ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
3093. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், அல்லாஹ்வின் தூதரே! குர்ஆனில் உள்ள மிகக் கடினமான இறைவசனத்தை நான் அறிவேன்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “ஆயிஷாவே! அது எந்த இறைவசனம்?” என்று கேட்டார்கள். நான், “யார் தீமை செய்கிறாரோ அவர் அதற்குரிய கூலியை வழங்கப்படுவார் (அல்குர்ஆன் 4:123) என்ற இறைவசனத்தைக் கூறினேன்.
அதற்கு அவர்கள், “ஆயிஷாவே! முஃமினுக்கு ஏற்படும் துன்பம், அல்லது (அவர் உடலில்) தைக்கும் முள் போன்றவற்றின் மூலம் அவர் செய்த தீய செயல்களுக்கு (இவ்வுலகிலேயே) அவருக்குக் கூலி வழங்கப்பட்டு விடுகிறது. மேலும், எவரிடம் கணக்குக் கேட்கப்படுகிறதோ அவர் தண்டிக்கப்படுவார்” என்பதை நீ அறியவில்லையா? என்று கூறினார்கள்.
நான், அவர்களிடம், “அவரிடம் இலகுவான முறையில் கணக்குக் கேட்கப்படும்” (அல்குர்ஆன் 84:8) என்று அல்லாஹ் கூறவில்லையா?” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷாவே! அது (ஒருவர் செய்தவற்றை அவருக்கு) எடுத்துக் காட்டுவதாகும். யாரிடம் துருவித் துருவி விசாரிக்கப்படுகிறதோ அவர் தண்டிக்கப்படுவார்” என்று கூறினார்கள்.
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَأَعْلَمُ أَشَدَّ آيَةٍ فِي الْقُرْآنِ؟ قَالَ: «أَيَّةُ آيَةٍ يَا عَائِشَةُ؟»، قَالَتْ: قَوْلُ اللَّهِ تَعَالَى: {مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ} [النساء: 123]، قَالَ: «أَمَا عَلِمْتِ يَا عَائِشَةُ، أَنَّ الْمُؤْمِنَ تُصِيبُهُ النَّكْبَةُ، أَوِ الشَّوْكَةُ فَيُكَافَأُ بِأَسْوَإِ عَمَلِهِ وَمَنْ حُوسِبَ عُذِّبَ» قَالَتْ: أَلَيْسَ اللَّهُ يَقُولُ: {فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} [الانشقاق: 8]، قَالَ: «ذَاكُمُ الْعَرْضُ، يَا عَائِشَةُ مَنْ نُوقِشَ الْحِسَابَ عُذِّبَ»،
சமீப விமர்சனங்கள்