Author: Farook

muwatta-malik-448

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

448. பள்ளியில் நுழைந்தால் தொழும் முன் உட்காருவதை உமது தோழாரிடம் நான் பார்க்கின்றேன் அல்லவா? என்று அபூ ஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவர்கள் என் தோழர் என்று குறிப்பிட்டது, உமர் இப்னு உபைதுல்லா அவர்களைத் தான். அவர்கள் தான் இவ்வாறு ”பள்ளியில் நுழைந்து தொழும் முன்னால் உட்கார்வதை குறை கண்டார்”” என அபுந் நள்ர் (உமர் இப்னு உபைதுல்லாஹ் அவர்களின் அடிமை) கூறுகின்றார்கள்.

‘இது நல்ல நடைமுறை. ஆனால் கட்டாயமல்ல என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّهُ قَالَ لَهُ: ” لَمْ أَرَ صَاحِبَكَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ يَجْلِسُ قَبْلَ أَنْ يَرْكَعَ؟ قَالَ أَبُو النَّضْرِ يَعْنِي بِذَلِكَ عُمَرَ بْنَ عُبَيْدِ اللَّهِ، وَيَعِيبُ ذَلِكَ عَلَيْهِ، أَنْ يَجْلِسَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ قَبْلَ أَنْ يَرْكَعَ

قَالَ يَحْيَى: قَالَ مَالِكٌ: «وَذَلِكَ حَسَنٌ، وَلَيْسَ بِوَاجِبٍ»


muwatta-malik-447

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

447. உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்தால் உட்காரும் முன் இரண்டு ரக்அத் தொழட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூகதாதா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, அஹ்மத், திர்மிதி யில் இடம் பெற்றுள்ளது).


«إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ، فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ، قَبْلَ أَنْ يَجْلِسَ»


muwatta-malik-446

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

446. பாங்கு கூறிய பின் பள்ளியில் இருந்து மீண்டும் வர விரும்புபவனைத் தவிர, முனாபிக்கைத் தவிர வேறு யாரும் வெளியேற வேண்டாம் என சொல்லப்பட வேண்டும் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


يُقَالُ ” لَا يَخْرُجُ أَحَدٌ مِنَ الْمَسْجِدِ بَعْدَ النِّدَاءِ، إِلَّا أَحَدٌ يُرِيدُ الرُّجُوعَ إِلَيْهِ، إِلَّا مُنَافِقٌ


muwatta-malik-445

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

445. அல்லாஹ் தவறுகளை மன்னித்து, அந்தஸ்தை உயர்த்துகின்ற காரியங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (அவைகள்) கஷ்டமான நேரத்தில் முழுமையாக ஒளுச் செய்வது, பள்ளியின் பக்கம் அதிமாக நடந்து வருவது, தொழுகைக்குப் பின் மறுதொழுகையை எதிர்பார்ப்பது என்று கூறி விட்டு,இது தான் மாபெரும் போராட்டம் என மும்முறை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


«أَلَا أُخْبِرُكُمْ بِمَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا، وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ؟ إِسْبَاغُ الْوُضُوءِ عِنْدَ الْمَكَارِهِ، وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ، وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ. فَذَلِكُمُ الرِّبَاطُ، فَذَلِكُمُ الرِّبَاطُ، فَذَلِكُمُ الرِّبَاطُ»


muwatta-malik-444

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

444. உங்களில் ஒருவர் தொழுது, பின்பு தொழுத இடத்திலேயே அமர்ந்திருந்தால், ” இறைவா! இவரை மன்னிப்பாயாக! அவருக்கு அருள்புரிவாயாக”” என்று வானவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.அவர் தன் தொழுமிடத்தை விட்டும் எழுந்து, அடுத்த தொழுகையை எதிர்பார்த்தவராக பள்ளி யில் உட்கார்ந்திருந்தால், அவர்(அடுத்த தொழுகையை) தொழும் வரை தொழுகையில் இருப்பவர் போலாவார் என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாக, நுஐம் இப்னு அப்தில்லாஹ் அல் முஜ்மில் கூறுகின்றார்கள்.


إِذَا صَلَّى أَحَدُكُمْ، ثُمَّ جَلَسَ فِي مُصَلَّاهُ، لَمْ تَزَلِ الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَيْهِ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ. فَإِنْ قَامَ مِنْ مُصَلَّاهُ، فَجَلَسَ فِي الْمَسْجِدِ يَنْتَظِرُ الصَّلَاةَ، لَمْ يَزَلْ فِي صَلَاةٍ حَتَّى يُصَلِّيَ


muwatta-malik-443

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

443. நல்லதைக் கற்கவேண்டும் அல்லது கற்றுக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே ஒருவர், காலையில் அல்லது மாலையில் பள்ளிவாசலுக்கு வந்து, பிறகு தன் வீட்டுக்குச் சென்றால், அவர் (இறைவழியில் போரிட்டு வெற்றி பெற்று) போர்ச்செல்வங்களுடன் திரும்பி வரும் போராளியைப் போன்றவர் ஆவார் என்று அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஸுமைய் (ரஹ்)


«مَنْ غَدَا أَوْ رَاحَ إِلَى الْمَسْجِدِ، لَا يُرِيدُ غَيْرَهُ، لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ لِيُعَلِّمَهُ، ثُمَّ رَجَعَ إِلَى بَيْتِهِ، كَانَ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، رَجَعَ غَانِمًا»


muwatta-malik-442

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

442. தொழுகை ஒருவரை (பள்ளியிலேயே) தடுத்திருக்கும் காலமெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார். (அதாவது) அவர் தன் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்வதை விட்டும் தொழுகையே தவிர வேறெதுவும் அவரைத் தடுக்கவில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிமிலும் உள்ளது. இதன் கருத்து அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யிலும் இடம் பெற்றுள்ளது).


«لَا يَزَالُ أَحَدُكُمْ فِي صَلَاةٍ مَا كَانَتِ الصَّلَاةُ تَحْبِسُهُ، لَا يَمْنَعُهُ أَنْ يَنْقَلِبَ إِلَى أَهْلِهِ إِلَّا الصَّلَاةُ»


muwatta-malik-441

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 103

தொழுகையை எதிர்பார்த்திருத்தல், அதற்காக நடந்து செல்லுதல்

441. எங்கே தொழுதாரோ அதே தொழுகை இடத்தில் ஒளு முறியாத நிலையில் அடுத்த தொழுகையை எதிர்பார்த்து இருப்பவருக்காக, ”இறைவா! அவரை மன்னிப்பாயாக! அவருக்கு அருள் புரிவாயாக!”” என மலக்குகள் துஆச் செய்வார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி யில் இடம் பெற்றுள்ளது).

”ஒளு முறியாத வரை என்ற வார்த்தைக்கு, ஒளுவை முறிக்கும் காரியங்கள் தான்”” என்றே கருதுகிறேன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


«الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِثْ. اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ»

قَالَ مَالِكٌ: ” لَا أَرَى قَوْلَهُ: مَا لَمْ يُحْدِثْ، إِلَّا الْإِحْدَاثَ الَّذِي يَنْقُضُ الْوُضُوءَ


muwatta-malik-440

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

440. தன் தொடைகளுக்கு மத்தியில் அடக்கியவராக உங்களில் ஒருவர்தொழ வேண்டாம் என உமர்(ரலி) அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு அஸ்லம் கூறுகின்றார்கள்.


لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ وَهُوَ ضَامٌّ بَيْنَ وَرِكَيْهِ


muwatta-malik-439

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 102

தேவைகளை நாடிய நிலையில் ஒரு மனிதன் தொழாதிருத்தல்.

439. அப்துல்லா இப்னு அர்கம்(ரலி) அவர்கள் தன் தோழர்களுக்கு இமாமத் செய்பவர்களாக இருந்தனர். ஒரு நாள் தொழுகை நேரம் வந்ததம், தன்னுடைய (மலம் ஜலம் கழிக்கும்) தேவைக்காகச் சென்றார்கள். பின்பு திரும்பி வந்து, ”ஒருவர் மலம் ஜலம் கழிக்க விரும்பினால் தொழுகைக்கு முன்னால் அதை முதலில் செய்யட்டும்”” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள். இதை உர்வா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الْأَرْقَمِ كَانَ يَؤُمُّ أَصْحَابَهُ، فَحَضَرَتِ الصَّلَاةُ يَوْمًا، فَذَهَبَ لِحَاجَتِهِ، ثُمَّ رَجَعَ. فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا أَرَادَ أَحَدُكُمُ الْغَائِطَ فَلْيَبْدَأْ بِهِ قَبْلَ الصَّلَاةِ»


Next Page » « Previous Page