தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1773

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 26

உம்ரா

பாடம்: 1

உம்ராவின் அவசியமும் அதன் சிறப்பும்.

(வசதியும் வாய்ப்பும் உள்ள) யார் மீதும் ஹஜ்ஜும் உம்ராவும் கடமையாகாமல் இருப்பதில்லை என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் குர்ஆனில், அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்” (அல்குர்ஆன்: 2:196) என்று ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்தே கூறுகின்றான் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் உம்ரா செய்வது மறு உம்ராவரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (பாவச் செயல் கலவாத) ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 26

(புகாரி: 1773)

26 – أَبْوَابُ العُمْرَةِ
بَابُ وُجُوبِ العُمْرَةِ وَفَضْلِهَا
وَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: ” لَيْسَ أَحَدٌ إِلَّا وَعَلَيْهِ حَجَّةٌ، وَعُمْرَةٌ
وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: ” إِنَّهَا لَقَرِينَتُهَا فِي كِتَابِ اللَّهِ {وَأَتِمُّوا الحَجَّ وَالعُمْرَةَ لِلَّهِ} [البقرة: 196]

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَيٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الجَنَّةُ»


Bukhari-Tamil-1773.
Bukhari-TamilMisc-1773.
Bukhari-Shamila-1773.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . அப்துல்லாஹ் பின் யூஸுஃப்

3 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்

4 . ஸுமைய்யு-அபூஅப்துல்லாஹ்

5 . அபூஸாலிஹ்-ஸம்மான்

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஸாலிஹ்-ஸம்மான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: மாலிக்-987, முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-1773, முஸ்லிம்-2624, இப்னு மாஜா-2888, திர்மிதீ-933, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-2622, 2623, 2629, …


  • அபூஹாஸிம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-,


  • ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-,


2 . ஜாபிர் பின் அப்துல்லாஹ்

3 . ஆமிர் பின் ரபீஆ

4 . இப்னு அப்பாஸ்


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: நஸாயீ-2630,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.