Author: Abdul Hakkim

Tirmidhi-3604

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3604. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரக வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். மண்ணறை வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.


«اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ القَبْرِ. اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، وَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ»


Tirmidhi-3966

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3966. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் மாலை நேரத்தில், “அஊது பி கலிமாதில்லாஹித் தாம்மாதி மின் ஷர்ரி மா கலக்” என்று மூன்று முறை கூறினால் அந்த இரவில் எந்த விஷக்கடியும் அவரை துன்புறுத்தாது.

(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலமாக அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோருகின்றேன்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எங்களின் குடும்பத்தினர் இப்பிரார்த்தனையை கற்றுக் கொண்டார்கள். மேலும் அதனை ஒவ்வொரு இரவிலும் வழக்கமாகச் சொல்லி வந்தார்கள். அந்நிலையில் அவர்களிலுள்ள பெண்ணொருத்தியை விஷ ஜந்து தீண்டிவிட்டது. அதனால் அவளுக்கு வலியேதும் ஏற்படவில்லை.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இதே அறிவிப்பாளர்தொடரில் ஸுஹைல் பின் அபூஸாலிஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களும் இந்த நபிமொழியை அறிவித்துள்ளார்கள். இவ்வாறே ஸுஹைல் (ரஹ்) அவர்களிடமிருந்து உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களும் மற்றவர்களும் இந்த நபிமொழியை அறிவித்துள்ளார்கள். எனினும் அவர்கள் (அறிவிப்பாளர்தொடரில்) அபூஹுரைரா (ரலி) அவர்களைக் குறிப்பிடவில்லை.


” مَنْ قَالَ حِينَ يُمْسِي ثَلَاثَ مَرَّاتٍ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، لَمْ يَضُرَّهُ حُمَةٌ تِلْكَ اللَّيْلَةَ ” قَالَ سُهَيْلٌ: فَكَانَ أَهْلُنَا تَعَلَّمُوهَا فَكَانُوا يَقُولُونَهَا كُلَّ لَيْلَةٍ فَلُدِغَتْ جَارِيَةٌ مِنْهُمْ فَلَمْ تَجِدْ لَهَا وَجَعًا


Tirmidhi-3967

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

3967. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு பிரார்த்தனையை நான் மனனம் செய்து கொண்டேன். நான் அதனை விடாமல் கூறுவேன். அது,

“அல்லாஹும்மஜ்னீ உ அள்ளிமு ஷுக்ரக, வ உக்ஸிரு திக்ரக, வ அத்தபிஉ நஸீஹதக, வஅஹ்ஃபளு வஸிய்யதக”

(பொருள்: அல்லாஹ்வே! உனக்கு நான் கண்ணியமான முறையில் நன்றி செலுத்துபவனாகவும், உன்னை அதிகமாக நினைவுகூர்பவனாகவும், உனது அறிவுரையை பின்பற்றுபனாகவும், உனது சட்ட திட்டங்களை பேணி நடப்பவனாகவும் என்னை ஆக்குவாயாக)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


دُعَاءٌ حَفِظْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا أَدَعُهُ: «اللَّهُمَّ اجْعَلْنِي أُعَظِّمُ شُكْرَكَ، وَأُكْثِرُ ذِكْرَكَ، وَأَتَّبِعُ نَصِيحَتَكَ، وَأَحْفَظُ وَصِيَّتَكَ»


raavi-32496-அம்ர் பின் மாலிக்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அம்ர் பின் மாலிக் அன்னுக்ரீ - عمرو بن مالك النكري இறப்பு: ஹி-129 தரம்: இயற்பெயர்: அம்ர் தந்தை பெயர்: மாலிக் புனைப்பெயர்: அபூயஹ்யா, அபூமாலிக் ஊர் பெயர்: பஸரா பிறப்பு: ஹிஜ்ரி-. இறப்பு: ஹிஜ்ரி-129. கால கட்டம்: 6. அம்ர் பின் மாலிக் ...

Tirmidhi-2346

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

2346. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தன் கூட்டத்தாரிடையே அச்சமில்லாமலும், தன் உடல் ஆரோக்கியமாகவும் இருந்து, அன்றைய உணவைச் சேர்த்துவிட்டால் அவருக்கு உலகமே கிடைத்து விட்டது போலாகும்.

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன் (ரலி)?


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும். மர்வான் பின் முஆவியா என்பவரின் வழியாகவே இந்தச் செய்தியை நாம் அறிகிறோம்.

“ஹீஸத் – حِيزَتْ” என்பதற்கு திரட்டப்பட்டது, சேகரிக்கப்பட்டது என்று பொருள்.

இதே செய்தியை முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ அவர்கள், ஹுமைதீ —> மர்வான் பின் முஆவியா … என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அபுத்தர்தா (ரலி) அவர்களின் வழியாகவும் வந்துள்ளது.


«مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا»


raavi-32332-அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத் – عمرو بن شعيب بن محمد بن عبد الله بن عمرو இறப்பு: ஹி-118 தரம்: இவரைப் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் இந்த தவறுக்கு காரணம் இவரிடமிருந்து அறிவித்த பலவீனமானவர்கள் தான். இவர் காரணமல்ல. இவரை ஆரம்பகால மூத்த அறிஞர்கள் பலமானவர் என்று முடிவு செய்துள்ளனர். இயற்பெயர்: அம்ர் தந்தை பெயர்: ஷுஐப்...

raavi-22494-அப்துர்ரஹ்மான் பின் வாகித்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அப்துர்ரஹ்மான் பின் வாகித் பின் முஸ்லிம் – عبد الرحمن بن واقد بن مسلم இறப்பு: ஹி-247 தரம்: மக்பூல் தரம்-இவர் தனித்து அறிவித்தால் ஏற்கப்படாது. இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் தந்தை பெயர்: வாகித் புனைப்பெயர்: அபூமுஸ்லிம் வமிசப் பெயர்: வாகிதீ ஊர் பெயர்: பஸரா, பஃக்தாத் பிறப்பு: ஹிஜ்ரி-. இறப்பு: ஹிஜ்ரி-74. கால கட்டம்: 10.  

Hakim-3766

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3766.


لَمَّا قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُورَةَ الرَّحْمَنِ عَلَى أَصْحَابِهِ حَتَّى فَرَغَ قَالَ: ” مَا لِي أَرَاكُمْ سُكُوتًا لَلْجِنُّ كَانُوا أَحْسَنَ مِنْكُمْ رَدًّا، مَا قَرَأْتُ عَلَيْهِمْ مِنْ مَرَّةٍ، {فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ} [الرحمن: 13] إِلَّا قَالُوا: وَلَا بِشَيْءٍ مِنْ نِعْمَتِكَ رَبَّنَا نُكَذِّبُ فَلَكَ الْحَمْدُ


Tirmidhi-3291

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

அத்தியாயம்: 55

அர்ரஹ்மான் – அளவிலா அருளாளன்.

3291. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் சென்று (அல்குர்ஆன்: 55:1-78) எனும் அர்ரஹ்மான் அத்தியாயத்தை அதன் ஆரம்பம் முதல் இறுதி வரை ஓதிக் காட்டினார்கள். ஆனால் அவர்கள் அமைதியாக இருந்தனர்.

உடனே, நபி (ஸல்) அவர்கள், “நான் இதை ஜின்களிடம் ‘ஜின்களின் இரவில்’ ஓதிக்காட்டினேன். அவர்கள் உங்களைவிடச் சிறப்பாகப் பதிலளித்தார்கள். நான், ‘(மக்களே, ஜின்களே!) உங்கள் இருவரின் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்யாக்குவீர்கள்?’ என்ற வசனத்தைக் கடக்கும்போதெல்லாம், ‘எங்களின் இரட்சகனே! உனது அருட்கொடைகளில் எதையும் நாங்கள் பொய்யாக்கவில்லை. உனக்கே எல்லாப் புகழும்’ என்று அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதை வலீத் பின் முஸ்லிம் —> ஸுஹைர் பின் முஹம்மத் என்ற அறிவிப்பாளர்தொடர் வழியாகவே நாம் அறிகிறோம்.

அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “ஷாம் நாட்டின் ஸுஹைர் பின் முஹம்மத் என்பவர் வேறு. ஈராக் நாட்டின் ஸுஹைர் பின் முஹம்மத் என்பவர் வேறு. (இவ்வாறு அஹ்மத் அவர்கள் கூறிய காரணம்) ஷாம்

خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ، فَقَرَأَ عَلَيْهِمْ سُورَةَ الرَّحْمَنِ مِنْ أَوَّلِهَا إِلَى آخِرِهَا فَسَكَتُوا، فَقَالَ: ” لَقَدْ قَرَأْتُهَا عَلَى الجِنِّ لَيْلَةَ الجِنِّ فَكَانُوا أَحْسَنَ مَرْدُودًا مِنْكُمْ، كُنْتُ كُلَّمَا أَتَيْتُ عَلَى قَوْلِهِ {فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ} [الرحمن: 13] قَالُوا: لَا بِشَيْءٍ مِنْ نِعَمِكَ رَبَّنَا نُكَذِّبُ فَلَكَ الحَمْدُ “


Bazzar-5853

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

5853. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் (அல்குர்ஆன்: 55:1-78) எனும் அர்ரஹ்மான் அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள். அப்போது அவர்கள் அமைதியாக இருந்தனர். உடனே, நபி (ஸல்) அவர்கள், “ஜின்கள் உங்களை விடச் சிறப்பாகப் பதிலளித்தார்கள்.

நான் அவர்களிடம், “உங்கள் இருவரின் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்யாக்குவீர்கள்?” என்ற வசனத்தை ஓதியபோதெல்லாம், “எங்களின் இரட்சகனே! உனது அருட்கொடைகளில் எதையும் நாங்கள் பொய்யாக்கவில்லை. உனக்கே புகழ் அனைத்தும்” என்று பதிலளித்தார்கள்” எனக் கூறினார்கள்.


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த அறிவிப்பாளர்தொடர் வழியாக மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.


أَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَرَأَ سُورَةَ الرَّحْمَنِ عَلَى أَصْحَابِهِ، فَسَكَتُوا، فَقَالَ: لقد كان الجن أحسن ردًا منكم، كلما قرأتُ عليهم: {فبأي آلاء ربكما تكذبان} ، قَالُوا: لا بِشَيْءٍ مِنْ آلائِكَ رَبَّنَا نكذبُ، فَلَكَ الْحَمْدُ.


Next Page » « Previous Page