395. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கைபருக்கு பயணம் மேற்கொண்டால் (தொழுகையை) கஸ்ர் செய்வார்கள்.
أَنَّهُ كَانَ «يُسَافِرُ إِلَى خَيْبَرَ فَيَقْصُرُ الصَّلَاةَ»
395. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கைபருக்கு பயணம் மேற்கொண்டால் (தொழுகையை) கஸ்ர் செய்வார்கள்.
أَنَّهُ كَانَ «يُسَافِرُ إِلَى خَيْبَرَ فَيَقْصُرُ الصَّلَاةَ»
394. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ‘தாதுன் நுஸுபு” என்ற இடத்திற்கு பயணம் செய்தார்கள். அது சமயம் ‘அதன் வழியிலேயே தொழுகையை கஸ்ர் செய்தார்கள் என ஸாலிம் அறிவிக்கின்றார்கள்.
மதீனாவிற்கும், தாதுன் நுஸுபுக்கும் மத்தியில் 48 மைல் தூரமாகும் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «رَكِبَ إِلَى ذَاتِ النُّصُبِ فَقَصَرَ الصَّلَاةَ فِي مَسِيرِهِ ذَلِكَ»،
قَالَ مَالِكٌ: «وَبَيْنَ ذَاتِ النُّصُبِ وَالْمَدِينَةِ أَرْبَعَةُ بُرُدٍ»
393. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ‘ரய்ம்” எனும் ஊருக்கு பயணம் செய்தார்கள். அதற்குப் போகும் வழியிலேயே ‘கஸ்ர்” தொழுதார்கள் என அவர்களின் மகன் ஸாலிம் அறிவிக்கின்றார்கள்.
”கஸ்ர்”” என்பது 48 மைல் தூர அளவுக்குத் தான் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்
أَنَّهُ «رَكِبَ إِلَى رِيمٍ، فَقَصَرَ الصَّلَاةَ فِي مَسِيرِهِ ذَلِكَ»، قَالَ مَالِكٌ: «وَذَلِكَ نَحْوٌ مِنْ أَرْبَعَةِ بُرُدٍ»
பாடம் 88
தொழுகையை சுருக்கிட வேண்டிய அவசியம்
392. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்யக் கிளம்பினால் ‘துல்ஹுலைஃபா” என்ற இடத்திலேயே ‘கஸ்ர்” செய்வார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «إِذَا خَرَجَ حَاجًّا أَوْ مُعْتَمِرًا قَصَرَ الصَّلَاةَ بِذِي الْحُلَيْفَةِ»
391. உங்களின் தந்தை (அப்துல்லா இப்னு உமர்) பயணத்தின் போது மஹ்ரிபுத் தொழுகையை மிகவும் தாமதப்படுத்திய சம்பவம் எது? என ஸாலிம் இப்னு அப்துல்லாவிடம் கேட்ட போது, நாங்கள் ‘தாத்ஜைத்” என்ற இடத்தில் இருந்த போது சூரியன் மறைந்து, (ஆனால்) ‘அகீக்” என்ற இடத்திற்கு வந்த போது (தான்) மஹ்ரிபை அவர்கள் தொழ வைத்தார்கள் என ஸாலிம் பதில் கூறியதாக யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.
أَنَّهُ قَالَ لِسَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ: مَا أَشَدَّ مَا رَأَيْتَ أَبَاكَ أَخَّرَ الْمَغْرِبَ فِي السَّفَرِ، فَقَالَ سَالِمٌ: «غَرَبَتِ الشَّمْسُ وَنَحْنُ بِذَاتِ الْجَيْشِ فَصَلَّى الْمَغْرِبَ بِالْعَقِيقِ»
390. பயணத்தின் போதும், உள்ளூரில் இருக்கும் போதும் (ஒவ்வொரு நேரத்திற்கும்) இரண்டு ரக்அத் களாக தொழுகை கடமையாக்கப்பட்டது. பின்பு அது பயணத் தொழுகையில் உறுதி செய்யப்பட்டு, ஊரில் தங்கி தொழப்படும் தொழுகையில் (ரக்அத்) அதிகப்படுத்தப்பட்டது என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
«فُرِضَتِ الصَّلَاةُ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ، فِي الْحَضَرِ وَالسَّفَرِ، فَأُقِرَّتْ صَلَاةُ السَّفَرِ، وَزِيدَ فِي صَلَاةِ الْحَضَرِ»
பாடம் 87
பயணத்தில் தொழுகையை சுருக்கித் தெழுதல்
389. அபூ அப்துர் ரஹ்மான் அவர்களே! ஊரில் இருக்கும் போது தொழும் தொழுகையை,பயத் தொழுகையை குர்ஆனில் கண்டு கொண்டோம். ஆனால் பயணத் தொழுகை பற்றி குர்ஆனில் நாம் அறியவில்லையே என காலித் இப்னு உஸைதின் குடும்பத்தினாரில் ஒருவர் கேட்ட போது ”என் சகோதரனின் மகனே! அல்லாஹ் நம்மின் பக்கம் முஹம்மது(ஸல்) அவர்களை (த் தூதராக) அனுப்பினான். நாமாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் எதைச் செய்ய நாம் கண்டோமோ அதையே நாமும் செய்கிறோம் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் பதில் கூறினார்கள் என்று இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்.
أَنَّهُ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، فَقَالَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنَّا نَجِدُ صَلَاةَ الْخَوْفِ، وَصَلَاةَ الْحَضَرِ فِي الْقُرْآنِ، وَلَا نَجِدُ صَلَاةَ السَّفَرِ؟ فَقَالَ ابْنُ عُمَرَ: «يَا ابْنَ أَخِي إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ بَعَثَ إِلَيْنَا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا نَعْلَمُ شَيْئًا. فَإِنَّمَا نَفْعَلُ، كَمَا رَأَيْنَاهُ يَفْعَلُ»
388. நபி(ஸல்) அவர்கள் பகலில் பயணம் செல்ல விரும்பினால் லுஹரையும், அஸரையும் ஜம்உ செய்வார்கள். இரவில் பயணம் செல்வதை விரும்பினால் மஹ்ரிபையும் இஷாவையும் ஜம்உ செய்வார்கள் என அலீ இப்னு ஹுஸைன்(ரலி) கூறுகின்றார்கள்.
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا أَرَادَ أَنْ يَسِيرَ يَوْمَهُ جَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَإِذَا أَرَادَ أَنْ يَسِيرَ لَيْلَهُ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ»
387. பயணத்தின் போது லுஹரையும், அஸரையும், ஜம்உ செய்யலாமா? என ஸாலிம் இப்னு அப்து;லா அவர்களிடம் கேட்ட போது, செய்யலாம். ஆனால் குற்றமில்லை. ‘அரபா” வில் மக்கள் அவ்வாறு தொழுவதை நீர் பார்க்கவில்லையா? என பதில் கூறியதாக இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்.
أَنَّهُ سَأَلَ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ هَلْ يُجْمَعُ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ فِي السَّفَرِ؟ فَقَالَ: «نَعَمْ. لَا بَأْسَ بِذَلِكَ، أَلَمْ تَرَ إِلَى صَلَاةِ النَّاسِ بِعَرَفَةَ»
386. மழைக்காலத்தில் தலைவர்கள் மஹ்ரிபையும் இஷாவையும் ஜம்உ செய்யும் போது அவர்களுடன் சேர்ந்து அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களும் ஜம்உ செய்வார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «إِذَا جَمَعَ الْأُمَرَاءُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فِي الْمَطَرِ، جَمَعَ مَعَهُمْ»
சமீப விமர்சனங்கள்