Author: Farook

muwatta-malik-418

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

418. ஆயிஷா(ரலி) அவர்கள் எட்டு ரக்அத் லுஹாத் தொழுவார்கள். பின்பு (அத்தொழுகையை தொழாதிருந்த போது) என் பெற்றோர் என்னோடு (உயிருடன்) இருந்திருந்தால் அவைகளை விட்டிருக்க மாட்டேன் என்றும் கூறினார்கள் என ஸைத் இப்னு அஸ்லம் கூறுகிறார்கள்.


أَنَّهَا كَانَتْ «تُصَلِّي الضُّحَى ثَمَانِيَ رَكَعَاتٍ»، ثُمَّ تَقُولُ: «لَوْ نُشِرَ لِي أَبَوَايَ مَا تَرَكْتُهُنَّ»


muwatta-malik-417

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

417. லுஹாத் தொழுகையை நான் தொழுவேன். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதைத் தொழுக நான் கண்டதில்லை. நபி (ஸல்) அவர்கள் தாங்கள் ஒரு செயலை செய்ய விருப்பம் கொண்டு அதைச் செய்யாமல் விட்டு விடுவார்கள். மக்கள் தங்கள் மீது அதைக் கடமையாக்கிக் கொள்வார்களோ என்ற அச்சம் தான் காரணம் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்…


«مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي سُبْحَةَ الضُّحَى قَطُّ»، وَإِنِّي لِأُسَبِّحُهَا، وَإِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَيَدَعُ الْعَمَلَ، وَهُوَ يُحِبُّ أَنْ يَعْمَلَهُ، خَشْيَةَ أَنْ يَعْمَلَ بِهِ النَّاسُ، فَيُفْرَضَ عَلَيْهِمْ»


muwatta-malik-416

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

416. நான் மக்கா வெற்றி வருடத்தில் ஒருநாள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களின் மகள் பாத்திமா அவர்கள் ஒரு ஆடையால் மறைத்துக் கொண்டிருக்க நபி(ஸல்) அவர்கள் குளிக்கக் கண்டேன். நான் ஸலாம் கூறியதும், ”யார் அப்பெண்?”” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், அபூதாலிபின் மகள் உம்மு ஹானீ என்றேன். உம்மு ஹானிக்கு எனது வாழ்த்துக்கள் என்று நபி(ஸல்) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு அவர்கள் குளித்து முடித்ததும், ஒரு ஆடையை தன் மீது சுற்றிக் கொண்டு, எட்டு ரக்அத் தொழுதார்கள். தொழுது முடித்ததும் இறைத்தூதர் அவர்களே! நான் அடைக்கலம் கொடுத்த புலான் இப்னு ஹுபைராவைக் கொல்ல வேண்டும் என என் தாய் வழிச் சகோதரர் எண்ணுகிறார் என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், உம்மு ஹானியே! நீர் அடைக்கலம் கொடுத்தவருக்கு நாமும் அடைக்கலம் கொடுத்தோம் என்றார்கள். இது நடந்தது லுஹா நேரத்திலாகும் என்று உம்மு ஹானீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ، وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ بِثَوْبٍ، قَالَتْ: فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: «مَنْ هَذِهِ؟» فَقُلْتُ: أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ، فَقَالَ: مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ. فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ، قَامَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ، مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ، ثُمَّ انْصَرَفَ. فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ زَعَمَ ابْنُ أُمِّي عَلِيٌّ أَنَّهُ قَاتِلٌ رَجُلًا أَجَرْتُهُ، فُلَانُ بْنُ هُبَيْرَةَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِئٍ»، قَالَتْ أُمُّ هَانِئٍ: وَذَلِكَ ضُحًى


muwatta-malik-415

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 93

லுஹாத் தொழுகை

415. நபி(ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி பெற்ற வருடத்தில் ஒரே ஆடையை (தன்மீது) சுற்றிய(ணிந்த)வர்களாக எட்டு ரக்அத் தொழுதார்கள் என அபூதாலிபின் மகள் உம்மு ஹானீ(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى عَامَ الْفَتْحِ ثَمَانِيَ رَكَعَاتٍ مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ»


muwatta-malik-414

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

414. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் பிரயாணம் செய்யும் போது கழுதையின் மீதமர்ந்து கிப்லா அல்லாத திசை நோக்கித் தொழும் போது அவர்கள் லேசாக தலையை குனிவது மூலம் ருகூஉ வும், எப் பொருள் மீதும் நெற்றியை வைக்காமல் (தலையைச் சாய்த்து) ஸஜ்தாவும் செய்ததை நான் பார்த்தேன் என யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ فِي السَّفَرِ وَهُوَ «يُصَلِّي عَلَى حِمَارٍ، وَهُوَ مُتَوَجِّهٌ إِلَى غَيْرِ الْقِبْلَةِ، يَرْكَعُ وَيَسْجُدُ، إِيمَاءً مِنْ غَيْرِ أَنْ يَضَعَ وَجْهَهُ عَلَى شَيْءٍ»


muwatta-malik-413

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

413. நபி (ஸல்) அவர்கள் பயணத்தின் போது தன் வாகனத்தில் எத்திசை நோக்கியேனும் தொழுவார்கள என அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாக கூறி விட்டு, இவ்வாறு தான் அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களும் செய்வார்கள் என அப்துல்லா இப்னு தீனார் கூறுகின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ فِي السَّفَرِ حَيْثُ تَوَجَّهَتْ بِهِ»، قَالَ عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِكَ


muwatta-malik-412

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

412. நபி(ஸல்) அவர்கள் கழுதையின் மீதமர்ந்து, ‘கைபர்” திசை நோக்கி தொழுததை நான் பார்த்தேன் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُصَلِّي وَهُوَ عَلَى حِمَارٍ وَهُوَ مُتَوَجِّهٌ إِلَى خَيْبَرَ»


muwatta-malik-411

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

411. தன் மகன் உபைதுல்லா பயணத்தின் போதும் நபில் தொழுததைக் கண்ட அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ஏதும் ஆட்சேபணை செய்யவில்லை என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «كَانَ يَرَى ابْنَهُ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ يَتَنَفَّلُ فِي السَّفَرِ فَلَا يُنْكِرُ عَلَيْهِ»


muwatta-malik-409

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

409. காஸிம் இப்னு முஹம்மத், உர்வா இப்னு சுபைர், அபூபக்கர் இப்னு அப்துர் ரஹ்மான் ஆகியோர் பயணத்தில் நபில் தொழுவார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ وَعُرْوَةَ بْنَ الزُّبَيْرِ وَأَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ كَانُوا: «يَتَنَفَّلُونَ فِي السَّفَرِ»


muwatta-malik-408

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 92

பயணத்தில் இரவும் பகலும் நபில் தொழுதல், வாகனத்தில் தொழுதல்

408. அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் பயணத்தில் பர்லுத் தொழுகைக்கு முன்போ பின்போ எதையும் தொழ மாட்டார்கள். ஆனால் இரவின் நடுப் பகுதியிலோ அவர்கள் தரை மீதும் தொழுவார்கள். வாகனத்தின் மீதும் அது செல்லும் திசை நோக்கித் தொழுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّهُ «لَمْ يَكُنْ يُصَلِّي مَعَ صَلَاةِ الْفَرِيضَةِ فِي السَّفَرِ شَيْئًا، قَبْلَهَا وَلَا بَعْدَهَا، إِلَّا مِنْ جَوْفِ اللَّيْلِ، فَإِنَّهُ كَانَ يُصَلِّي عَلَى الْأَرْضِ وَعَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ»


Next Page » « Previous Page