தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-3064

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

காமத்திற்காக (மட்டும்) திருமணம் செய்யும் ஆண்களையும், பெண்களையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

(bazzar-3064: 3064)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُسْتَمِرِّ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ بَيَانٍ، قَالَ: أَخْبَرَنَا الضَّحَّاكُ بْنُ يَسَارٍ، عَنْ أَبِي تَمِيمَةَ، عَنْ أَبِي مُوسَى، رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يُحِبُّ الذَّوَّاقِينَ وَلَا الذَّوَّاقَاتِ»


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-3064.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2658.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19957-ளஹ்ஹாக் பின் யஸார் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    போன்றோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/462, லிஸானுல் மீஸான்-4/338, தஃஜீல்-1/680)

  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், பஸராவாசிகள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர் என்றும், இவர் பஸராவைச் சேர்ந்தவர், பலவீனமானவர் என்று கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/157)

இப்னுமயீன் அவர்கள், பலவீனமானவர் என்று யார் கூறினார் என்று தெளிவாக கூறவில்லை என்பதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இவர் விசயத்தில் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களின் கூற்றையே ஏற்றுள்ளார். எனவே இவரை ஹஸன் தரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

  • மேலும் இதில் வரும் ராவீ-19215-ஷுஐப் பின் பயான் என்பவர் பற்றி இப்ராஹீம் பின் யஃகூப் ஜோஸ்ஜானீ அவர்கள் இவர் முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும், உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்கள், இவர் பலமானவர்கள் வழியாக முன்கரான செய்திகளை அறிவிப்பவர்; பெரும்பாலும் இவரின் செய்திகளில் தவறு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/171)

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7848 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.