Author: Abdul Hakkim

Alilal-Ibn-Abi-Hatim-1896

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1896.


إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ : عِبادِي كُلُّكُم مُذنِبٌ إِلاَّ مَن عافَيتُ وَذَكَرَ الحَدِيثَ بِطُولِهِ.
قالَ أَبِي : حَدَّثَنا مُحَمَّدُ بنُ يَزِيدَ بنِ سِنانٍ ، عَن أَبِيهِ ، عَن زَيدٍ يَعنِي : ابنَ أَبِي أُنَيسَةَ ، عَن مُوسَى بنِ المُسَيَّبِ ، عَن شَهرٍ ، عَن عَبدِ الرَّحْمَنِ بنِ غَنمٍ ، عَن أَبِي ذَرٍّ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ أَشبَهُ.


Alilal-Ibn-Abi-Hatim-1804

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1804.


يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ : يا عِبادِي كُلُّكُم مُذنِبٌ وَذَكَرَ الحَدِيثَ.
فَقالا : رَواهُ حَمّادُ بنُ سَلَمَةَ ، عَن عَلِيِّ بنِ زَيدٍ ، عَن شَهرِ بنِ حَوشَبَ ، عَن تَبِيعٍ قَولُهُ ؟ قالَ : فَكَأنَ هَذا يَدفَعُ ذاكَ.


Almujam-Alawsat-4057

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4057. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் வீட்டின் முற்றங்களை (வளாகத்தைச்) சுத்தமாக வையுங்கள். யூதர்கள் தங்கள் வீட்டின் முற்றங்களை (வளாகத்தைச்) சுத்தமாக வைப்பதில்லை.

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)


«طَهِّرُوا أَفْنِيَتَكُمْ، فَإِنَّ الْيَهُودَ لَا تُطَهِّرُ أَفْنِيَتَهَا»


Hakim-152

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

152. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக, அல்லாஹ் தாராள குணம் கொண்டவன்; தாராள குணத்தை விரும்புகிறான். மேலும், அவன் உயர்வான நற்குணங்களை விரும்புகிறான்; இழிவானவற்றை வெறுக்கிறான்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் இருவகை அறிவிப்பாளர்தொடர்களும் பலமானது ஆகும். ஆனால், இந்த ஹதீஸை புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் தங்களின் நூல்களில் இடம்பெறச் செய்யவில்லை.

ஹதீஸ் எண்-151 இல் இடம்பெறும் ஹஜ்ஜாஜ் பின் ஸுலைமான் பின் கமரீ என்பவர் எகிப்து நாட்டச் சேர்ந்தவர். இவர் நம்பிக்கைக்குரியவர், பலமானவர் ஆவார். ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை முஃளலாக அதாவது அறிவிப்பாளர்தொடரில் சிலரை விட்டுவிட்டு அறிவித்துள்ளதால் புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் இதை தவிர்த்திருக்கலாம் என்று தெரிகிறது.


«إِنَّ اللَّهَ كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ، وَمَعَالِيَ الْأَخْلَاقِ، وَيُبْغِضُ سَفْسَافَهَا»


Hakim-151

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

151. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக, அல்லாஹ் தாராள குணம் கொண்டவன்; தாராள குணத்தை விரும்புகிறான். மேலும், அவன் உயர்வான நற்குணங்களை விரும்புகிறான்; இழிவானவற்றை வெறுக்கிறான்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


«إِنَّ اللَّهَ كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ وَيُحِبُّ مَعَالِيَ الْأَخْلَاقِ وَيَكْرَهُ سَفْسَافَهَا»


Abu-Dawood-4206

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4206. ரிஃபாஆ பின் யஸ்ரிபீ-அபூரிம்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தையுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுக்கு மருதாணியால் சாயமிடப்பட்ட, காது மடல்கள் வரை தொங்கும் தலைமுடி இருந்தது. மேலும் அவர்கள் இரண்டு பச்சை நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள்.


انْطَلَقْتُ مَعَ أَبِي نَحْوَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَإِذَا هُوَ «ذُو وَفْرَةٍ بِهَا رَدْعُ حِنَّاءٍ، وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ


Abu-Dawood-4207

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4207. ஹதீஸ் எண்-4206 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் சிறிது கூடுதலாக வந்துள்ளது. அதன் விவரம்:

அப்போது என் தந்தை, ‘உங்கள் முதுகில் உள்ளதை எனக்குக் காட்டுங்கள். நான் ஒரு மருத்துவன். (அதற்கு மருத்துவம் செய்கிறேன்)’ என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே மருத்துவன் (உண்மையில் குணப்படுத்துபவன்). மாறாக, நீர் ஒரு இரக்க குணமுள்ளவர். அதைப் படைத்தவனே அதற்கு மருத்துவன் ஆவான்” என்று கூறினார்கள்.


فِي هَذَا الْخَبَرِ، قَالَ: فَقَالَ لَهُ أَبِي: أَرِنِي هَذَا الَّذِي بِظَهْرِكَ، فَإِنِّي رَجُلٌ طَبِيبٌ، قَالَ: «اللَّهُ الطَّبِيبُ، بَلْ أَنْتَ رَجُلٌ رَفِيقٌ، طَبِيبُهَا الَّذِي خَلَقَهَا»


Musannaf-Abdur-Razzaq-8603

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8603. ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் இரண்டு விஷயங்களை மனனமிட்டுள்ளேன்.

(அவற்றில் ஒன்று) அவர்கள் சொன்னார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் ‘முஹ்ஸின்’ நல்லமுறையில் நடந்துக் கொள்பவன்). அவன் ஒவ்வொரு விஷயத்திலும் நல்லமுறையில் நடந்துக் கொள்வதை விரும்புகிறான். எனவே, நீங்கள் (தண்டனைக்காக) கொலை செய்தால், அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் (பிராணிகளை) அறுத்தால், அழகிய முறையில் அறுங்கள்.

மற்றொன்று: உங்களில் ஒருவர் தமது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளட்டும். மேலும், அவர் அறுக்கும் பிராணிக்கு நிம்மதியளிக்கட்டும்!


حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اثْنَتَيْنِ قَالَ: «إِنَّ اللَّهَ مُحْسِنٌ يُحِبُّ الْإِحْسَانَ إِلَى كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، وَلْيُرِحْ ذَبِيحَتَهُ»


Tirmidhi-2799

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

தூய்மை செய்வது குறித்து வந்துள்ளவை.

2799. ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன்; தூய்மையை விரும்புகிறவன்.

சுத்தமானவன்; சுத்தத்தை விரும்புகிறவன்.

கண்ணியமானவன்; கண்ணியத்தை விரும்புகிறவன்.

கொடையாளன்; கொடை வழங்குவதை விரும்புகிறவன்.

ஆகவே, உங்கள் வீட்டின் முற்றங்களை (வளாகத்தைச்) சுத்தமாக வையுங்கள். யூதர்களுக்கு ஒப்பாக ஆகாதீர்கள்.

அறிவிப்பவர்: ஸாலிஹ் பின் அபூஹஸ்ஸான் (ரஹ்)


மேலும் ஸாலிஹ் பின் அபூஹஸ்ஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதை, முஹாஜிர் பின் மிஸ்மார் (ரஹ்) அவர்களிடம் நான் கூறியபோது, “இதேபோன்ற ஹதீஸை ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரஹ்) அவர்கள், தம் தந்தை ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தார்கள்.

எனினும், அதில், “உங்களின் முற்றங்களைச் சுத்தமாக வையுங்கள்” என்றே இடம்பெற்றிருந்தது. (யூதர்களுக்கு ஒப்பாவது பற்றி குறிப்பிடவில்லை)” என்று முஹாஜிர் பின் மிஸ்மார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


«إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ، نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ، كَرِيمٌ يُحِبُّ الكَرَمَ، جَوَادٌ يُحِبُّ الجُودَ، فَنَظِّفُوا – أُرَاهُ قَالَ – أَفْنِيَتَكُمْ وَلَا تَشَبَّهُوا بِاليَهُودِ»

قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِمُهَاجِرِ بْنِ مِسْمَارٍ، فَقَالَ: حَدَّثَنِيهِ عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ، إِلَّا أَنَّهُ قَالَ: «نَظِّفُوا أَفْنِيَتَكُمْ».


Next Page » « Previous Page