Author: Farook

muwatta-malik-428

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

428. தொழுகையாளின் குறுக்கே நடப்பதினால் தொழுகை முறிந்து விடாது என அலீ இப்னு அபீதாலிப்(ரலி) அறிவித்தார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


«لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ مِمَّا يَمُرُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي»


muwatta-malik-427

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

427. தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது. ஸஹ்து இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் ஸஃப்புகளுக்கு மத்தியில் நடந்து செல்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு, இமாமும் (தக்பீர் கூறி) ஹரமாக்கிய பின், ஒருவர் பள்ளிக்கு நுழைய ஸப்புகளுக்கு மத்தியில் நுழைவதைத் தவிர வேறு ஒன்றை பெற்றுக் கொள்ளவில்லையானால், ஸஃப்புகளுக்குள் நுழையக் கூடும் என்றே கருதுகின்றேன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ كَانَ «يَمُرُّ بَيْنَ يَدَيْ بَعْضِ الصُّفُوفِ، وَالصَّلَاةُ قَائِمَةٌ»

قَالَ مَالِكٌ: «وَأَنَا أَرَى ذَلِكَ وَاسِعًا، إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ، وَبَعْدَ أَنْ يُحْرِمَ الْإِمَامُ، وَلَمْ يَجِدِ الْمَرْءُ مَدْخَلًا إِلَى الْمَسْجِدِ إِلَّا بَيْنَ الصُّفُوفِ»


muwatta-malik-426

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 96

தொழுபவனின் முன்னே நடந்து செல்ல அனுமதி

426. நான் பருவ வயதை நெருங்கிய காலத்தில், மினாவில் மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழ வைக்கும் நிலையில் கழுதையின் மீது ஏறி நான் வந்து கொண்டிருந்தேன். ஸப்புகளுக்கு மத்தியில் குறுக்கே சென்று, பின்பு வாகனத்தில் இறங்கி கழுதையை மேய அனுப்பினேன். ஸஃபில் நுழைந்தேன். யாரும் எனக்கு ஆட்சேபணை தொரிவிக்கவில்லை என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இதே கருத்து புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


أَقْبَلْتُ رَاكِبًا عَلَى أَتَانٍ وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلَامَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي لِلنَّاسِ، بِمِنًى «فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ»، فَنَزَلْتُ، فَأَرْسَلْتُ الْأَتَانَ تَرْتَعُ، وَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ أَحَدٌ


muwatta-malik-425

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

425. அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் (தொழும்) ஒருவரின் குறுக்கே செல்லவும் மாட்டார்கள். தன் முன்னே யாரையும் நடக்கவும் விடமாட்டார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «لَا يَمُرُّ بَيْنَ يَدَيْ أَحَدٍ، وَلَا يَدَعُ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ»


muwatta-malik-424

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

424. பெண்கள் தொழுது கொண்டிருக்கும் போது, அவர்கள் முன்னே நடந்து செல்வதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) வெறுத்தார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يَكْرَهُ أَنْ يَمُرَّ بَيْنَ أَيْدِي النِّسَاءِ، وَهُنَّ يُصَلِّينَ»


muwatta-malik-423

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

423. தொழுகையாளியின் குறுக்கே நடந்து செல்பவன், அவன் மீது உள்ளதை அறிந்தால் அவன் குறுக்கெ செல்வதை விட பூமிக்குள் உயிருடன் புதையுண்டு போவது அவனுக்கு சிறப்பாகி விடும் என கஃபுல் அஹ்பார் கூறியதாக அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள்.


«لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي، مَاذَا عَلَيْهِ، لَكَانَ أَنْ يُخْسَفَ بِهِ، خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ»


muwatta-malik-422

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

422. தொழுபவனின் குறுக்கே நடப்பவன் விஷயமாக நபி(ஸல்) அவர்களின் இருந்து அறிந்து என்ன? என அபூஜுஹைம்(ரலி) அவர்களிடம் கேட்க வரும்படி என்னை ஜைத் இப்னு காலித் அனுப்பி வைத்தார்கள்.

”தொழுபவனின் குறுக்கே நடந்து செல்பவன், அவன் மீது உள்ளதை (தண்டனையை) அறிந்தால், அவன் முன் நடந்து செல்வதை விட நாற்பது நாள் கூட (தொழுகையை முடிக்கட்டும் என எதிர்பார்த்து) நிற்பது அவனுக்கு சிறப்பாகி விடும்”” என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஜுஹைம் கூறினார்கள்.

(என்னிடம்) கூறியவர் நாற்பது நாள் அல்லது நாற்பது மாதம் அல்லது நாற்பது வருடம் என்பதில் எதைக் கூறினார் என்பதை நான் அறிய மாட்டேன் என இதன் அறிவிப்பாளாரில் ஒருவரான அபூ நஸ்ர் கூறுகின்றார்கள்.


أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ أَرْسَلَهُ إِلَى أَبِي جُهَيْمٍ يَسْأَلُهُ، مَاذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَارِّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي؟ فَقَالَ أَبُو جُهَيْمٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي، مَاذَا عَلَيْهِ، لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ، خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ»، قَالَ أَبُو النَّضْرِ: لَا أَدْرِي أَقَالَ أَرْبَعِينَ يَوْمًا أَوْ شَهْرًا أَوْ سَنَةً


muwatta-malik-421

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 95

தொழுபவர் தன் முன்னே எவரும் நடக்காமலிருக்கச் செய்தல்

421. உங்களில் ஒருவர் தொழுதால் அவனுக்கு முன் நடந்து செல்ல ஒருவனையும் அனுமதிக்க வேண்டாம். இயன்றவரை அவனை தடுக்கட்டும். அவன் மறுத்தால் அவனிடம் சண்டை பிடிக்கட்டும். (காரணம்) அவனே ஷைத்தான் என நபி(ஸல்) கூறியதாக அபூஸய்துல் குத்ரி(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ யில் உள்ளது).


«إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي، فَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ وَلْيَدْرَأْهُ مَا اسْتَطَاعَ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ»


muwatta-malik-420

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

420. நண்பகல் நேரத்தில் உமர்(ரலி) அவர்களிடம் வந்தேன். அவர்களை தொழக் கண்டேன். (நானும் தொழ) அவர்கள் பின்னே நின்றேன். அவர்களின் வலது புறத்தின் நேராக என்னை ஆக்கும் அளவுக்கு என்னை நெருங்கினார்கள். யர்பஉ என்பவர் வந்த போது, நான் பின்னோக்கி வந்தேன். அவர்களுக்குப் பின்னால் வாரிசையாக நின்றோம் என அப்துல்லா இப்னு உத்பா இப்னு மஸ்ஊத் கூறுகின்றார்கள்.


دَخَلْتُ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ بِالْهَاجِرَةِ «فَوَجَدْتُهُ يُسَبِّحُ، فَقُمْتُ وَرَاءَهُ. فَقَرَّبَنِي حَتَّى جَعَلَنِي حِذَاءَهُ عَنْ يَمِينِهِ»، فَلَمَّا جَاءَ يَرْفَا تَأَخَّرْتُ فَصَفَفْنَا وَرَاءَهُ


muwatta-malik-419

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 94

லுஹாத் தொழுகை முறை

419. எனது பாட்டி முலைகா அவர்கள் நபி(ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தார். நபி(ஸல்) அர்கள் சாப்பிட்டார்கள். பின்பு, எழுந்திருங்கள், உங்களுக்கு நான் தொழ வைக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீண்ட நாட்களாக பயன்படுத்திய இற்றுப் போன (பழைய) பாயில் நான் நின்றேன். பாயில் தண்ணீர் தெளித்துப் பயன்படுத்தினேன். அவர்கள் தொழ வைக்கத் தயாரானார்கள். அவர்களுக்குப் பின்னால் (எங்கள் வீட்டில் இருந்து) அனாதையான ஒருவருடன் நான் அணிவகுத்து நின்றேன். எங்களுக்குப்பின் என் பாட்டி இருந்தார். எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழ வைத்து முடித்தார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ، دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ. فَأَكَلَ مِنْهُ. ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُومُوا فَلِأُصَلِّيَ لَكُمْ»، قَالَ أَنَسٌ فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ، مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ. فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَصَفَفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ


Next Page » « Previous Page