉமாமா (ரலி) கூறியதா? என்ற விபரத்தை நான் அறியேன் என்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாத் குறிப்பிடுவதாக குதைபா தெரிவிக்கின்றார்.

(குறிப்பு : திர்மிதீ, இப்னுமாஜாவிலும் இது இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடர் அவ்வளவு சரியானதல்ல என இமாம் திர்மிதீ குறிப்பிடுகிறார்கள்.)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ الْمَأْقَيْنِ»، قَالَ: وَقَالَ: «الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ»، قَالَ سُلَيْمَانُ بْنُ حَرْبٍ: يَقُولُهَا: أَبُو أُمَامَةَ، قَالَ قُتَيْبَةُ: قَالَ حَمَّادٌ: لَا أَدْرِي هُوَ مِنْ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ مِنْ أَبِي أُمَامَةَ – يَعْنِي قِصَّةَ الْأُذُنَيْنِ – قَالَ قُتَيْبَةُ: عَنْ سِنَانٍ أَبِي رَبِيعَةَ


Abu-Dawood-133

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

133. உலூச் செய்யும் போது நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் மும்மூன்று முறை கழுவி, தலைக்கும் இருகாதுகளுக்கும் ஒரே தடவை மஸஹ் செய்யக் கண்டதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : அஹ்மத் என்ற நூலிலும் இது இடம் பெற்றுள்ளது.)


«رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ – فَذَكَرَ الْحَدِيثَ – كُلَّهُ ثَلَاثًا ثَلَاثًا»، قَالَ: «وَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ مَسْحَةً وَاحِدَةً»


Abu-Dawood-132

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

132. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உலூவில்) மஸஹ் செய்யும் போது கைகள் பிடரியின் ஆரம்பப்பகுதியை அடையும் வரை ஒரு தடவை தலைக்கு மஸஹ் செய்யக் கண்டேன் என தல்ஹாபின் முஸர்ரிஃப் அவர்கள் தமது பாட்டனாரிடமிருந்து தமது தந்தை கூறியதாக அறிவிக்கிறார்.

இந்த ஹதீஸை முஸத்தத் அவர்கள் அறிவிக்கும் போது அவர்கள் தன் தலைக்கு அதன் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை மஸஹ் செய்து முடித்து இறுதியில் தன் கைகளை இரு காதுகளின் கீழ்புறமாக வெளிக்கொணர்ந்தனர் என அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸை நான் யஹ்யா பின் ஸயீது அல்கத்தான் அவர்களிடம் எடுத்துரைத்தபோது இதை அவர்கள் நிராகரிக்கத்தக்கது (முன்கரான ஹதீஸ்) என்று கூறிவிட்டார்கள் எனவும் முஸத்தத் தெரிவிக்கிறார்.

இமாம் அபூதாவூது குறிப்பிடு கின்றார்கள் : இமாம் சுஃப்யான் பின் உயைனர் அவர்கள் இதை நிராகரிக்கத் தக்கது என்று கூறியதாக ஹதீஸ்கலை வல்லுனர்கள் கருதுகிறார்கள் என்றும் தல்ஹா அவர்கள் தமது தந்தை வாயிலாக பாட்டனார் மூலம் அறிவிக்கின்ற இத்தொடரை இது ஒரு அறிவிப்புத் தொடரே இல்லை என்று விமர்சிப்பதாகவும்

«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ رَأْسَهُ مَرَّةً وَاحِدَةً حَتَّى بَلَغَ الْقَذَالَ – وَهُوَ أَوَّلُ الْقَفَا، وَقَالَ مُسَدَّدٌ – مَسَحَ رَأْسَهُ مِنْ مُقَدَّمِهِ إِلَى مُؤَخَّرِهِ حَتَّى أَخْرَجَ يَدَيْهِ مِنْ تَحْتِ أُذُنَيْهِ»، قَالَ مُسَدَّدٌ: فَحَدَّثْتُ بِهِ يَحْيَى فَأَنْكَرَهُ


Abu-Dawood-131

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

131. நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்யும் போது தனது இரு விரல்களையும் தம் இரு காதுகளின் துவாரங்களில் செலுத்தினார் கள் என ருபையி பின்த் முஅவ்வித் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு : இப்னுமாஜாவிலும் இது இடம் பெற்றுள்ளது. இதிலும் மேற்கண்ட அப்துல்லாஹ் பின் முஹம்மது உகைல் இடம் பெற்றுள்ளார்.)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ، فَأَدْخَلَ إِصْبَعَيْهِ فِي حُجْرَيْ أُذُنَيْهِ»


Abu-Dawood-130

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

130. நபி (ஸல்) அவர்கள் (கைகளை முழங்கை உட்பட கழுவிய பின்னர்) எஞ்சியிருந்த தண்ணீரினால் தமது தலைக்கு மஸஹ் செய்தார்கள் என ருபைய்யி பின்த் முஅவ்வித் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு : திர்மிதீ, தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் இது போன்ற கருத்துள்ள ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இதிலும் குறை கூறப்பட்ட அப்துல்லாஹ் பின் முஹம்மது உகைல் இடம் பெறுகிறார்.)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ بِرَأْسِهِ مِنْ فَضْلِ مَاءٍ كَانَ فِي يَدِهِ»


Abu-Dawood-129

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

129. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உலூச் செய்யக் கண்டேன். அவர்கள் தமது தலைக்கு மஸஹ் செய்யும் போது முற்பகுதியிலும், பிற்பகுதியிலும், தமது நெற்றிப்பொட்டு, காதுகளிலும் ஒரு தடவையே மஸஹ் செய்தார்கள் என ருபைய்யி பின்த் முஅவ்வித் (ரலி) அறிவிக்கிறார்கள்

(குறிப்பு : திர்மிதீயிலும் இது இடம் பெற்றுள்ளது. இதிலும் குறை கூறப்பட்ட அப்துல்லாஹ் பின் முஹம்மத் உகைல் இடம் பெறுகிறார்.)


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ قَالَتْ: «فَمَسَحَ رَأْسَهُ وَمَسَحَ مَا أَقْبَلَ مِنْهُ وَمَا أَدْبَرَ، وَصُدْغَيْهِ وَأُذُنَيْهِ مَرَّةً وَاحِدَةً»


Abu-Dawood-128

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

128. என்னிடம் வந்திருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள். அப்போது தலையின் மேல் பாகம் முதல் கீழ்ப்பாகம் வரை தலை முழுவதையும் மஸஹ் செய்தார்கள். தலைமுடி அதன் அமைப்பை விட்டும் கலைந்து விடாத முறையில் மஸஹ் செய்தார்கள் என்று முஅவ்வித் பின் அஃப்ராஃ (ரலி) அவர்களின் மாமனார் ருபைய்யி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு : இதிலும் மேற்கூறப்பட்ட அப்துல்லாஹ் பின் உகைல் இடம் பெறுகிறார்.)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ عِنْدَهَا فَمَسَحَ الرَّأْسَ كُلَّهُ، مِنْ قَرْنِ الشَّعْرِ كُلِّ نَاحِيَةٍ، لِمُنْصَبِّ الشَّعْرِ، لَا يُحَرِّكُ الشَّعْرَ عَنْ هَيْئَتِهِ»


Abu-Dawood-126

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

126. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களிடம் (அடிக்கடி) வருபவர்களாக இருந்தார்கள். (ஒருநாள்) எங்களிடம் (வந்து) “எனக்கு ‘உளூ’ செய்ய தண்ணீர் ஊற்று” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ செய்ததை வர்ணித்தார்கள்.

(பின்னர்) உள்ளங்கைகளை மூன்று முறை கழுவினார்கள். மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். ஒரு முறை வாய்க் கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தி மூக்கை சிந்தி சுத்தம் செய்தார்கள். இரு கைகளையும் மும்மூன்று தடவை கழுவினார்கள்.

தலையை இரண்டு முறை தடவி மஸஹ் செய்தார்கள். (முதலில்) பின்னாலிருந்து முன்னோக்கியும் பின்பு முன்னாலிருந்து பின்னோக்கியும் தடவினார்கள். இரு காதுகளின் உட்பகுதியையும் வெளிப்பகுதியையும் தடவினார்கள். இரு கால்களையும் மும்மூன்று தடவை கழுவினார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

முஸத்தத் (ரஹ்) அவர்களின் கருத்தைதான் அறிவித்து இருக்கிறேன். (அவரின் வார்த்தைகளை முழுமையாக

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَأْتِينَا فَحَدَّثَتْنَا أَنَّهُ قَالَ: «اسْكُبِي لِي وَضُوءًا»، فَذَكَرَتْ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ فِيهِ: فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا، وَوَضَّأَ وَجْهَهُ ثَلَاثًا، وَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مَرَّةً، وَوَضَّأَ يَدَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّتَيْنِ بِمُؤَخَّرِ رَأْسِهِ، ثُمَّ بِمُقَدَّمِهِ وَبِأُذُنَيْهِ كِلْتَيْهِمَا ظُهُورِهِمَا وَبُطُونِهِمَا، وَوَضَّأَ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا


Next Page » « Previous Page