Author: Farook

Muwatta-Malik-385

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

385. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மழைக் காலத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கருதுகிறேன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்.


«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا، فِي غَيْرِ خَوْفٍ وَلَا سَفَرٍ»

قَالَ مَالِكٌ: «أُرَى ذَلِكَ كَانَ فِي مَطَرٍ»


muwatta-malik-384

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

384. நபி(ஸல்) அவர்கள் தன் (பயணத்தில்) வேகத்தை விரும்பினால் மஹ்ரிபையும், இஷாவையும் ‘ஜம்உ” செய்வார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا عَجِلَ بِهِ السَّيْرُ، يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ»


muwatta-malik-383

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

383. நபி(ஸல்) அவர்களுடன் நபித்தோழர்கள், ‘தபூக்” போருக்குச் சென்ற சமயம் நபி(ஸல்) அவர்கள் ”லுஹரையும், அஸரையும்”” – ”மஹ்ரிபையும், இஷாவையும்”” ‘ஜம்உ” செய்தார்கள். அந்நாளில் தொழுகையை தாமதப்படுத்தி (போர்க்களத்தில் இருந்து) வெளியேறி லுஹரையும், அஸரையும் இணைத்துத் தொழுதார்கள். பின்பு (போர்க்களத்தில்) நுழைந்து (பின்பு அங்கிருந்து) வெளியேறி மஹ்ரிபையும், இஷாவையும் இணைத்துத் தொழுதார்கள். பின்பு, நீங்கள் அல்லாஹ்வினால் தபூக் அருகே உள்ள ஊற்றுக் கண் அருதே நாளை வருவீர்கள். பகல் நேரம் வரும் வரை அங்கே நீங்கள் வராதீர்கள். அங்கே ஒருவர் வந்து விட்டால், அதன் தண்ணீரில் சிறிதளவு கூட எவரும், நான் வரும் வரை தொட வேண்டாம். அங்கே நாங்கள் வந்தோம் – அதன் பக்கம் எங்களில் இருவர் மட்டும் முந்தி (தொட்டு) விட்டனர். ஊற்றுக் கண், சிறிதளவு தண்ணீரையே வெளிப்படுத்தியது.அந்த தண்ணீரை நீங்கள் இருவரும் தொட்டீர்களா? ன்று அவ்விருவாரிடமும் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்கள், ‘ஆம்” என்றனர். ”அல்லாஹ் தான் நாடியதை கூறுவான்”” என் அந்த இருவாரிடமும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு மக்கள் தங்கள் கைகளினால் ஊற்றிலிருந்து சிறிதளவு எடுத்து, ஒன்றில் ஒன்று சேர்த்தார்கள். பின்பு அதில் நபி(ஸல்) அவர்கள் தன் முகத்தை, தன் கைகளைக் கழுவினார்கள். பின்பு

أَنَّهُمْ خَرَجُوا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ تَبُوكَ. فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَجْمَعُ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ». قَالَ: فَأَخَّرَ الصَّلَاةَ يَوْمًا، ثُمَّ خَرَجَ «فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا»، ثُمَّ دَخَلَ. ثُمَّ خَرَجَ «فَصَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا»، ثُمَّ قَالَ: «إِنَّكُمْ سَتَأْتُونَ غَدًا، إِنْ شَاءَ اللَّهُ عَيْنَ تَبُوكَ، وَإِنَّكُمْ لَنْ تَأْتُوهَا حَتَّى يَضْحَى النَّهَارُ، فَمَنْ جَاءَهَا فَلَا يَمَسَّ مِنْ مَائِهَا شَيْئًا»، حَتَّى آتِيَ، فَجِئْنَاهَا، وَقَدْ سَبَقَنَا إِلَيْهَا رَجُلَانِ، وَالْعَيْنُ تَبِضُّ بِشَيْءٍ مِنْ مَاءٍ، فَسَأَلَهُمَا رَسُولُ اللَّهِ: «هَلْ مَسِسْتُمَا مِنْ مَائِهَا شَيْئًا؟»، فَقَالَا: نَعَمْ. فَسَبَّهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ لَهُمَا مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ. ثُمَّ غَرَفُوا بِأَيْدِيهِمْ مِنَ الْعَيْنِ، قَلِيلًا قَلِيلًا. حَتَّى اجْتَمَعَ فِي شَيْءٍ، ثُمَّ غَسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيهِ وَجْهَهُ وَيَدَيْهِ. ثُمَّ أَعَادَهُ فِيهَا، فَجَرَتِ الْعَيْنُ بِمَاءٍ كَثِيرٍ “. فَاسْتَقَى النَّاسُ. ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُوشِكُ يَا مُعَاذُ إِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ، أَنْ تَرَى مَا هَاهُنَا قَدْ مُلِئَ جِنَانًا»


muwatta-malik-382

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 86

பயணத்திலும் பயணம் இல்லாத காலத்திலும் இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழுதல்

382. நபி(ஸல்) அவர்கள் ‘தபூக்” போருக்குப் பயணம் சென்ற போது லுஹரையும், அஸரையும் ‘ஜம்உ” செய்தார்கள் என அஹ்ரஜ்(ரலி) கூறுகின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَجْمَعُ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، فِي سَفَرِهِ إِلَى تَبُوكَ»


muwatta-malik-381

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

381. எனக்கு இடுப்பாடை (அணிய) கஷ்டமாக உள்ளது. எனவே நான் தலைமறைப்பு ஆடையிலும் மேலாடையிலும் தொழட்டுமா? என ஒரு பெண் மார்க்கத் தீர்ப்பு கேட்டார். அதற்கு, மேலாடை விசாலமானதாக இருப்பின் தொழலாம் என உர்வா பதில் கூறினார்கள் என்று ஹிஷாம் கூறுகின்றார்கள்.


أَنَّ امْرَأَةً اسْتَفْتَتْهُ فَقَالَتْ: إِنَّ الْمِنْطَقَ يَشُقُّ عَلَيَّ، أَفَأُصَلِّي فِي دِرْعٍ وَخِمَارٍ؟ فَقَالَ: «نَعَمْ. إِذَا كَانَ الدِّرْعُ سَابِغًا»


muwatta-malik-380

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

380. மைமூனா (ரலி) அவர்கள் இடுப்பாடை ஏதுமின்றி, பெரிய மேலாடை ஒன்றையும் தலைமறைப்பு ஆடையையம் உடுத்தித் தொழுதார்கள் என மைமூனா(ரலி) அவர்களது வீட்டில் இருந்த உபைதுல்லா அல் கவ்லாஸ் கூறுகின்றார்கள்.


أَنَّ مَيْمُونَةَ كَانَتْ «تُصَلِّي فِي الدِّرْعِ وَالْخِمَارِ لَيْسَ عَلَيْهَا إِزَارٌ»


muwatta-malik-379

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

379. ஒரு பெண் தொழும் ஆடைகள் எவை? என உம்மு ஸல்மா (ரி) அவர்களிடம் என் தாய் கேட்டார்கள். அதற்கு அவர்கள் ” தலையை மறைக்கும் ஆடையிலும், காலின் மேற்பகுதியை மறைக்கும்படியாக விசாலமான மேலாடையிலும் அவள் தொழட்டும் என பதில் கூறினார்கள் என்று முஹம்மத் இப்னு ஸைத் இப்னு குன்புத் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّهَا سَأَلَتْ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَاذَا تُصَلِّي فِيهِ الْمَرْأَةُ مِنَ الثِّيَابِ؟ فَقَالَتْ: «تُصَلِّي فِي الْخِمَارِ وَالدِّرْعِ السَّابِغِ إِذَا غَيَّبَ ظُهُورَ قَدَمَيْهَا»


muwatta-malik-378

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 85

பெண்ணிற்குரிய தொழுகை ஆடை

378. பெரிய மேலாடையையும், தலையை மறைக்கும் ஆடையையும் உடுத்தி ஆயிஷா(ரலி) அவாகள் தொழுவார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ «تُصَلِّي فِي الدِّرْعِ وَالْخِمَارِ»


muwatta-malik-376

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

376. இரண்டு ஆடைகள் இல்லாதவர். ஒரே ஆடையிலேயே அதை (தன்மீது) சுற்றியவராகத் தொழட்டும். அந்த ஆடையும் சிறியதாகக இருந்தால் அதை இருப்பில் கட்டிக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«مَنْ لَمْ يَجِدْ ثَوْبَيْنِ فَلْيُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ، مُلْتَحِفًا بِهِ. فَإِنْ كَانَ الثَّوْبُ قَصِيرًا فَلْيَتَّزِرْ بِهِ»


muwatta-malik-375

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

375. முஹம்மது இப்னு ஹஸ்ம் அவர்கள் ஒரே சட்டையிலேயே தொழுவார்கள் என ரபீஆ இப்னு அபீ அப்துர் ரஹ்மான் கூறுகின்றார்கள்.


أَنَّ مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ حَزْمٍ كَانَ: «يُصَلِّي فِي الْقَمِيصِ الْوَاحِدِ»


Next Page » « Previous Page