பாடம்: 42
தலைக்கு ஒரு தடவை ‘மஸ்ஹு’ செய்தல்
யஹ்யா பின் உமாரா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அம்ர் பின் அபீஹசன் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை பற்றிக் கேட்டார்கள். அங்கு நானும் இருந்தேன். அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அவர்களுக்கு அங்கத் தூய்மை செய்துகாட்டினார்கள்.
(ஆரம்பமாகப் பாத்திரத்திலிருந்த தண்ணீரைத்) தம்மிரு கைகளில் ஊற்றி இரு (முன்)கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்திற்குள் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி மூன்று முறை வாய் கொப்புளித்து (மூக்கிற்குள் நீர் செலுத்தி சுத்தப்படுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவி னார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து (தண்ணீர் அள்ளி) இரு கைகளையும் முழங்கைவரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள்.
பிறகு பாத்திரத்திற்குள் தமது கையை நுழைத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். அதாவது தமது இரு கைகளையும் முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாகக் கொண்டுவந்தார்கள். பிறகு பாத்திரத்திற்குள் தமது கையை நுழைத்து (தண்ணீர் அள்ளி) தம்முடைய இரு கால்களையும் கழுவினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் தமது தலையை (ஒரே) ஒரு தடவை மட்டுமே (ஈரக் கையால்) தடவினார்கள்” என்று அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம்: 4
(புகாரி: 192)بَابُ مَسْحِ الرَّأْسِ مَرَّةً
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، قَالَ:
شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي حَسَنٍ، سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ عَنْ وُضُوءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ فَتَوَضَّأَ لَهُمْ، فَكَفَأَ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ ثَلاَثًا، بِثَلاَثِ غَرَفَاتٍ مِنْ مَاءٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ، فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ، فَغَسَلَ يَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَمَسَحَ بِرَأْسِهِ، فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ بِهِمَا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَغَسَلَ رِجْلَيْهِ»
وحَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ: مَسَحَ رَأْسَهُ مَرَّةً
Bukhari-Tamil-192.
Bukhari-TamilMisc-192.
Bukhari-Shamila-192.
Bukhari-Alamiah-185.
Bukhari-JawamiulKalim-187.
சமீப விமர்சனங்கள்