Author: Farook

Abu-Dawood-124

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

124. நபி (ஸல்) அவர்களை உலூச் செய்யக் கண்டது போன்று முஆவியா (ரலி) அவர்கள் மக்களுக்கு உலூச் செய்து காட்டினார்கள். அப்போது அவர்கள் தலைக்கு மஸஹ் செய்யும் கட்டத்தை அடைந்ததும் ஒரு சிரங்கை அளவு தண்ணீரை இடது கையால் அள்ளி வழிந்தோடும் அளவுக்கு (அல்லது வழிந்தோடத் துவங்கும் அளவுக்கு) நடுத்தலையில் விட்டு பின்னர் தமது தலையின் முன் புறத்திலிருந்து பின்புறம் வரையிலும், பின்றுத்திலிருந்து முன்புறம் வரைக்கும் மஸஹ் செய்தார்கள் என முகீரா பின் ஃபர்வா, யஸீத் பின் அபீமாலிக் (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர்.


أَنَّ مُعَاوِيَةَ، تَوَضَّأَ لِلنَّاسِ كَمَا «رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ، فَلَمَّا بَلَغَ رَأْسَهُ غَرَفَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَتَلَقَّاهَا بِشِمَالِهِ حَتَّى وَضَعَهَا عَلَى وَسَطِ رَأْسِهِ حَتَّى قَطَرَ الْمَاءُ، أَوْ كَادَ يَقْطُرُ، ثُمَّ مَسَحَ مِنْ مُقَدَّمِهِ إِلَى مُؤَخَّرِهِ، وَمِنْ مُؤَخَّرِهِ إِلَى مُقَدَّمِهِ»


Abu-Dawood-122

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

122. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்யக் கண்டேன். அவர்கள் தலைக்கு மஸஹ் செய்யும் கட்டத்தை அடைந்த போது தன் இரு முன்னங் கைகளையும் தமது முன்னந் தலையில் வைத்து அவற்றை பிடரி வரை கொண்டு சென்று பின்னர் ஆரம்பித்த இடத்திற்கே தம் கைகளைக் கொண்டு வந்தார்கள் என மிக்தாம் பின் மஃகீ கரிப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

மஹ்மூது மனகாலித் அவர்கள் தமக்கு முந்தைய அறிவிப்பாளராக வலீத் பின் முஸ்லிமைக் கூறாமல் அதற்கடுத்த அறிவிப்பாளர் ஹதீஸ் தமக்கு அறிவித்தாகக் குறிப்பிடுகிறார்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மது, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ، فَلَمَّا بَلَغَ مَسْحَ رَأْسِهِ، وَضَعَ كَفَّيْهِ عَلَى مُقَدَّمِ رَأْسِهِ، فَأَمَرَّهُمَا حَتَّى بَلَغَ الْقَفَا، ثُمَّ رَدَّهُمَا إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ»، قَالَ مَحْمُودٌ: قَالَ: أَخْبَرَنِي حَرِيزٌ


Abu-Dawood-121

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

121. அல்லாஹ்வின் திருதூதர் (ஸல்) அவர்களுக்கு உலூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரப்பட்டதும், அவர்கள் உலூச் செயயத் துவங்கி தமது முன்னங்கைகளை மூன்று முறையும், தமது முகத்தை மூன்று முறையும், முழங்கைகளை மூன்று முறைகளும் கழுவினார்கள். பின்பு மூன்று முறை வாய் கொப்பளித்து, நாசிக்கு தண்ணீர் செலுத்தி மூக்கை சுத்தம் செய்தார்கள். பிறகு தலைக்கு மஸஹ் செய்து இரு காதுகளின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் மஸஹ் செய்தார்கள் என மிக்தாம் பின் மஃதீகரிப் அல்கின்தீய்யி (ரலி) அறிவிக்கிறார்கள். 

(குறிப்பு: அஹ்மதிலும் இது இடம் பெற்றுள்ளது. இப்னுமாஜாவில் சுருக்கமாக இடம் பெற்றுள்ளது.)


«أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلَاثًا وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ ذِرَاعَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ ظَاهِرِهِمَا وَبَاطِنِهِمَا»


Abu-Dawood-120

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

120. அப்துல்லாஹ்பின் ஸைதுபின் ஆஸிம் அல்மாஸின் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உலூச் செய்யக் கண்டதாக அறிவிக்கும் போது, நபி (ஸல்) அவர்கள், (கையில் உள்ள ஈரத்தைக் கொண்டு தலைக்கு மஸஹ் செய்யாமல்) புதிததாக தண்ணீர் எடுத்து தலைக்கு மஸஹ் செய்ததாகவும், தமது இருகால் களையும் (அவற்றிலுள்ள அழுக்கு போய் விடும் அளவு) நன்கு சுத்தமாவது வரை கழுவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அறிவிப்பவர் : வாஸிஃ

(குறிப்பு: முஸ்லிம், தாரமி, திர்மிதீ ஆகியோரும் இந்த ஹதீஸை பதிவு செய்து உள்ளனர்.


يَذْكُرُ أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ وُضُوءَهُ، وَقَالَ: «وَمَسَحَ رَأْسَهُ بِمَاءٍ غَيْرِ فَضْلِ يَدَيْهِ، وَغَسَلَ رِجْلَيْهِ حَتَّى أَنْقَاهُمَا»


Abu-Dawood-119

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

119. மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. அதில் ஒரு கையளவு தண்ணீரில் வாய் கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்தி மூக்கையும் சுத்தம் செய்ததாகவும் அதை மும்முறை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

(குறிப்பு: 118, 119 ஆகிய இரண்டு ஹதீஸ்களும் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, தாரிமி ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.)


«فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدَةٍ» يَفْعَلُ ذَلِكَ، ثَلَاثًا، ثُمَّ ذَكَرَ نَحْوَهُ


Abu-Dawood-118

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

118. யஹ்யா அல்மாஸினி அவர்கள் தன் தந்தை அப்துல்லாஹ் பின் ஸைது பின் ஆஸிம் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி உலூ செய்தார்கள்? என்பதை எனக்கு செய்து காட்ட முடியுமா? என்று வினவினார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) அவர்கள் ஆம் என்று பதிலளித்து விட்டு தண்ணீர் கொண்டு வரச் செய்து அதை தமது இருகைகளிலும் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு மூன்று முறை வாய் கொப்பளித்து, மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்பு தனது இரு கைகளையும் முட்டுக்கைகள் வரை இரண்டிரண்டு முறை கழுவினார்கள். பிறகு தனது இரு கைகளாலும் தலையின் முன் பாகத்தில் துவங்கி பிடரி வரை கொண்டு சென்று ஆரம்பித்த இடத்திற்கே கைகளைத் திருப்பிக் கொண்டு வந்து மஸஹ் செய்தார்கள். பிறகு இருகால்களையும் கழுவினார்கள் என இப்னு யஹ்யா அறிவிக்கிறார்.

(குறிப்பு : இதே ஹதீஸ் நஸயீயிலும் இடம் பெற்றுள்ளது.)


هَلْ تَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ: نَعَمْ، «فَدَعَا بِوَضُوءٍ فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ، ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ»


Abu-Dawood-117

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

117. அலீ‏ ‏பின்‏ ‏அபூதாலிப்‏ (‏ரலி‏) ‏அவர்கள்‏ ‏என்னிடம்‏ ‏வந்து‏ ‏சிறுநீர்‏ ‏கழித்து‏ ‏விட்டு‏ ‏உலூச்‏ ‏செய்ய‏ ‏தண்ணீர்‏ ‏கொண்டு‏ ‏வரும்படிச்‏ ‏சொன்னார்கள்‏. ‏நாங்கள்‏ ‏தண்ணீர்‏ ‏நிரம்பிய‏ ‏பாத்திரத்தைக்‏ ‏கொண்டு‏ ‏வந்து‏ ‏அவர்கள்‏ ‏முன்னால்‏ ‏வைத்தோம்‏. ‏அப்போது‏ ‏அவர்கள், இப்னு‏ ‏அப்பாஸே‏! ‏அல்லாஹ்வின்‏ ‏தூதர்‏(‏ஸல்‏) ‏அவர்கள்‏ ‏எப்படி‏ ‏உலூச்‏ ‏செய்தார்கள்‏ ‏என்று‏ ‏உமக்கு‏ ‏நான்‏ ‏செய்து‏ ‏காண்பிக்கவா? என்று‏ ‏கேட்க‏ ‏நான்‏ ‏ஆம்‏ ‏என்றேன்‏. ‏அப்போது‏ ‏அவர்கள்‏ ‏பாத்திரத்தை‏ ‏தனது‏ ‏கையில்‏ ‏சாய்த்து‏ ‏அதைக்‏ ‏கழுவினார்கள்‏. ‏பிறகு‏ (‏கழுவிய‏) ‏தமது‏ ‏வலது‏ ‏கையைப்‏ ‏பாத்திரத்தில்‏ ‏விட்டு‏ ‏அதைக்‏ ‏கொண்டு‏ ‏மற்றொரு‏ ‏கையில்‏ ‏நீர்‏ ‏ஊற்றி‏ ‏பின்‏ ‏தமது‏ ‏இரு‏ ‏முன்னங்‏ ‏கைகளையும்‏ ‏கழுவினார்கள்‏. ‏பின்னர்‏ ‏வாய்‏ ‏கொப்பளித்து‏ ‏மூக்கையும்‏ ‏சுத்தப்‏ ‏படுத்தினார்கள்‏. ‏பின்‏ ‏இரு‏ ‏கைகளையும்‏ ‏இணைத்து‏ ‏பாத்திரத்தில்‏ ‏செலுத்தி‏ ‏அவ்விரு‏ ‏கைகளினாலும்‏ ‏நீர்‏ ‏அள்ளி‏ ‏அதைக்‏ ‏தமது‏ ‏முகத்தில்‏ ‏அடித்து‏ ‏தனது‏ ‏இரு‏ ‏பெருவிரல்களையும்‏ ‏தனது‏ ‏இரு‏ ‏காதுகளின்‏ ‏முற்பகுதியில்‏ ‏திணித்தார்கள்‏. ‏இது‏ ‏போன்று‏ ‏இரண்டாவது‏ ‏முறையும்,

دَخَلَ عَلَيَّ عَلِيٌّ يَعْنِي ابْنَ أَبِي طَالِبٍ، وَقَدْ أَهْرَاقَ الْمَاءَ فَدَعَا بِوَضُوءٍ، فَأَتَيْنَاهُ بِتَوْرٍ فِيهِ مَاءٌ، حَتَّى وَضَعْنَاهُ بَيْنَ يَدَيْهِ، فَقَالَ: يَا ابْنَ عَبَّاسٍ، أَلَا أُرِيكَ كَيْفَ كَانَ يَتَوَضَّأُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْتُ: بَلَى، قَالَ: «فَأَصْغَى الْإِنَاءَ عَلَى يَدِهِ فَغَسَلَهَا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ الْيُمْنَى فَأَفْرَغَ بِهَا عَلَى الْأُخْرَى، ثُمَّ غَسَلَ كَفَّيْهِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ، ثُمَّ أَدْخَلَ يَدَيْهِ فِي الْإِنَاءِ جَمِيعًا، فَأَخَذَ بِهِمَا حَفْنَةً مِنْ مَاءٍ فَضَرَبَ بِهَا عَلَى وَجْهِهِ، ثُمَّ أَلْقَمَ إِبْهَامَيْهِ مَا أَقْبَلَ مِنْ أُذُنَيْهِ، ثُمَّ الثَّانِيَةَ، ثُمَّ الثَّالِثَةَ مِثْلَ ذَلِكَ، ثُمَّ أَخَذَ بِكَفِّهِ الْيُمْنَى قَبْضَةً مِنْ مَاءٍ، فَصَبَّهَا عَلَى نَاصِيَتِهِ فَتَرَكَهَا تَسْتَنُّ عَلَى وَجْهِهِ، ثُمَّ غَسَلَ ذِرَاعَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ مَسَحَ رَأْسَهُ وَظُهُورَ أُذُنَيْهِ، ثُمَّ أَدْخَلَ يَدَيْهِ جَمِيعًا فَأَخَذَ حَفْنَةً مِنْ مَاءٍ فَضَرَبَ بِهَا عَلَى رِجْلِهِ، وَفِيهَا النَّعْلُ فَفَتَلَهَا بِهَا، ثُمَّ الْأُخْرَى مِثْلَ ذَلِكَ» قَالَ: قُلْتُ: وَفِي النَّعْلَيْنِ؟ قَالَ: وَفِي النَّعْلَيْنِ، قَالَ: قُلْتُ: وَفِي النَّعْلَيْنِ؟ قَالَ: وَفِي النَّعْلَيْنِ، قَالَ: قُلْتُ: وَفِي النَّعْلَيْنِ؟ قَالَ: وَفِي النَّعْلَيْنِ،


Abu-Dawood-116

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

116. நான்‏ ‏அலீ‏ (‏ரலி‏) ‏அவர்களை‏ ‏உலூச்‏ ‏செய்யக்‏ ‏கண்டேன்‏ ‏என்று‏ ‏அபூஹய்யா‏ ‏அவர்கள்‏ ‏அறிவிக்கும்‏ ‏போது‏ ‏அவர்கள்‏ ‏எல்லா‏ ‏உறுப்புக்களையும்‏ ‏மும்முறை‏ ‏கழுவி‏ ‏உலூச்‏ ‏செய்தார்கள்‏ ‏என்று‏ ‏குறிப்பிடுகிறார்கள்‏. ‏பின்னர்‏ ‏அவர்கள்‏ ‏தலையை‏ ‏மஸஹ்‏ ‏செய்தார்கள்‏. ‏பின்னர்‏ ‏தம்‏ ‏இரு‏ ‏கால்களை‏ ‏கரண்டைக்‏ ‏கால்வரை‏ ‏கழுவினார்கள்‏. ‏பின்னர், நான்‏ ‏உங்களுக்கு‏ ‏அல்லாஹ்வின்‏ ‏தூதர்‏ (‏ஸல்‏) ‏அவர்களின்‏ ‏செய்யும்‏ ‏முறையை‏ ‏காண்பிக்க‏ ‏விரும்பினேன்‏ ‏என்றும்‏ ‏சொன்னார்கள்‏.‏


رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ «تَوَضَّأَ فَذَكَرَ وُضُوءَهُ كُلَّهُ ثَلَاثًا ثَلَاثًا»، قَالَ: «ثُمَّ مَسَحَ رَأْسَهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ»، ثُمَّ قَالَ: «إِنَّمَا أَحْبَبْتُ أَنْ أُرِيَكُمْ طُهُورَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Abu-Dawood-115

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

115. அலீ‏ (‏ரலி‏) ‏அவர்களை‏ ‏உலூச்‏ ‏செய்யக்‏ ‏கண்டேன்‏. ‏அவர்கள்‏ ‏உலூச்‏ ‏செய்யும்‏ ‏போது‏ ‏முகத்தை‏ ‏மூன்று‏ ‏முறை‏ ‏கழுவினார்கள்‏. ‏தலையை‏ ‏ஒரு‏ ‏முறை‏ ‏மஸஹ்‏ ‏செய்தார்கள்‏. ‏பின்னர்‏ ‏இப்படித்‏ ‏தான்‏ ‏ரஸுல்‏ (‏ஸல்‏) ‏அவர்கள்‏ ‏உலூச்‏ ‏செய்தார்கள்‏ ‏எனவும்‏ ‏அப்துர்‏ ‏ரஹ்மான்‏ ‏பின்‏ ‏அபூலைலா‏ (‏ரலி‏) ‏அறிவிக்கிறார்கள்‏.‏


رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ «تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَغَسَلَ ذِرَاعَيْهِ ثَلَاثًا، وَمَسَحَ بِرَأْسِهِ وَاحِدَةً»، ثُمَّ قَالَ: «هَكَذَا تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Next Page » « Previous Page