Author: Farook

muwatta-malik-374

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

374. ஜாபிர் இப்னு அப்துல்லா(ரலி) அவர்கள் ஒரேஆடையில் தொழக் கூடியவர்களாக இருந்தார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ كَانَ «يُصَلِّي فِي الثَّوْبِ الْوَاحِدِ»


muwatta-malik-373

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

373. ஒரே ஆடையில் ஒரு ம னிதர் தொழலாமா? என அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ”தொழலாம்” என்று பதில் கூறினார்கள். அதை நீங்கள் செய்வீர்களா? என அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆம்! என்னுடைய (உபாரியான) ஆடைகள் மரச்சட்டத்தில் இருக்கும் போதே நானும் ஒரே ஆடையில் தொழுகிறேன் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


سُئِلَ أَبُو هُرَيْرَةَ: هَلْ يُصَلِّي الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ؟ فَقَالَ: «نَعَمْ»، فَقِيلَ لَهُ: هَلْ تَفْعَلُ أَنْتَ ذَلِكَ؟ فَقَالَ: «نَعَمْ، إِنِّي لَأُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ وَإِنَّ ثِيَابِي لَعَلَى الْمِشْجَبِ»


muwatta-malik-372

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

372. ஒரே ஆடையில் தொழுதால் (கூடுமா?) என்பது பற்றி நபி(ஸல்) அவர்களை ஒருவர் கேட்டார். ”உங்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் உண்டா? என்ன? என நபி(ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத், இப்னு மாஜா, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


أَنَّ سَائِلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَنِ الصَّلَاةِ فِي ثَوْبٍ وَاحِدٍ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَلِكُلِّكُمْ ثَوْبَانِ»


muwatta-malik-371

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 84

ஒரே ஆடையில் தொழ அனுமதி.

371. (என் தாய்) உம்மு ஸலமா (ரலி) அவர்கள், வீட்டில் ஒரே ஆடையில் அதைச் சுற்றியவர்களாக, அதன் ஓரப்பகுதிகளை தன் ஒரு தோள் புஜத்தில் போட்டவர்களாகத் நபி (ஸல்) அவர்கள் தொழுததைப் பார்த்ததாக அபூஸலமாவின் மகன் உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

(இதன் கருத்து புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது).


أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلًا بِهِ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ»


muwatta-malik-370

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

370. நடுத்தொழுகை என்பது சுப்ஹுத் தொழுகை தான் என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், அலீ இப்னு அபீதாலிப்(ரலி) இருவரும் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்தது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.

இது விஷயமாக அலீ(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) இருவரும் கூறியதே நான் கேட்டதில் எனக்கு மிக விருப்பமானதாக உள்ளது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ كَانَا يَقُولَانِ: «الصَّلَاةُ الْوُسْطَى صَلَاةُ الصُّبْحِ»

قَالَ مَالِكٌ: «وَقَوْلُ عَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي ذَلِكَ»


muwatta-malik-369

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

369. நடுத்தொழுகை என்பது லுஹர் தொழுகை தான் என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என இப்னு யர்பூஉல் மக்சூமி கூறுகின்றார்கள்.


«الصَّلَاةُ الْوُسْطَى صَلَاةُ الظُّهْرِ»


muwatta-malik-368

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

368. ஹபஸா(ரலி) அவர்களுக்காக நான் குர்ஆனை எழுதிக் கொண்டிருந்தேன். 2:238 வது வசனம் வந்ததும் என்னை அழையுங்கள் என அவர்கள் என்னிடம் கூறினார்கள். அந்த வசனம் வந்ததும், அவர்களை அழைத்தேன். வஸ்ஸலாத்தில் வுஸ்தா என்ற வார்த்தைக்கு அடுத்து, ஸலாத்தில் அஸ்ரி என்று எழுதிடும்படி என்னிடம் கூறினார்கள் என அம்ரு இப்னு ராஃபிஉ கூறுகின்றார்கள்.


كُنْتُ أَكْتُبُ مُصْحَفًا لِحَفْصَةَ أُمِّ الْمُؤْمِنِينَ. فَقَالَتْ: «إِذَا بَلَغْتَ هَذِهِ الْآيَةَ فَآذِنِّي» {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ، وَالصَّلَاةِ الْوُسْطَى، وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ،} [البقرة: 238] فَلَمَّا بَلَغْتُهَا آذَنْتُهَا فَأَمْلَتْ عَلَيَّ: «حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ، وَالصَّلَاةِ الْوُسْطَى، وَصَلَاةِ الْعَصْرِ، وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ»


muwatta-malik-367

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 83

நடுத்தொழுகை

367. ஆயிஷா(ரலி) அவர்கள், தனக்கு குர்ஆன் ஒன்று எழுதித் தரும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். 2:238 வது வசனம் வந்ததும் என்னைக் கூப்பிடுங்கள் என்று கூறினார்கள். அந்த வசனம் வந்ததும் அவர்களை அழைத்தேன். 2:238 வசனத்தின் ”வஸ்ஸலாத்தில் வுஸ்தா”” (நடுத்தொழுகை என்ற) வாசகத்திற்குப் பின்னால் வஸ்ஸலாத்தில் அஸர் (அஸர்த் தொழுகை) என்று எழுதிட கட்டளையிட்டார்கள். இப்படியே நபி(ஸல்) அவர்களிடம் இருந்து நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களின் அடிமை அபூயூனுஸ்(ரலி) கூறுகின்றார்கள்.

(இது முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


أَمَرَتْنِي عَائِشَةُ أَنْ أَكْتُبَ لَهَا مُصْحَفًا. ثُمَّ قَالَتْ: «إِذَا بَلَغْتَ هَذِهِ الْآيَةَ فَآذِنِّي» {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى، وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ} [البقرة: 238] فَلَمَّا بَلَغْتُهَا آذَنْتُهَا فَأَمْلَتْ عَلَيَّ «حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ، وَالصَّلَاةِ الْوُسْطَى، وَصَلَاةِ الْعَصْرِ، وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ»، قَالَتْ عَائِشَةُ: «سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


muwatta-malik-366

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

366. உர்வா இப்னு சுபைர், ஸயீத் இப்னு முஸய்யப் இருவரும் குத்தலிட்டு அமர்ந்து தொழுதார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، كَانَا «يُصَلِّيَانِ النَّافِلَةَ وَهُمَا مُحْتَبِيَانِ»


muwatta-malik-365

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

365. நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்து கிராஅத் ஓதும் போது முப்பது அல்லது நாற்பது அளவுக்கு வசனங்கள் மீதம் இருக்கும் போது எழுந்து நிற்பார்கள். நின்றவர்களாக ஓதுவார்கள். பின்பு ருகூஉ செய்வார்கள். ஸஜ்தா செய்வார்கள். பின்பு இது போலவே இரண்டாவது ரக்அத்திலும் செய்வார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ «يُصَلِّي جَالِسًا. فَيَقْرَأُ وَهُوَ جَالِسٌ، فَإِذَا بَقِيَ مِنْ قِرَاءَتِهِ قَدْرُ مَا يَكُونُ ثَلَاثِينَ أَوْ أَرْبَعِينَ آيَةً. قَامَ فَقَرَأَ وَهُوَ قَائِمٌ. ثُمَّ رَكَعَ وَسَجَدَ. ثُمَّ صَنَعَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ»


Next Page » « Previous Page