Author: Farook

muwatta-malik-343

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

343. என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விறகைச் சேகரித்து, அதை எரிக்கும்படி நான் கட்டளையிட்டு விட்டு, பின்பு தொழுகைக்கு பாங்கு கூறிடவும், ஒருவரை மக்களுக்கு இமாமத் செய்யும்படி கட்டளையிட்டும் அதற்கு வரமறுக்கும் ஆண்களின் வீட்டை எரித்திட நான் விரும்புகின்றேன். எனது உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவர் எலும்பையோ அல்லது ஆட்டின் இரண்டு குளம்புத் துண்டுகளோ கிடைக்கும் என அறிந்து கொண்டால் அவர் இஷாத் தொழுகையில் வந்து சேருவார் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ فَيُحْطَبَ، ثُمَّ آمُرَ بِالصَّلَاةِ فَيُؤَذَّنَ لَهَا، ثُمَّ آمُرَ رَجُلًا فَيَؤُمَّ النَّاسَ، ثُمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ أَنَّهُ يَجِدُ عَظْمًا سَمِينًا أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الْعِشَاءَ»


muwatta-malik-342

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

342. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 25 மடங்கு அதிக மதிப்புப் பெற்றதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«صَلَاةُ الْجَمَاعَةِ أَفْضَلُ مِنْ صَلَاةِ أَحَدِكُمْ وَحْدَهُ بِخَمْسَةٍ وَعِشْرِينَ جُزْءًا»


muwatta-malik-341

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 76

தனித்துத் தொழுவதை விட கூட்டுத் தொழுகையின் சிறப்பு

341. ஒரு மனிதன் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது).


«صَلَاةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلَاةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً»


muwatta-malik-340

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

340. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் செய்தது போலவே காஸிம் இப்னு முஹம்மத் (ரஹ்) அவர்களும் செய்வார்கள் என அப்துர்ரஹ்மான் இப்னு காஸிம் கூறுகின்றார்கள்.


«أَنَّهُ صَنَعَ مِثْلَ الَّذِي صَنَعَ ابْنُ عُمَرَ»


muwatta-malik-339

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

339. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு பஜ்ரின் சுன்னத் தொழ முடியாமல் போய் விட்டது. சூரியன் உதயமான பிறகு அதை அவர்கள் திரும்பத் தொழுதார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «فَاتَتْهُ رَكْعَتَا الْفَجْرِ. فَقَضَاهُمَا بَعْدَ أَنْ طَلَعَتِ الشَّمْسُ»


muwatta-malik-338

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

338. நபித்தோழர்கள்! இகாமத்தைக் கேட்ட பின்பு (முன் சுன்னத்) தொழுவதற்காக நின்றார்கள். அவர்களிடம் வந்த நபி(ஸல்) அவா்கள் இரண்டு தொழுகைகளா? என்று கேட்டார்கள். சுப்ஹுத் தொழுகையின் போது சுப்ஹி(ன் பர்லு)க்கு முன்னால் உள்ள இரண்டு ரக்அத் தொழுகையை தொழுத போதே இப்படி நடந்தது என அபூ ஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் கூறுகின்றார்கள்.


سَمِعَ قَوْمٌ الْإِقَامَةَ. فَقَامُوا يُصَلُّونَ. فَخَرَجَ عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَصَلَاتَانِ مَعًا؟ أَصَلَاتَانِ مَعًا؟»

وَذَلِكَ فِي صَلَاةِ الصُّبْحِ. فِي الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَ الصُّبْحِ


muwatta-malik-337

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

337. ஃபாத்திஹா சூரா ஓதினார்களா? இல்லையா? என நான் கருதும் அளவுக்கு நபி(ஸல்) அவர்களது பஜ்ரின் முன் சுன்னத் சுருக்கமாக இருந்தது என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَيُخَفِّفُ رَكْعَتَيِ الْفَجْرِ حَتَّى إِنِّي لَأَقُولُ أَقَرَأَ بِأُمِّ الْقُرْآنِ أَمْ لَا»


muwatta-malik-336

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 75

ஃபஜ்ரின் இரண்டு ரக்அத்கள்

336. சுப்ஹு தொழுகைக்காக பாங்கு கூறுபவர் பாங்கு கூறி முடித்து விட்டால், (கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லும் முன் இரண்டு ரக்அத்தை நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள் என ஹபஸா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ «إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ عَنِ الْأَذَانِ لِصَلَاةِ الصُّبْحِ، صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، قَبْلَ أَنْ تُقَامَ الصَّلَاةُ»


muwatta-malik-334

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

334. நான் இகாமத் (கூறப்படும் சப்தத்)தை கேட்டவனாக வித்ருத் தொழுது விடுவேன் என அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னு ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் இப்னு காஸிம் அவர்கள், ”இகாமத் கூறும் போதும்”” என்றோ, ”சுப்ஹுத் தொழுகைக்குப் பின் வித்ருத் தொழுவேன்”” என்றோ அப்துல்லா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றோ சந்தேகமாகக் கூறுகிறார்கள்.


«إِنِّي لَأُوتِرُ وَأَنَا أَسْمَعُ الْإِقَامَةَ أَوْ بَعْدَ الْفَجْرِ» يَشُكُّ عَبْدُ الرَّحْمَنِ أَيَّ ذَلِكَ قَالَ


muwatta-malik-333

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

333. மக்களுக்கு (தொழுகையில்) இமாமத் செய்து கொண்டு இருந்த உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்கள் ஒருநாள் சுப்ஹுத் தொழுகைக்கு வந்தார்கள். அதுசமயம் சுப்ஹுத் தொழுகைக்கு வந்தார்கள். அதுசமயம் சுப்ஹுத் தொழுகைக்காக ‘முஅத்தின்” இகாமத் கூறினார். தான் வித்ருத் தொழுது கொள்வதற்காகக் கூறி அவரை உபாதா(ரலி) அவர்கள் இகாமத் கூறுவதை நிறுத்தும் படி கூறினார்கள். (வித்ருத் தொழுததும்) பின்பு மக்களுக்கு சுப்ஹ் தொழ வைத்தார்கள் என யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


كَانَ عُبَادَةُ بْنُ الصَّامِتِ يَؤُمُّ قَوْمًا فَخَرَجَ يَوْمًا إِلَى الصُّبْحِ فَأَقَامَ الْمُؤَذِّنُ صَلَاةَ الصُّبْحِ فَأَسْكَتَهُ عُبَادَةُ حَتَّى «أَوْتَرَ ثُمَّ صَلَّى بِهِمُ الصُّبْحَ»


Next Page » « Previous Page