Author: Farook

muwatta-malik-460

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

460. ”இங்கே என் கிப்லாவை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களின் பக்தியோ, உங்களின் ருகூஉ களோ எனக்கு மறைந்து விடவில்லை. நிச்சயமாக நான் என் முதுகுக்குப் பின்னேயும் உங்களை நான் அறிவேன்”” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«أَتَرَوْنَ قِبْلَتِي هَاهُنَا؟ فَوَاللَّهِ مَا يَخْفَى عَلَيَّ خُشُوعُكُمْ وَلَا رُكُوعُكُمْ، إِنِّي لَأَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي»


muwatta-malik-459

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 108

தொழுகையின் இதர சட்டங்கள்

459. நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்தும், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்தும், மஹ்ரிபுக்குப் பின் தன் வீட்டில் இரண்டு ரக்அத்தும், இஷாத் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்தும் தொழுவார்கள். ஜும்ஆவிற்குப் பின் தொழ மாட்டார்கள். ஆனால் (வீட்டிற்கு) திரும்பியதும் இரண்டு ரக்அத் தொழுவார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ، وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَبَعْدَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَبَعْدَ صَلَاةِ الْعِشَاءِ رَكْعَتَيْنِ، وَكَانَ لَا يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ، فَيَرْكَعَ رَكْعَتَيْنِ»


muwatta-malik-458

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

458. நபி(ஸல்) அவர்களின் கப்ரு அருகே அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களைக் கண்டேன். அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கும், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோருக்கும் துஆச் செய்தார்கள் என அப்துல்லா இப்னு தீனார் கூறுகின்றார்கள்.


رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «يَقِفُ عَلَى قَبْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَى أَبِي بَكْرٍ وَعُمَرَ»


muwatta-malik-455

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

455. (ஸஃப்பில் சேர்ந்து கொள்வதற்காக ருகூஉ செய்தவாறே) குனிந்தவாறே அப்துல்லா இப்னு மஸ்ஊது(ரலி) நடந்து செல்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்தாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ كَانَ «يَدِبُّ رَاكِعًا»


muwatta-malik-454

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 106

இமாம் ருகூஉ வில் இருக்கும் போது வந்தவர் செய்ய வேண்டியது

454. ஸைது இப்னு ஸாபித்(ரலி) அர்கள் பள்ளிக்கு வந்தார்கள். அது சமயம் ருகூஉ வில் மக்களைக் கண்டதும், உடனே ருகூஉ செய்தார்கள். குனிந்தவாறே நடந்து சென்று ஸஃப்பில் இணைந்து கொண்டார்கள் என அபூ உமாமா இப்னு ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் கூறுகின்றார்கள்.


دَخَلَ زَيْدُ بْنُ ثَابِتٍ الْمَسْجِدَ، ” فَوَجَدَ النَّاسَ رُكُوعًا فَرَكَعَ، ثُمَّ دَبَّ حَتَّى وَصَلَ الصَّفَّ


muwatta-malik-453

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

453. நான் தொழ வைத்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் இருந்ததை நான் அறியவில்லை. பின்பு (தெரிந்ததும்) திரும்பினேன். என்னை அவர்கள் (திரும்பாதிருக்கும்படி) சுரண்டினார்கள் என அபூ ஜஹ்ஃபர் அல்காரி கூறுகின்றார்கள்.


«كُنْتُ أُصَلِّي وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَرَائِي. وَلَا أَشْعُرُ بِهِ، فَالْتَفَتُّ فَغَمَزَنِي»


muwatta-malik-452

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

452. இப்னு உமர்(ரலி) அவர்கள் த ன் தொழுகையில் திரும்பிட மாட்டார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ ابْنَ عُمَرَ «لَمْ يَكُنْ يَلْتَفِتُ فِي صَلَاتِهِ»


muwatta-malik-451

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 105

தொழுகையில் அவசியம் ஏற்பட்டால் திரும்புவது, கை தட்டுவது

451. நபி (ஸல்) அவர்கள் அம்ரு இப்னு அவ்ஃபு (ரலி) அவர்களின் குடும்பத்தாரிடையே சமாதானப்படுத்துவதற்காக அவர்களிடம் சென்று விட்டார்கள். அதுசமயம் தொழுகை நேரம் வந்தது. அபூபக்கர் (ரலி) அவர்களிடம் முஅத்தின் வந்து, நான் இகாமத் கூறுகிறேன். மக்களுக்கு தொழ வைக்கின்றீர்களா? எனக் கேட்டார். சரி என்று கூறிய அபூபக்கர் (ரலி) தொழ வைத்தார்கள். மக்கள் தொழுகையில் இருக்கும் போது நபி(ஸல்) அவா்கள் வந்தார்கள். ஸஃப்பில் (வாரிசையில்) நிற்பதற்காக ஊடுறுவினார்கள். (நபி (ஸல்) அவர்களின் வருகையை அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு உணர்த்த) மக்கள் கையொலி எழுப்பினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் தொழுகையில் இருந்து திரும்பிப் பார்க்காதவர்களாக இருந்தார்கள். மக்களின் கரவொலி அதிகமானதுமே அபூபக்கர் (ரலி) திரும்பி, நபி (ஸல்) அவர்களைக் கண்டார்கள். ”நீர் உன் இடத்தில் நிற்பீராக”” என அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சமிக்ஞை செய்தார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் கைகளை உயர்த்தி, நபி (ஸல்) அவர்கள் தன்னை (தொழ வைக்க) கட்டளையிட்டதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பின்பு பின்வாங்கி வந்து (ஸஃப்பில்) சரிசமமாக நின்று கொண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் முன்னோக்கிப் போய் தொழ வைத்தார்கள்.

பின்பு தொழுது

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ لِيُصْلِحَ بَيْنَهُمْ. وَحَانَتِ الصَّلَاةُ. فَجَاءَ الْمُؤَذِّنُ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، فَقَالَ: أَتُصَلِّي لِلنَّاسِ فَأُقِيمَ؟ قَالَ: نَعَمْ. فَصَلَّى أَبُو بَكْرٍ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسُ فِي الصَّلَاةِ. فَتَخَلَّصَ حَتَّى وَقَفَ فِي الصَّفِّ. فَصَفَّقَ النَّاسُ. وَكَانَ أَبُو بَكْرٍ لَا يَلْتَفِتُ فِي صَلَاتِهِ. فَلَمَّا أَكْثَرَ النَّاسُ مِنَ التَّصْفِيقِ، الْتَفَتَ أَبُو بَكْرٍ، فَرَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِ امْكُثْ مَكَانَكَ». فَرَفَعَ أَبُو بَكْرٍ يَدَيْهِ، فَحَمِدَ اللَّهَ عَلَى مَا أَمَرَهُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ، ثُمَّ اسْتَأْخَرَ حَتَّى اسْتَوَى فِي الصَّفِّ. وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى، ثُمَّ انْصَرَفَ. فَقَالَ: «يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ أَنْ تَثْبُتَ إِذْ أَمَرْتُكَ»، فَقَالَ أَبُو بَكْرٍ: مَا كَانَ لِابْنِ أَبِي قُحَافَةَ، أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمْ مِنَ التَّصْفِيحِ؟ مَنْ نَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ فَلْيُسَبِّحْ. فَإِنَّهُ إِذَا سَبَّحَ الْتُفِتَ إِلَيْهِ وَإِنَّمَا التَّصْفِيحُ لِلنِّسَاءِ»


muwatta-malik-450

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

450. (ஸஜ்தாவின் போது) நெற்றியை பூமியில் வைத்தால் அதை வைக்கும் இடத்தில் தன் உள்ளங்கைகளை வைக்கட்டும். பின்பு நெற்றியை உயர்த்தினால் கைகளையும் உயர்த்தட்டும். ஏனென்றால் முகம் ஸஜ்தா செய்வத போன்றே இரு கைகளும் ஸஜ்தா செய்கின்றன என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.


«مَنْ وَضَعَ جَبْهَتَهُ بِالْأَرْضِ، فَلْيَضَعْ كَفَّيْهِ عَلَى الَّذِي يَضَعُ عَلَيْهِ جَبْهَتَهُ، ثُمَّ إِذَا رَفَعَ، فَلْيَرْفَعْهُمَا. فَإِنَّ الْيَدَيْنِ تَسْجُدَانِ كَمَا يَسْجُدُ الْوَجْهُ»


muwatta-malik-449

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 104

ஸஜ்தாவில் முகத்தை வைக்கும் இடத்தில் கைகளை வைத்தல்

449. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ஸஜ்தா செய்தால் தன் முகத்தை எதன் மீது வைக்கின்றார்களோ அதன் மீது உள்ளங்கைகளை வைப்பார்கள். கடும் குளிர் காலத்தில் மணல் பகுதியில் (தன் உள்ளங்கைகளை) வைப்பதற்காக ”பர்னஸ்”” என்ற ஆடையில் இருந்து அவ்விரண்டையும் வெளியாக்குவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا سَجَدَ وَضَعَ كَفَّيْهِ عَلَى الَّذِي يَضَعُ عَلَيْهِ جَبْهَتَهُ، قَالَ نَافِعٌ، وَلَقَدْ رَأَيْتُهُ فِي يَوْمٍ شَدِيدِ الْبَرْدِ وَإِنَّهُ «لَيُخْرِجُ كَفَّيْهِ مِنْ تَحْتِ بُرْنُسٍ لَهُ حَتَّى يَضَعَهُمَا عَلَى الْحَصْبَاءِ»


Next Page » « Previous Page