Author: Farook

muwatta-malik-311

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

311. உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ் நாடிய அளவுக்கு இரவில் தொழுவார்கள். இரவின் இறுதிப்பகுதி வந்து விட்டால் தன் குடும்பத்தினரை தொழுதிட எழுப்புவார்கள். அவர்களிடம் தொழுகை, தொழுகை (வாருங்கள்) என்று கூறுவார்கள். பின்பு தாஹா அத்தியாயத்தில் உள்ள 133 வசனத்தை ஓதுவார்கள் என அஸ்லம் கூறுகின்றார்கள்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ مَا شَاءَ اللَّهُ، حَتَّى إِذَا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ، أَيْقَظَ أَهْلَهُ لِلصَّلَاةِ. يَقُولُ لَهُمُ: ” الصَّلَاةَ الصَّلَاةَ ثُمَّ يَتْلُو هَذِهِ الْآيَةَ {وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا، لَا نَسْأَلُكَ رِزْقًا، نَحْنُ نَرْزُقُكَ، وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى} [طه: 132]


muwatta-malik-310

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

310. இரவில் தொழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை சுட்டிக் காட்டி, இப்பெண் யார்? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இப்பெண் துவைத் அவர்களின் மகள் ஹவ்லா ஆகும். இவர் இரவில் தூங்குவதே இல்லை. (தொழுது கொண்டே இருப்பார்) என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது.

(இதைக் கேட்ட) அவர்களின் முகத்தில் வெறுப்பின் அடையாளத்தை நான் பார்க்கும் அளவிற்கு அவர்கள் வெறுப்படைந்தார்கள். பின்பு, ‘நிச்சயமாக நீங்கள் சடையும் அளவுக்கு (நற்செயல் செய்யுங்கள் என்று கூறி) சடைவு அடையச் செய்யவில்லை. உங்களால் இயன்ற அளவுக்கு வணக்கத்தைச் செய்யுங்கள் என்று கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக இஸ்மாயீல் இப்னு ஹகீம் கூறுகின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعَ امْرَأَةً مِنَ اللَّيْلِ تُصَلِّي، فَقَالَ: «مَنْ هَذِهِ؟» فَقِيلَ لَهُ: هَذِهِ الْحَوْلَاءُ بِنْتُ تُوَيْتٍ لَا تَنَامُ اللَّيْلَ، فَكَرِهَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى عُرِفَتِ الْكَرَاهِيَةُ فِي وَجْهِهِ، ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا، اكْلَفُوا مِنَ الْعَمَلِ مَا لَكُمْ بِهِ طَاقَةٌ»


muwatta-malik-309

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

309. தொழும் போது உங்களில் ஒருவருக்கேனும் தூக்கம் வந்தால் அவரை விட்டும் தூக்கம் கலையும் வரை அவர் (படுத்துத்) தூங்கட்டும். ஏனென்றால் தூங்கியவாறே தொழுபவர், (தொழுகையில்) பாவமன்னிப்புக் கேட்பதற்கு பதிலாக தன்னையே திட்டவே நோரிடும் என்பதை அவர் அறிய மாட்டார். (எனவே முதலில் தூங்கட்டும்) என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ، فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ، لَا يَدْرِي لَعَلَّهُ يَذْهَبُ يَسْتَغْفِرُ فَيَسُبَّ نَفْسَهُ»


muwatta-malik-308

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

308. நபி(ஸல்) அவர்களின் முன் (அவர்கள் தொழும் போது) நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அதுசமயம் என் கால்கள் அவர்களின் தொழும் திசையில் இருந்தது. அவர்கள் ஸஜ்தா செய்யும் போது என்னைச் சுரண்டுவார்கள். நான் கால்களைச் சுருக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்கு வந்து விட்டால் நான் கால்களை நீட்டிக் கொள்வேன். அன்றைய காலத்தில் வீடுகளில் விளக்கு இருந்ததில்லை என ஆயிஷா(ரலி) அவர்கள் (கூறியதாக அபூ ஸலமா இப்னு அப்துர் ரஹ்மான்) அறிவிக்கின்றார்கள்.


«كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرِجْلَايَ فِي قِبْلَتِهِ، فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَيَّ. فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا». قَالَتْ: «وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ»


muwatta-malik-307

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 71

இரவுத் தொழுகை பற்றி..

307. ஒருவர் இரவுத் தொழுகை தொழ நினைத்து இருந்து, அவருக்கு தூக்கம் வந்து தூங்கி விட்டால் அல்லாஹ் அவருக்கு தொழ கூலியையும் நல்குவான். அவரின் தூக்கமும் அவருக்கு தர்மம் (செய்த கூலி) ஆகி விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்


«مَا مِنِ امْرِئٍ تَكُونُ لَهُ صَلَاةٌ بِلَيْلٍ، يَغْلِبُهُ عَلَيْهَا نَوْمٌ، إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ أَجْرَ صَلَاتِهِ، وَكَانَ نَوْمُهُ عَلَيْهِ صَدَقَةً»


muwatta-malik-306

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

306. ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஆரம்பத்தில் அடிமையாக இருந்து, பின்பு அவர்களால் உரிமை விடப்பட்ட அபூ அம்ரு என்ற தக்வான்(ரலி) அவர்கள் ரமளானில் ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்பதற்காக குர்ஆன் ஓதுவார்கள் என உர்வா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّ ذَكْوَانَ أَبَا عَمْرٍو وَكَانَ عَبْدًا لِعَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْتَقَتْهُ عَنْ دُبُرٍ مِنْهَا كَانَ «يَقُومُ يَقْرَأُ لَهَا فِي رَمَضَانَ»


muwatta-malik-305

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

305. ரமளானில் (இரவுத் தொழுகையை முடித்து விட்டு) நாங்கள் திரும்ப வந்து, சுப்ஹ் நேரம் வந்து விடுமோ என அஞ்சி சீக்கிரமாக உணவைத் தயாரிக்கும்படி ஊழியர்களை அவசரப்படுத்துவோம். அபூபக்கர்(ரலி) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு அபூபக்கர் கூறுகின்றார்கள்.


«كُنَّا نَنْصَرِفُ فِي رَمَضَانَ، فَنَسْتَعْجِلُ الْخَدَمَ بِالطَّعَامِ مَخَافَةَ الْفَجْرِ»


muwatta-malik-304

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

304. மக்கள் ரமளானில் காபிர்களை அதிகமாக சந்திக்க நான் பார்த்துள்ளேன். (ரமளானில் இரவுத் தொழுகையில்) எட்டு ரக்அத்தில் தொழ வைப்பவர் பகரா என்ற இரண்டாவது அத்தியாயத்தை ஓதுவார். அதே பகராவை 12 ரக்அத்களில் ஓதி தொழ வைத்தால் மக்கள் அதை இலகுவாகக் கருதுவார்கள் என அஹ்ரஜ் கூறியதாக தாவூத் இப்னு ஹுஸைன் கூறுகின்றார்கள்.


«مَا أَدْرَكْتُ النَّاسَ إِلَّا وَهُمْ يَلْعَنُونَ الْكَفَرَةَ فِي رَمَضَانَ» قَالَ: «وَكَانَ الْقَارِئُ يَقْرَأُ سُورَةَ الْبَقَرَةِ فِي ثَمَانِ رَكَعَاتٍ فَإِذَا قَامَ بِهَا فِي اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً رَأَى النَّاسُ أَنَّهُ قَدْ خَفَّفَ»


muwatta-malik-303

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

303. உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ரமளான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர்.

அறிவிப்பவர் : யஸீத் பின் ரூமான்

 


«كَانَ النَّاسُ يَقُومُونَ فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي رَمَضَانَ بِثَلَاثٍ وَعِشْرِينَ رَكْعَةً»


muwatta-malik-302

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

302. உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஃஹ்பு (ரலி) அவர்களையும், தமீமுத்தாரி (ரலி) அவர்களையும் மக்களுக்கு 11 ரக்அத் தொழ வைக்கும்படி கட்டளையிட்டார்கள்.

தொழுகையில் நீண்ட நேரம் நிற்பதால் (இயலாது போய்) கம்பின் மீது நாங்கள் சாய்ந்து கொள்ளும் அளவுக்கு நூற்றுக்கணக்கான வசனங்களை ஓதுவார். நாங்கள் சுபுஹின் நேரம் சமீபிக்கும் போது வீடு திரும்புவோம், என ஸாயிப் பின் யஸீத் கூறுகின்றார்கள்.


أَمَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أُبَيَّ بْنَ كَعْبٍ وَتَمِيمًا الدَّارِيَّ أَنْ يَقُومَا لِلنَّاسِ بِإِحْدَى عَشْرَةَ رَكْعَةً

قَالَ: وَقَدْ «كَانَ الْقَارِئُ يَقْرَأُ بِالْمِئِينَ، حَتَّى كُنَّا نَعْتَمِدُ عَلَى الْعِصِيِّ مِنْ طُولِ الْقِيَامِ، وَمَا كُنَّا نَنْصَرِفُ إِلَّا فِي فُرُوعِ الْفَجْرِ»


Next Page » « Previous Page