தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-2630

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்வதின் சிறப்பு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்யுங்கள். ஏனெனில் கொல்லனின் உலை எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போன்று இவ்விரண்டும் ஏழ்மையையும், பாவங்களையும் அகற்றுகின்றது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(நஸாயி: 2630)

فَضْلُ الْمُتَابَعَةِ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ

أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَتَّابٍ، قَالَ: حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ، فَإِنَّهُمَا: يَنْفِيَانِ الْفَقْرَ، وَالذُّنُوبَ، كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-2630.
Nasaayi-Alamiah-2583.
Nasaayi-JawamiulKalim-2596.




இந்தச் செய்தியின் கருத்து:

நீங்கள் எப்பொருளை (நல்வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். அவன் வழங்குவோரில் சிறந்தவன் என்று கூறுவீராக!

அல்குர்ஆன்: 34:39

(மனிதா!) நீ (நல்வழியில்) செலவு செய்! உனக்காக நான் செலவுசெய்வேன்’ என அல்லாஹ் கூறினான்.

(பார்க்க: புகாரி-7496)

ஒருவர், தர்மம் செய்யும் போது அதனால் செல்வம் குறைந்து விடும் என்று கருதுவார். ஆனால் அவ்வாறு கருதக்கூடாது. அதன் மூலம் அல்லாஹ் மறைமுகமான அருளை வழங்குகிறான் என்றக் கருத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(பார்க்க: முஸ்லிம்-5047)

இதுபோன்றே ஹஜ், உம்ரா செய்யக்கூடிய ஒருவர் பொருளாதாரத்தை அதிகம் செலவிடுவதால் அவர் ஏழையாகிவிடுவார் என்று கருதக்கூடாது. அவரின் செல்வத்தில் அல்லாஹ் மறைமுகமான அருளை வழங்குகிறான் என்றும் சிலர் விளக்கம் கூறியுள்ளனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்

2 . அபூதாவூத்-ஸுலைமான் பின் ஸைஃப்

3 . அபூஅத்தாப்-ஸஹ்ல் பின் ஹம்மாத்

4 . அஸ்ரா பின் ஸாபித்

5 . அம்ர் பின் தீனார்

6 . இப்னு அப்பாஸ் (ரலி)


1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸுலைமான் பின் ஸைஃப் —> ஸஹ்ல் பின் ஹம்மாத் —> அஸ்ரா பின் ஸாபித் —> அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
    இறப்பு ஹிஜ்ரி 126
    —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: குப்ரா நஸாயீ-, நஸாயீ-2630, அல்முஃஜமுல் கபீர்-, …


2 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-810.


3 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


4 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


5 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


6 . ஆமிர் பின் ரபீஆ

7 . அபூஹுரைரா

8 . உம்மு ஸலமா


9 . அலீ



 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-1773,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.