Author: Farook

Abu-Dawood-28

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

28. நபி (ஸல்) அவர்களிடம், அபூஹுரைரா (ரலி) அவர்கள் தோழமை கொண்டது போன்று தோழமை கொண்ட நபித்தோழர் ஒருவரை நான் சந்தித்தேன்.

“நாள்தோறும் தலைவாருவதையும், குளியலறையில் சிறுநீர் கழிப்பதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்” என்று அவர் கூறினார்.

அறிவிப்பவர்: ஹுமைத் அல்ஹிம்யரீ (ரஹ்)


لَقِيتُ رَجُلًا صَحِبَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا صَحِبَهُ أَبُو هُرَيْرَةَ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَمْتَشِطَ أَحَدُنَا كُلَّ يَوْمٍ، أَوْ يَبُولَ فِي مُغْتَسَلِهِ»


Abu-Dawood-27

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 15

குளியலறையில் சிறுநீர் கழித்தல்.

27. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாரும் கண்டிப்பாக குளியலறையில் சிறுநீர் கழித்து விட்டு பிறகு அங்கேயே குளிக்க வேண்டாம்.

-பிறகு அதில் உளூச் செய்யவும் வேண்டாம்-ஏனெனில் அதில் தான் பெருமளவு மனக்குழப்பம் உள்ளது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஃகப்பல் (ரலி)


அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹஸன் பின் அலீ அவர்கள், குளியலறையில் சிறுநீர் கழித்து விட்டு பிறகு அங்கேயே குளிக்க வேண்டாம்” என்று அறிவித்துள்ளார்.

அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அஹ்மத் இமாம் அவர்கள், குளியலறையில் சிறுநீர் கழித்து விட்டு பிறகு அங்கேயே உளூச் செய்ய வேண்டாம்” என்று அறிவித்துள்ளார்.


لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي مُسْتَحَمِّهِ ثُمَّ يَغْتَسِلُ فِيهِ

قَالَ أَحْمَدُ: ثُمَّ يَتَوَضَّأُ فِيهِ فَإِنَّ عَامَّةَ الْوَسْوَاسِ مِنْهُ


Abu-Dawood-26

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

26. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சாபத்திற்குரிய மூன்று செயல்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவை: நீர்த்துறைகள், நடைபாதையின் நடுவில், நிழல் தரும் இடங்கள் ஆகியவற்றில் மலம்-சிறுநீர் கழிப்பதாகும்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


اتَّقُوا الْمَلَاعِنَ الثَّلَاثَةَ: الْبَرَازَ فِي الْمَوَارِدِ، وَقَارِعَةِ الطَّرِيقِ، وَالظِّلِّ


Abu-Dawood-25

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 14

நபி (ஸல்) அவர்கள், சிறுநீர் கழிக்கத் தடை செய்த இடங்கள்.

25. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாபத்திற்குரிய இரண்டு செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அப்போது நபிதோழர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! சாபத்திற்குரிய அவ்விரண்டு செயல்கள் யாவை? என்று கேட்டனர்.

மக்கள் (நடக்கும்) பாதையில் அல்லது அவர்கள் நிழல் பெறும் இடங்களில் ஒருவர் மலம், ஜலம் கழிப்பதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«اتَّقُوا اللَّاعِنَيْنِ»، قَالُوا: وَمَا اللَّاعِنَانِ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ ظِلِّهِمْ»


Abu-Dawood-24

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 13

இரவில் பாத்திரத்தில் சிறுநீர் கழித்து அதை தன் அருகில் வைத்துக் கொள்பவர் (காலையில் வெளியில் கொட்டி விடவேண்டும்)

24. நபி (ஸல்) அவர்களின் கட்டிலுக்கு அடியில் மரப்பாத்திரம் ஒன்று (வைக்கப்பட்டு) இருக்கும். அதில் அவர்கள், இரவில் சிறுநீர் கழிப்பார்கள்.

அறிவிப்பவர்: உமைமா பின்த் ருகையா (ரலி)


«كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدَحٌ مِنْ عِيدَانٍ تَحْتَ سَرِيرِهِ، يَبُولُ فِيهِ بِاللَّيْلِ»


Abu-Dawood-23

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 12

நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது.

23. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தாரின் குப்பை கொட்டும் இடத்திற்கு வந்து நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள். பின் தண்ணீர் கேட்டு வாங்கி (உளூ செய்யும் போது) காலுறையின் மீது (மஸஹ்) ஈரக்கையால் தடவினார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

முஸத்தத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் பின்வருமாறு வந்துள்ளது:

(நபியவர்கள் தண்ணீர் கேட்டபோது அவர்களுக்கு அருகில் தண்ணீரை வைத்துவிட்டு அங்கிருந்து) நான் நகர்ந்து செல்ல நாடியபோது (நபியவர்களுக்குப் பின்னால் மறைப்பு தேவைப்பட்டதால்) தமக்குப் பக்கத்தில் நிற்க வேண்டும் என்பதற்காக) நபியவர்கள், என்னை அழைத்தார்கள். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களின் குதிங்காலுக்கருகில் (மறைப்பாக) நின்றுக் கொண்டேன் என ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்.


أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبَاطَةَ قَوْمٍ «فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَسَحَ عَلَى خُفَّيْهِ»


Abu-Dawood-22

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22. அப்துர்ரஹ்மான் பின் ஹஸனா (ரலி) கூறியதாவது:

நானும், அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களைப் பார்க்கச் சென்றோம். நபியவர்கள் தோலினால் செய்யப்பட்ட கேடயமொன்றைத் தம்மோடு எடுத்துக்கொண்டு வெளியில் சென்றார்கள்.

பின்னர் (மறைக்க வேண்டிய உறுப்புகளை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக) அதனை மறைப்பாகப் பயன்படுத்திச் சிறுநீர் கழித்தார்கள். (இதனைக் கண்ணுற்ற) நாங்கள், “பெண்கள் சிறுநீர் கழிப்பது போன்று இவர்கள் (நபியவர்கள்) சிறுநீர் கழிப்பதைப் பாருங்களேன்” என்று பேசிக் கொண்டோம்.

இதனைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“பனூ இஸ்ரவேலைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்பட்ட கதியை நீங்கள் அறியவில்லையா? அவர்கள் உடலில் சிறுநீர் பட்டுவிட்டால் அந்த இடத்தை வெட்டி எடுத்துவிட வேண்டும் (தண்ணீரால் கழுவி விடுவதால் அசுத்தம் நீங்காது)” என்று கட்டளையிடப்பட்டிருந்தனர்.

பனூஇஸ்ரவேலர்கள் இந்தச் சட்டத்தைச் செயல்படுத்தும் போது அவர்களில் ஒருவர் இதைத் தடுத்தார். (அதனால்) அவர் இறந்த பின் மண்ணறையில் வேதனை செய்யப்பட்டார்”.

انْطَلَقْتُ أَنَا وَعَمْرُو بْنُ الْعَاصِ، إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ وَمَعَهُ دَرَقَةٌ ثُمَّ اسْتَتَرَ بِهَا، ثُمَّ بَالَ، فَقُلْنَا: انْظُرُوا إِلَيْهِ يَبُولُ كَمَا تَبُولُ الْمَرْأَةُ، فَسَمِعَ ذَلِكَ، فَقَالَ: «أَلَمْ تَعْلَمُوا مَا لَقِيَ صَاحِبُ بَنِي إِسْرَائِيلَ، كَانُوا إِذَا أَصَابَهُمُ الْبَوْلُ قَطَعُوا مَا أَصَابَهُ الْبَوْلُ مِنْهُمْ، فَنَهَاهُمْ فَعُذِّبَ فِي قَبْرِهِ»


Abu-Dawood-21

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21. ஹதீஸ் எண்-20 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

இதில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அறிவிக்கும் உஸ்மான் பின் அபூஷைபா அவர்களின் அறிவிப்பில் “சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக் கொள்ளமாட்டார்” என வந்துள்ளது.

அபூமுஆவியா அவர்களின் அறிவிப்பில், “நன்றாக சுத்தம் செய்யமாட்டார்” என வந்துள்ளது.


قَالَ «كَانَ لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ» وَقَالَ أَبُو مُعَاوِيَةَ: «يَسْتَنْزِهُ»


Abu-Dawood-20

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 11

சிறுநீர் (உடலிலும் ஆடையிலும்) பட்டுவிடாமல் கவனமாக இருப்பது.

20. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரண்டு மண்ணறைகளைக் கடந்து சென்றார்கள். (மண்ணறைவாசிகள்) இருவரும் வேதனை
செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். (அவர்கள்) பெரிய குற்றத்திற்காக வேதனை செய்யப்படவில்லை என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், அவ்விருவரில் ஒருவர், சிறுநீர் (கழித்துவிட்டு, சிறுநீர் தன் உடல்மீது அல்லது தன் ஆடையில்) பட்டுவிடாமல் இருக்கக் கவனம் செலுத்தவில்லை.
மற்றொருவர், கோள் (புறம்) சொல்லித் திரிபவர் என்று கூறினார்கள்.

பின்னர் பேரீச்ச மரத்தின் பசுமையான கிளையொன்றைக் கொண்டுவரும்படிக் கூறினார்கள். (கொண்டுவந்து கொடுக்கப்பட்டது). அதை இரண்டாகப் பிளந்து ஒரு மண்ணறை மீது ஒன்றையும், மற்றொரு மண்ணறை மீது இன்னொன்றையும் நட்டு வைத்து, “இந்தக் கிளைகள் காயாமல் இருக்கும் வரை இவ்விருவருக்கும் வேதனை குறைக்கப்படலாம்” என்று கூறினார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(எனது ஆசிரியர்) ஹன்னாத்

مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرَيْنِ، فَقَالَ: ” إِنَّهُمَا يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا هَذَا فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنَ الْبَوْلِ، وَأَمَّا هَذَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ، ثُمَّ دَعَا بِعَسِيبٍ رَطْبٍ فَشَقَّهُ بِاثْنَيْنِ، ثُمَّ غَرَسَ عَلَى هَذَا وَاحِدًا، وَعَلَى هَذَا وَاحِدًا، وَقَالَ: لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا “

قَالَ هَنَّادٌ: يَسْتَتِرُ مَكَانَ يَسْتَنْزِهُ


Abu-Dawood-19

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 10

உயர்ந்தோன் அல்லாஹ்வின் பெயர் பொறிக்கப்பட்ட மோதிரம் அணிந்து கழிவறைக்குச் செல்வது.

19. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், கழிவறையில் நுழையும்முன்
(அல்லாஹ்வின் பெயர்பொறிக்கப்பட்டிருந்த)
மோதிரத்தைக் கழற்றிவிடுவார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்த நபிமொழி ‘முன்கர்’ (நிராகரிக்கப்பட்டது) என்ற வகையைச் சார்ந்தது.

இந்த நபிமொழி இப்னு ஜுரைஜ் —> ஸியாத் பின் ஸஃத் —> ஸுஹ்ரீ —>  அனஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில், “நபி (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். பின்பு அவர்கள் அதை(க் கழற்றி) எறிந்து விட்டார்கள்” என்றே (மற்றவர்களால்) அறிவிக்கப்படுகிறது.

“இதைக் கழிவறைக்குச் செல்லும்போது கழற்றிவைத்து விடுவார்கள்” என்று ஹம்மாம் பின் யஹ்யா அவர்கள் மட்டுமே, (இவ்வாறு) இப்னு ஜுரைஜிடமிருந்து தவறாக அறிவித்துள்ளார்.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ وَضَعَ خَاتَمَهُ»


Next Page » « Previous Page