Author: Abdul Hakkim

Tirmidhi-3971

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

3971. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தான் விரும்புவது என்ன என்பது குறித்து நன்கு சிந்திக்கவும்.  ஏனெனில் அவருடைய விருப்பத்திலிருந்து அவருக்காகப் பதிவு செய்யப்படுவது பற்றி அவருக்குத் தெரியாது.

அறிவிப்பவர்: அபூஸலமா (ரஹ்)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.


«لِيَنْظُرَنَّ أَحَدُكُمْ مَا الَّذِي يَتَمَنَّى فَإِنَّهُ لَا يَدْرِي مَا يُكْتَبُ لَهُ مِنْ أُمْنِيَّتِهِ»


Hakim-7865

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7865. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், நயவஞ்சகனை “ஸய்யிதே-தலைவரே” என்று அழைத்தால் அவர் தனது இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டார்.

அறிவிப்பவர்: புரைதா பின் ஹுஸைப் (ரலி)


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் சரியானது. ஆனால் இதை புகாரியும் முஸ்லிமும் தங்கள் நூல்களில் பதிவு செய்யவில்லை.


 


«إِذَا قَالَ الرَّجُلُ لِلْمُنَافِقِ يَا سَيِّدُ فَقَدْ أَغْضَبَ رَبَّهُ تَبَارَكَ وَتَعَالَى»


Abu-Dawood-4977

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4977. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நயவஞ்சகனை “ஸய்யித்-தலைவர்” என்று அழைக்காதீர்கள். ஏனெனில், அவன் தலைவனாக இருந்தால், நீங்கள் உங்கள் இறைவனுக்குக் கோபத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.

அறிவிப்பவர்: புரைதா பின் ஹுஸைப் (ரலி)


«لَا تَقُولُوا لِلْمُنَافِقِ سَيِّدٌ، فَإِنَّهُ إِنْ يَكُ سَيِّدًا فَقَدْ أَسْخَطْتُمْ رَبَّكُمْ عَزَّ وَجَلَّ»


Abu-Dawood-4806

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4806. அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆமிர் குலத்தார் குழுவுடன் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நாங்கள், “நீங்கள் எங்கள் ஸய்யித்-தலைவர்” என்றோம். அதற்கு அவர்கள், “ஸய்யித் வளமும், உயர்வும் கொண்ட அல்லாஹ் ஒருவனே” என்றார்கள். “சிறப்பாலும் செல்வாக்காலும் எங்களுள் சிறந்தவர் நீங்கள்” என்றோம். அதற்கு அவர்கள், “உங்களுடைய கூற்றைக் கூறுங்கள். அல்லது அதன் ஒரு பகுதியைக் கூறுங்கள். ஷைத்தான் உங்களை இழுத்துச் செல்ல வேண்டாம்” என்றார்கள்.


انْطَلَقْتُ فِي وَفْدِ بَنِي عَامِرٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقُلْنَا: أَنْتَ سَيِّدُنَا، فَقَالَ: «السَّيِّدُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى» قُلْنَا: وَأَفْضَلُنَا فَضْلًا وَأَعْظَمُنَا طَوْلًا، فَقَالَ: «قُولُوا بِقَوْلِكُمْ، أَوْ بَعْضِ قَوْلِكُمْ، وَلَا يَسْتَجْرِيَنَّكُمُ الشَّيْطَانُ»


Al-Adabul-Mufrad-211

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

211. அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆமிர் குலத்தார் குழுவுடன் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நாங்கள், “நீங்கள் எங்கள் ஸய்யித்-தலைவர்” என்றோம். அதற்கு அவர்கள், “ஸய்யித் வளமும், உயர்வும் கொண்ட அல்லாஹ் ஒருவனே” என்றார்கள். “சிறப்பாலும் செல்வாக்காலும் எங்களுள் சிறந்தவர் நீங்கள்” என்றோம். அதற்கு அவர்கள், “உங்களுடைய கூற்றைக் கூறுங்கள். அல்லது அதன் ஒரு பகுதியைக் கூறுங்கள். ஷைத்தான் உங்களை இழுத்துச் செல்ல வேண்டாம்” என்றார்கள்.


انْطَلَقْتُ فِي وَفْدِ بَنِي عَامِرٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: أَنْتَ سَيِّدُنَا، قَالَ: «السَّيِّدُ اللَّهُ» ، قَالُوا: وَأَفْضَلُنَا فَضْلًا، وَأَعْظَمُنَا طَوْلًا، قَالَ: فَقَالَ: «قُولُوا بِقَوْلِكُمْ، وَلَا يَسْتَجْرِيَنَّكُمُ الشَّيْطَانُ»


Bazzar-9273

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9273. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை மூன்று பாகங்களைக் கொண்டது. அதன் ஒரு பாகம் (தொழுவதற்கு முன் உளூ எனும்) தூய்மைச் செய்தல். மற்றொரு பாகம் ருகூஉ செய்தல், மற்றொரு பாகம் ஸஜ்தா செய்தல் ஆகியவை ஆகும்.

யார் தன் தொழுகையை அதன் முறைப்படி நிறைவேற்றுகிறாரோ, அவரது தொழுகையும், அத்துடன் அவரது மற்ற எல்லா அமல்களும் ஏற்றுக் கொள்ளப்படும். யார் தன் தொழுகையை நிறைவேற்றுவதில் குறை வைக்கிறாரோ, அவரின் தொழுகை நிராகரிக்கப்படும். அத்துடன் அவரது மற்ற அமல்களும் நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் அஃமஷ் —> அபூஸாலிஹ் —> கஅபுல் அஹ்பார் என்ற அறிவிப்பாளர்தொடரில் கஅபுல் அஹ்பார் அவர்களின் சொல்லாக வந்துள்ளதே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.

அபூஸாலிஹ் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக முஃகீரா பின் முஸ்லிம் என்பவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். இவரைப் போன்று வேறு யாரும் அறிவிக்கவில்லை என்றே நாம் அறிகிறோம்.


الصلاة ثلاثة أثلاث الطهور ثلث والركوع ثلث والسجود ثلث فمن أداها بحقها قبلت منه وقبل منه سائر عمله ومن ردت عليه صلاته رد عليه سائر عمله.


Musannaf-Abdur-Razzaq-3748

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3748. தொழுகை மூன்று பாகங்களைக் கொண்டது. அதன் ஒரு பாகம் (தொழுவதற்கு முன் உளூ எனும்) தூய்மைச் செய்தல். மற்றொரு பாகம் ருகூஉ செய்தல், மற்றொரு பாகம் ஸஜ்தா செய்தல் ஆகியவை ஆகும்.

யார் அவற்றைப் பேணிப் பாதுகாத்து தொழுகிறாரோ, அவரது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும். யார் அதில் குறை வைக்கிறாரோ, அவர் தனக்குத்தான் குறை வைத்துக் கொள்கிறார் என்று கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: அபூஸாலிஹ்-தக்வான் (ரஹ்)


” إِنَّ الصَّلَاةَ ثَلَاثَةُ أَثْلَاثٍ: ثُلْثٌ طَهُورٌ، وَثُلْثٌ رُكُوعٌ، وَثُلْثٌ سُجُودٌ، فَمَنْ حَافَظَ عَلَيْهِنَّ قُبِلْنَ مِنْهُ، وَمَنْ نَقَصَ فَإِنَّمَا يَنْقُصُ مِنْ نَفْسِهِ “


raavi-20412-ஆஸிம் பின் ளம்ரா

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஆஸிம் பின் ளம்ரா - عاصم بن ضمرة السلولي ، الكوفي இறப்பு: ஹி-74 தரம்: நடுத்தரமானவர். இயற்பெயர்: ஆஸிம் தந்தை பெயர்: ளம்ரா வமிசப் பெயர்: ஸலூலீ, கூஃபீ ஊர் பெயர்: கூஃபா பிறப்பு: ஹிஜ்ரி-. இறப்பு: ஹிஜ்ரி-74. கால கட்டம்: 3. ஆஸிம் பின் ளம்ரா என்பவரை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர். الطبقات الكبرى ط دار صادر...

Almujam-Alawsat-2580

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2580.


جِئْتُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ، فِيهِمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَأَدْرَكْتُ آخِرَ الْحَدِيثِ، ورَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ صَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الْعَصْرِ لَمْ تَمَسَّهُ النَّارُ» فَقُلْتُ بِيَدِي هَكَذَا، يُحَرِّكُ بِيَدِهِ: إِنَّ هَذَا حَدِيثٌ جَيِّدٌ فَقَالَ لِي عُمَرُ بْنُ الْخَطَّابِ: لَمَا فَاتَكَ مِنْ صَدْرِ الْحَدِيثِ أَجْوَدُ وَأَجْوَدُ، قُلْتُ: يَا ابْنَ الْخَطَّابِ، فَهَاتِ، فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ: «مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ»


Hakim-8448

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

8448. ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் மார்க்கத்திலிருந்து நீங்கள் முதலில் இழக்கப்போவது உள்ளச்சம். கடைசியாக இழக்கப்போவது தொழுகை.

இஸ்லாத்தின் பிணைப்புகள் ஒவ்வொன்றாக உடைக்கப்படும்:
பெண்கள் மாதவிடாய் காலத்தில் தொழுவார்கள்.
உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழியை, அடிக்கு அடியாக, ஒரு செருப்பு இன்னொரு செருப்பை பின்பற்றுவதைப் போல் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்களின் வழியை நீங்கள் தவறவும் மாட்டீர்கள்; அவர்கள் உங்களைவிட்டு தவறவும் மாட்டார்கள்.

பல கூட்டங்களில் இரண்டு கூட்டங்கள் மட்டும் எஞ்சும். அவற்றில் ஒரு கூட்டத்தினர் கூறுவார்கள்: “எதுக்கு ஐந்து நேரத் தொழுகைகள்? நமக்கு முன்னிருந்தவர்கள் வழிதவறிவிட்டார்கள். அல்லாஹ்வோ, “பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக!”(அல்குர்ஆன்: 11:114) என்று மட்டுமே கூறியுள்ளான். எனவே, மூன்று தொழுகைகளைத் தவிர வேறு தொழ வேண்டாம்.

மற்றொரு கூட்டத்தினர் கூறுவார்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டோரின் ஈமான் வானவர்களின் ஈமானைப் போன்றது. எனவே எங்களில் காஃபிரோ அல்லது முனாஃபிக்கோ (நயவஞ்சகரோ) இல்லை.

இந்த இரண்டு கூட்டத்தினரையும் தஜ்ஜாலுடன் அல்லாஹ் ஒன்று சேர்ப்பது அவனுக்குக் கட்டாயமானதாகும்.


” أَوَّلُ مَا تَفْقِدُونَ مِنْ دِينِكُمُ الْخُشُوعُ، وَآخِرُ مَا تَفْقِدُونَ مِنْ دِينِكُمُ الصَّلَاةُ، وَلَتُنْقَضَنَّ عُرَى الْإِسْلَامِ عُرْوَةً عُرْوَةً، وَلَيُصَلِّيَنَّ النِّسَاءُ وَهُنَّ حُيَّضٌ، وَلَتَسْلُكُنَّ طَرِيقَ مَنْ كَانَ قَبْلَكُمْ حَذْوَ الْقُذَّةِ بِالْقُذَّةِ، وَحَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ، لَا تُخْطِئُونَ طَرِيقَهُمْ، وَلَا يُخْطِأَنَّكُمْ حَتَّى تَبْقَى فِرْقَتَانِ مِنْ فِرَقٍ كَثِيرَةٍ فَتَقُولُ إِحْدَاهُمَا: مَا بَالُ الصَّلَوَاتِ الْخَمْسِ، لَقَدْ ضَلَّ مَنْ كَانَ قَبْلَنَا إِنَّمَا قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: {أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ} [هود: 114] لَا تُصَلُّوا إِلَّا ثَلَاثًا، وَتَقُولُ الْأُخْرَى: إِيمَانُ الْمُؤْمِنِينَ بِاللَّهِ كَإِيمَانِ الْمَلَائِكَةِ مَا فِينَا كَافِرٌ وَلَا مُنَافِقٌ، حَقٌّ عَلَى اللَّهِ أَنْ يَحْشُرَهُمَا مَعَ الدَّجَّالِ


Next Page » « Previous Page