பாடம்:
ஹஜ் மற்றும் உம்ரா செய்வதின் நன்மைகள் குறித்து வந்துள்ளவை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்யுங்கள். ஏனெனில் கொல்லனின் உலை எவ்வாறு இரும்பு, தங்கம், வெள்ளி ஆகியவற்றின் துருவை நீக்குமோ அது போன்று இவ்விரண்டும் ஏழ்மையையும், பாவங்களையும் அகற்றுகின்றது.
ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு கூலி, சொர்க்கத்தைத் தவிர வேறு இல்லை.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி உமர் (ரலி), ஆமிர் பின் ரபீஆ (ரலி), அபூஹுரைரா (ரலி), அப்துல்லாஹ் பின் ஹுப்ஷீ (ரலி), உம்மு ஸலமா (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் வழியாக வரும் இந்தச் செய்தி “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
(திர்மிதி: 810)بَابُ مَا جَاءَ فِي ثَوَابِ الحَجِّ وَالعُمْرَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَا: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ عَاصِمٍ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«تَابِعُوا بَيْنَ الحَجِّ وَالعُمْرَةِ، فَإِنَّهُمَا يَنْفِيَانِ الفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الكِيرُ خَبَثَ الحَدِيدِ، وَالذَّهَبِ، وَالفِضَّةِ، وَلَيْسَ لِلْحَجَّةِ المَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الجَنَّةُ»
وَفِي البَابِ عَنْ عُمَرَ، وَعَامِرِ بْنِ رَبِيعَةَ، وَأَبِي هُرَيْرَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ حُبْشِيٍّ، وَأُمِّ سَلَمَةَ، وَجَابِرٍ.: «حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-810.
Tirmidhi-Alamiah-738.
Tirmidhi-JawamiulKalim-737.
இந்தச் செய்தியின் கருத்து:
நீங்கள் எப்பொருளை (நல்வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். அவன் வழங்குவோரில் சிறந்தவன் என்று கூறுவீராக!
(மனிதா!) நீ (நல்வழியில்) செலவு செய்! உனக்காக நான் செலவுசெய்வேன்’ என அல்லாஹ் கூறினான். புகாரி-7496.
மேற்கண்ட செய்திக்கு விளக்கமாக இந்த இறைவசனத்தையும், ஹதீஸையும் இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
அவர்கள் குறிப்பிட்டுவிட்டு நல்வழியில் செலவிடுவோருக்கு அல்லாஹ் உலகிலும் அதை பன்மடங்காக்கி தருகிறான்; மறுமைநாளில் நன்மையை வழங்குகிறான் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹஜ் உம்ரா செய்வதின் மூலம் பொருளாதாரத்தை செலவிடக்கூடியவருக்கு அல்லாஹ் மேலும் பரக்கத்தை அளிக்கிறான் என்பதால் அவருக்கு ஏழ்மை வராது…
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . குதைபா பின் ஸயீத், 3 . அப்துல்லாஹ் பின் ஸயீத் (அபூஸயீத்)
4 . அபூகாலித்-ஸுலைமான் பின் ஹய்யான்
5 . அம்ர் பின் கைஸ்
6 . ஆஸிம் பின் பஹ்தலா
7 . அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா
8 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20386-ஆஸிம் பின் பஹ்தலா-ஆஸிம் பின் அபுன் நஜூத் அவர்களை சிலர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று கூறியுள்ளனர். சில வகைச் செய்திகளில் இவர் தவறாக அறிவித்துள்ளார். வேறு சில வகைச் செய்திகளை சரியாக அறிவித்துள்ளார் என்பதால் இவரை ஹஸன் தரமுடையவர் என்று சில ஹதீஸ்துறை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(பார்க்க: ஆஸிம் பின் பஹ்தலா)
…
1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, திர்மிதீ-810, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு குஸைமா-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-,
2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: நஸாயீ-2630.
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-1773,
சமீப விமர்சனங்கள்