நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) நரகத்தை விட்டு காப்பாற்றும்படி ஏழுதடவை பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னை விட்டு காப்பாற்றுவாயாக!” என நரகம் கூறுகிறது.
ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) ஏழுதடவை சொர்க்கத்தைக் கேட்டு பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னிடம் தங்கச் செய்துவிடுவாயாக!” என்று (அல்லது இது போன்ற வார்த்தையை) சொர்க்கம் கூறுகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(bazzar-9681: 9681)وحَدَّثَنا يُوسُفُ بن موسى حَدَّثَنا جرير بن عَبْد الرَّحْمن الحميد , عن ليث , عن يونس بن خباب , عن أبي علقمة , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
مَا استعاذ عبد من النار سبعا إلا قالت النار اللهم أعذه مني ولا سأل الجنة سبعا إلا قالت الجنة اللهم أسكينه إياي أو كلمة نحوها.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-9681.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2981.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-49794-யூனுஸ் பின் கப்பாப் என்பவர் பற்றி சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், சிலர் இவர் ராஃபிளா கொள்கையில் ஊறிப்போனவர்; உஸ்மான் (ரலி) அவர்களை திட்டக்கூடியவர்; இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கக்கூடாது என்றும், சிலர் முன்கருல் ஹதீஸ் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை நம்பகமானவர் என்றும் தவறிழைப்பவர் என்றும், ராஃபிளா கொள்கையுடையவர் என்று விமர்சிக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/468, தக்ரீபுத் தஹ்தீப்-1/1098)
இந்த செய்தியை அபூஅல்கமா அவர்களிடமிருந்து பலமானவரான யஃலா பின் அதாஃ அவர்கள் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்கள் கூற்றாகத்தான் அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2702 .
சமீப விமர்சனங்கள்