தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-9085

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

‘‘யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுவாரோ அவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். (அவை) பஜ்ருக்கு முன் 2 ரக்அத்கள், லுஹருக்கு முன்னர் 2 ரக்அத்கள், லுஹருக்குப் பின்னர் 2 ரக்அத்கள், அஸ்ருக்கு முன்னர் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின்னர் 2 ரக்அத்கள், இஷாவுக்கு பின் 2 ரக்அத்கள்’’ ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(bazzar-9085: 9085)

وَحَدَّثَنا علي بن سعيد بن مسروق حَدَّثَنا مُحَمَّد بن سليمان الأصبهاني عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

قَالَ مَنْ صلى ثنتي عشرة ركعة كل يوم بني له بيت في الجنة ثنتين قبل الفجر وأربعا قبل الظهر واثنين بعد الظهر واثنين قبل العصر واثنين بعد المغرب.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-9085.
Bazzar-Shamila-9085.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




இதில் முஹம்மத் பின் சுலைமான் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெறுகிறார்.

ميزان الاعتدال (3/ 569)
7619 – محمد بن سليمان [ ت، س، ق ] بن الاصبهاني.
عن سهيل بن أبي صالح، وعطاء بن السائب. وعنه لوين، وابنا أبي شيبة، وطائفة. قال أبو حاتم: لا يحتج به، ولا بأس به. وقال النسائي: ضعيف.
وقال ابن عدي: هو قليل الحديث. أخطأ في غير شئ.

முஹம்மத் பின் சுலைமான் என்பவரை ஆதாரமாக எடுக்கக்கூடாது என்று அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களும், பலவீனமானவர் என்று நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்களும், இவர் குறைவான ஹதீஸ்களை அறிவித்தவர்; பல தவறுகளை இழைத்தவர் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்:3, பக்:569

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.