Author: Farook

muwatta-malik-364

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

364. இரவுத் தொழுகையை நபி(ஸல்) அவர்ள் முதுமை அடையும் வரை அமர்ந்து தொழுததை நான் பார்த்ததே இல்லை. (முதுமை ஏற்பட்டதற்குப் பிறகு) உட்கார்ந்து கிராஅத் ஓதுவார்கள். பின்பு ருகூஉ செய்ய விரும்பினால் எழுந்து நின்று முப்பது அல்லது நாற்பது அளவுக்கு கிராஅத் ஓதுவார்கள். பின்பு ருகூஉ செய்வார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّهَا: «لَمْ تَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةَ اللَّيْلِ قَاعِدًا قَطُّ، حَتَّى أَسَنَّ فَكَانَ يَقْرَأُ قَاعِدًا، حَتَّى إِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ، قَامَ فَقَرَأَ نَحْوًا مِنْ ثَلَاثِينَ أَوْ أَرْبَعِينَ آيَةً ثُمَّ رَكَعَ»


muwatta-malik-363

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 82

நஃபில் (கூடுதலானத்) தொழுகையை உட்கார்ந்துத் தொழுதல்.

363. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து தொழுததை நான் பார்த்ததில்லை; அவர்கள் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்புவரை இந்நிலையே நீடித்தது. பிறகு அவர்கள் கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து தொழலானார்கள்; அப்போது ஓர் அத்தியாயத்தை (ஓதினால் வேக வேகமாக ஓதாமல்) நிறுத்தி நிதானமாக ஓதுவார்கள். எந்த அளவிற்கென்றால் (அவர்கள் ஓதும் சிறிய அத்தியாயம்கூட குர்ஆனிலுள்ள) நீளமான அத்தியாயங்களில் ஒன்றைப் போன்றாகிவிடும்.


مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ صَلَّى فِي سُبْحَتِهِ قَاعِدًا قَطُّ، حَتَّى كَانَ قَبْلَ وَفَاتِهِ بِعَامٍ، فَكَانَ يُصَلِّي فِي سُبْحَتِهِ قَاعِدًا، وَيَقْرَأُ بِالسُّورَةِ فَيُرَتِّلُهَا، حَتَّى تَكُونَ أَطْوَلَ مِنْ أَطْوَلَ مِنْهَا.


muwatta-malik-362

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

362. மதீனாவிற்கு நாங்கள் வந்த போது கடுமையான காய்ச்சில் எங்களுக்கு ஏற்பட்டது. மக்கள் தங்களின் தொழும் தோல் விரிப்பில் உட்கார்ந்து தொழும் போது அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். உட்கார்ந்து தொழுபவனின் தொழுகை, நின்று தொழுபவனின் தொழுகையில் பாதி போன்றது தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அப்துல்லா இப்னு அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ. نَالَنَا وَبَاءٌ مِنْ وَعْكِهَا شَدِيدٌ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّاسِ وَهُمْ يُصَلُّونَ فِي سُبْحَتِهِمْ قُعُودًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةُ الْقَاعِدِ مِثْلُ نِصْفِ صَلَاةِ الْقَائِمِ»


muwatta-malik-361

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 81

உட்கார்ந்து தொழும் தொழுகையை விட நின்று தொழும் தொழுகையின் சிறப்பு

361. உங்களில் ஒருவர் உட்கார்ந்தவராகத் தொழுவது, நின்று தொழுபவாரின் தொழுகையில் பாதியைப் போன்றது தான் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ இப்னு அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது முஸ்லிம், அபூதாவூது, நஸயீ – ல் இடம் பெற்றுள்ளது).


«صَلَاةُ أَحَدِكُمْ وَهُوَ قَاعِدٌ مِثْلُ نِصْفِ صَلَاتِهِ وَهُوَ قَائِمٌ»


muwatta-malik-360

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

360. நபி(ஸல்) அவர்கள் நோயுற்ற போது பள்ளிக்கு வந்தார்கள். அதுசமயம் மக்களுக்கு நின்றவாறு அபூபக்கர்(ரலி) அவர்கள் தொழ வைத்தார்கள். அபூபக்கர்(ரலி) பின் வாங்கினார்கள். ‘நீர் முன் போல் இருக்கவும்” என்று அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சமிக்ஞை செய்தார்கள். அபூபக்கர்(ரலி) அருகில் நபி(ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழுதார்கள். மக்கள், அபூபக்கர்(ரலி) அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழுதார்கள் என்று உர்வா கூறுகின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فِي مَرَضِهِ. فَأَتَى فَوَجَدَ أَبَا بَكْرٍ وَهُوَ قَائِمٌ يُصَلِّي بِالنَّاسِ، فَاسْتَأْخَرَ أَبُو بَكْرٍ. «فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ كَمَا أَنْتَ». فَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَنْبِ أَبِي بَكْرٍ. فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ، وَكَانَ النَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ أَبِي بَكْرٍ


muwatta-malik-359

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

359. நபி(ஸல்) அவர்கள் நோயுற்று இருந்த போது, உட்கார்ந்தவர்களாக தொழ வைத்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இருந்தோர் (மக்கள்) நின்று தொழுதனர். ”உட்காருங்கள்”” என அவர்களிடம் சமிக்ஞை செய்தார்கள். தொழுகையை முடித்ததும், ”இமாம் என்பவர் அவரைப் பின்பற்றவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். அவர் ருகூஉ செய்தால் நீங்களும் ருகூஉ செய்யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் உயர்த்துங்கள். உட்கார்ந்து அவர் தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்”” என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ شَاكٍ فَصَلَّى جَالِسًا. وَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا. فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا»


muwatta-malik-358

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 80

உட்கார்ந்தவராக இமாம் தொழ வைப்பது

358. நபி(ஸல்) அவர்கள் குதிரையில் ஏறினார்கள். அவர்களை அது கீழே தள்ளி விட்டது. அதனால் அவர்களின் வலது புறத்தில் சிராய்ப்பு ஏற்பட்டது. நபி(ஸல்) அவாகள் உட்கார்ந்தவாறே தொழ வைத்தார்கள். அவர்களுக்குப் பின்னால் நாங்கள் உட்கார்ந்து தொழுதோம். தொழுகையை முடித்த போது, ”இமாம் என்பவர் அவரைப் பின்பற்றவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நின்று தொழ வைத்தால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் ருகூஉ செய்தால் நீங்களும் ருகூஉச் செய்யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் உயர்த்துங்கள். அவர், ஸமியல்லாஹுலிமன் ஹமிதாஹ்”” என்று கூறினால், ”ரப்பனா வலக்கல் ஹம்து”” என்று நீங்கள் கூறுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் உட்கார்ந்து தொழுங்கள் என்று நபி(ஸல்) அவாகள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكِبَ فَرَسًا فَصُرِعَ، فَجُحِشَ شِقُّهُ الْأَيْمَنُ، فَصَلَّى صَلَاةً مِنَ الصَّلَوَاتِ، وَهُوَ قَاعِدٌ. وَصَلَّيْنَا وَرَاءَهُ قُعُودًا. فَلَمَّا انْصَرَفَ قَالَ: إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا. وَإِذَا رَفَعَ فَارْفَعُوا وَإِذَا قَالَ: ” سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، ” وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ


muwatta-malik-357

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

357. ‘அகீக்” என்ற இடத்தில் ஒருவர் மக்களுக்கு இமாமத் செய்து கொண்டிருந்தார். உமர் இப்னு அப்து;ல அஜீஸ் அவர்கள் அவரிடம் ஆள் அனுப்பி அவரை (தொழ வைக்க வேண்டாம் என) தடை செய்தார்கள் என யஹ்யா இப்னு ஸாமித் கூறுகின்றார்கள்.

அவரைத் தடுத்ததற்கு அவரின் தந்தை யாரென்றே அறியப்படாததே காரணமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ رَجُلًا كَانَ يَؤُمُّ النَّاسَ بِالْعَقِيقِ، «فَأَرْسَلَ إِلَيْهِ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ فَنَهَاهُ»

قَالَ مَالِكٌ: «وَإِنَّمَا نَهَاهُ لِأَنَّهُ كَانَ لَا يُعْرَفُ أَبُوهُ»


muwatta-malik-356

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

356. ஒரு தொழுகையின் போது அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களின் பின்னால் நான் நின்றேன். என்னைத் தவிர வேறு எவரும் அவர்களுடன் இல்லை. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தன் கையைப் பின்னோக்கி (என்னைப் பிடித்து) தன் வலது புறத்தில் நேராக என்னை ஆக்கினார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


قُمْتُ وَرَاءَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي صَلَاةٍ مِنَ الصَّلَوَاتِ، وَلَيْسَ مَعَهُ أَحَدٌ غَيْرِي، «فَخَالَفَ عَبْدُ اللَّهِ بِيَدِهِ، فَجَعَلَنِي حِذَاءَهُ»


muwatta-malik-355

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 79

கூட்டுத் தொழுகையின் ஒழுங்கு

355. உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழ வைத்தால் அவர் இலகுவாக்கட்டும். ஏனெனில், பின்பற்றித் தொழுவோரில் பலவீனரும், நோயாளிகளும், முதியவர்களும் உள்ளனர். உங்களில் ஒருவர் தனித்துத் தொழுதால் விருப்பப்படி நீட்டிக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவாகள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«إِذَا صَلَّى أَحَدُكُمْ بِالنَّاسِ فَلْيُخَفِّفْ، فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالسَّقِيمَ وَالْكَبِيرَ، وَإِذَا صَلَّى أَحَدُكُمْ لِنَفْسِهِ فَلْيُطَوِّلْ مَا شَاءَ»


Next Page » « Previous Page