Author: Farook

muwatta-malik-332

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

332. நான் வித்ருத் தொழும் போது சுப்ஹ் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்டால் நான் அதில் தொடர்ந்து இருப்பேன் என அப்துல்லா இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«مَا أُبَالِي لَوْ أُقِيمَتْ صَلَاةُ الصُّبْحِ وَأَنَا أُوتِرُ»


muwatta-malik-331

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

331. அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி), உபாதா இப்னு ஸாமித்(ரலி), காஸிம் இப்னு முஹம்மத்(ரலி), அப்துல்லா இப்னு ஆமிர் இப்னு ராபிஆ(ரலி) ஆகியோர் (வித்ரைத் தவற விட்டு விட்டார்கள்) பஜ்ரு தொழுகைக்குப் பின் வித்ருத் தொழுவார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அறிவிக்கின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، وَعُبَادَةَ بْنَ الصَّامِتِ، وَالْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ وَعَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ، قَدْ «أَوْتَرُوا بَعْدَ الْفَجْرِ»


muwatta-malik-330

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 74

பஜ்ருத் தொழுகைக்குப் பின் வித்ருத் தொழுகை

330. அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கண் தொரியாது போன் போது, ஒருமுறை தூங்கி விழித்ததும், தன் ஊழியரை அழைத்து, ”மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்”” என்று கூறினார்கள். ஊழியர் வெளியே போய் விட்டு, திரும்ப வந்து, ” மக்கள் சுப்ஹு தொழுது முடித்து விட்டனர்”” என்று கூறினார். உடனே அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் எழுந்து வித்ருத் தொழுதார்கள். பின்பு சுபுஹுத் தொழுதார்கள் என ஸயீத் இப்னு ஜுபைர் கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَقَدَ ثُمَّ اسْتَيْقَظَ، فَقَالَ لِخَادِمِهِ: انْظُرْ مَا صَنَعَ النَّاسُ – وَهُوَ يَوْمَئِذٍ قَدْ ذَهَبَ بَصَرُهُ – فَذَهَبَ الْخَادِمُ ثُمَّ رَجَعَ، فَقَالَ: قَدِ انْصَرَفَ النَّاسُ مِنَ الصُّبْحِ، فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ «فَأَوْتَرَ ثُمَّ صَلَّى الصُّبْحَ»


muwatta-malik-328

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

328. மஹ்ரிப் தொழுகை தான் பகல் நேரத் தொழுகையின் வித்ராகும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள் என அப்துல்லா இப்னு தீனார் கூறுகின்றார்கள்.


«صَلَاةُ الْمَغْرِبِ وِتْرُ صَلَاةِ النَّهَارِ»


muwatta-malik-327

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

327. ஸஹ்து இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் இஷாத் தொழுகைக்குப் பின் ஒரு ரக்அத் வித்ருத் தொழுவார்கள் என இப்னு ஷிஹாப் அறிவிக்கின்றார்கள்.

நம்மிடத்தில் ஒரு ரக்அத் தொழ அனுமதியில்லை. வித்ரின் குறைந்த பட்சம் மூன்று ரக்அத்களே என்று மாலிக் (ரஹ்( கூறுகின்றார்கள்.


أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ كَانَ «يُوتِرُ بَعْدَ الْعَتَمَةِ بِوَاحِدَةٍ»

قَالَ مَالِكٌ: «وَلَيْسَ عَلَى هَذَا، الْعَمَلُ عِنْدَنَا، وَلَكِنْ أَدْنَى الْوِتْرِ ثَلَاثٌ»


muwatta-malik-326

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

326. தனது தேவைகளை நிறைவேற்றுவதற்காக அப்துல்லா இப்ன உமர்(ரலி) அவர்கள் இரண்டு ரக்அத் (தொழுகை)க்கும் வித்ரின் ஒரு ரக்அத் (தொழுகை)க்கும் இடையே ஸலாம் கொடுப்பார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يُسَلِّمُ بَيْنَ الرَّكْعَتَيْنِ وَالرَّكْعَةِ فِي الْوِتْرِ، حَتَّى يَأْمُرَ بِبَعْضِ حَاجَتِهِ»


muwatta-malik-325

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

325. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுடன் மக்காவிற்கு போகும் வழியில் நானும் இருந்தேன். அதுசமயம் வானத்தை மேகம் மூடியது. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் சுப்ஹு நேரம் வந்து விடுமோ என எண்ணி, ஒரு ரக்அத் வித்ருத் தொழுதார்கள். பின்பு மேகம் விலகியதும் இது இரவு நேரம் தான். (இன்னும் சுப்ஹு வரவில்லை) என அறிந்தார்கள். உடனே இன்னுமொரு ரக்அத் தொழுது (முந்தி தொழுத ஒரு ரக்அத்தை) இரண்டாக்கினார்கள். பின்பு அதற்குப் பிறகு இரண்டு, இரண்டு ரக்அத்களாக தொழுதார்கள். அதன் பின் சுப்ஹு நேரம் வந்து விடும் என எண்ணி, ஒரு ரக்அத் வித்ருத் தொழுதார்கள் என நாபிஉ(ரலி) அறிவிக்கின்றார்கள்.


كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بِمَكَّةَ وَالسَّمَاءُ مُغِيمَةٌ، فَخَشِيَ عَبْدُ اللَّهِ الصُّبْحَ، «فَأَوْتَرَ بِوَاحِدَةٍ، ثُمَّ انْكَشَفَ الْغَيْمُ، فَرَأَى أَنَّ عَلَيْهِ لَيْلًا فَشَفَعَ بِوَاحِدَةٍ، ثُمَّ صَلَّى بَعْدَ ذَلِكَ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ، فَلَمَّا خَشِيَ الصُّبْحَ أَوْتَرَ بِوَاحِدَةٍ»


muwatta-malik-324

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

324. ஒருவர் தூங்கினால் சுப்ஹு வந்து விடும் என அஞ்சினால் அவர் தூங்கும் முன்பே வித்ருத் தொழட்டும். இரவின் பிற்பகுதியில் ஒருவர் விழிக்க முடியும் என்று இருந்தால் அவர் தன் வித்ரை இறுதி நேரத்திலேயே தொழட்டும் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்ளக் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


«مَنْ خَشِيَ أَنْ يَنَامَ حَتَّى يُصْبِحَ، فَلْيُوتِرْ قَبْلَ أَنْ يَنَامَ. وَمَنْ رَجَا أَنْ يَسْتَيْقِظَ آخِرَ اللَّيْلِ فَلْيُؤَخِّرْ وِتْرَهُ»


muwatta-malik-323

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

323. ஒருவர் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ‘வித்ருத் தொழுகை கடமையானதா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்களும் வித்ருத் தொழுதுள்ளார்கள். நபித் தோழர்களும் வித்ருத் தொழுதுள்ளார்கள் என்று பதில் கூறினார்கள். மீண்டும் அம்மனிதர் அதே கேள்வியைக் கேட்க அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களும் அதே பதிலைக் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ رَجُلًا سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ عَنِ الْوِتْرِ أَوَاجِبٌ هُوَ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: قَدْ أَوْتَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَوْتَرَ الْمُسْلِمُونَ،

فَجَعَلَ الرَّجُلُ يُرَدِّدُ عَلَيْهِ وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَقُولُ: «أَوْتَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَوْتَرَ الْمُسْلِمُونَ»


muwatta-malik-322

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

322. அபூபக்கர்(ரலி) அவர்கள் படுக்கைக்கு வந்து (தூங்க விரும்பி) விட்டால் வித்ருத் தொழுது விடுவார்கள். உமர்(ரலி) அவர்கள் இரவின் பிற்பகுதியில் வித்ருத் தொழுவார்கள். நானோ என் படுக்கைக்கு (தூங்க) வந்து விட்டால் வித்ரு தொழுது விடுவேன் என்று ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


«كَانَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ فِرَاشَهُ أَوْتَرَ»،

وَكَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ «يُوتِرُ آخِرَ اللَّيْلِ».

قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ: فَأَمَّا أَنَا فَإِذَا جِئْتُ فِرَاشِي أَوْتَرْتُ


Next Page » « Previous Page