அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்:
நான் (ஒருமுறை) ‘இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் இளைஞன்; பெண்களை மணந்துகொள்ளத் தேவையான பொருள் ஏதும் என்னிடம் இல்லை. (இந்நிலையில்) நான் தவறான வழிக்குச் சென்றுவிடுவேனோ என என்னைப் பற்றி நானே அஞ்சுகிறேன். (நான் காயடித்துக்கொள்ளலாமா?)” என்று கேட்டேன்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) மெளனமாக இருந்தார்கள். மீண்டும் நான் முன் போன்றே கேட்டேன். அப்போதும் மெளனமாகவே இருந்தார்கள். பிறகும், நான் முன் போன்றே கேட்டேன். அப்போதும் மெளனமாகவே இருந்தார்கள். பிறகு (நான்காது முறையாக) முன்போன்றே நான் கேட்டபோது, ‘அபூஹுரைரா! நீங்கள் (வாழ்க்கையில்) சந்திக்கவிருக்கிற அனைத்தையும் (ஏற்கெனவே எழுதியாயிற்று அவற்றை) எழுதிய எழுதுகோலும் கூட காய்ந்துவிட்டது. எனவே, நீங்கள் காயடித்துக் கொள்ளுங்கள்; அல்லது சும்மா இருங்கள். (எல்லாம் ஒன்று தான்)” என்று கூறினார்கள்.
அத்தியாயம்: 67
(புகாரி: 5076)وَقَالَ أَصْبَغُ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَجُلٌ شَابٌّ، وَأَنَا أَخَافُ عَلَى نَفْسِي العَنَتَ، وَلاَ أَجِدُ مَا أَتَزَوَّجُ بِهِ النِّسَاءَ، فَسَكَتَ عَنِّي، ثُمَّ قُلْتُ: مِثْلَ ذَلِكَ، فَسَكَتَ عَنِّي، ثُمَّ قُلْتُ: مِثْلَ ذَلِكَ، فَسَكَتَ عَنِّي، ثُمَّ قُلْتُ مِثْلَ ذَلِكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا هُرَيْرَةَ جَفَّ القَلَمُ بِمَا أَنْتَ لاَقٍ فَاخْتَصِ عَلَى ذَلِكَ أَوْ ذَرْ»
Bukhari-Tamil-5076.
Bukhari-TamilMisc-5076.
Bukhari-Shamila-5076.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இது புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் முஅல்லக் செய்தி. மேலும் صيغة الجزم – எனும் “கால-கூறினார்” என்பது போன்ற உறுதியான கருத்தை தரும் வார்த்தையைக் கூறியுள்ளார்.
இந்தச் செய்தியை இப்னு வஹ்ப் அவர்களிடமிருந்து பலரும் அறிவித்துள்ளனர். மேலும் அஸ்பஃக் பின் ஃபரஜ் அவர்களிடமிருந்து மவ்ஸூலாக வேறு சிலரும் அறிவித்துள்ளனர் என்பதால் இது சரியான செய்தியாகும்.
ஆண்மை நீக்கம் செய்வதை நபி (ஸல்) கண்டித்ததாக வேறு செய்திகள் உள்ளன. மேற்கண்ட செய்தியின் மூலம் இதற்கு அனுமதி என்று நினைத்து விடக்கூடாது. இதை, “இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது” என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம்” எனும் (அல்குர்ஆன்: 18:29) இறைவசனத்தைப் போன்று புரிந்துக் கொள்ளவேண்டும்.
(நூல்: ஃபத்ஹுல் பாரீ-9/119)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்
2 . அஸ்பஃக் பின் ஃபரஜ்
3 . இப்னு வஹ்ப்
4 . யூனுஸ் பின் யஸீத்
5 . இப்னு ஷிஹாப்-ஸுஹ்ரீ
6 . அபூஸலமா
7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இப்னு வஹ்ப் —> யூனுஸ் பின் யஸீத் —> ஸுஹ்ரீ —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: … புகாரி-5076, …
- அவ்ஸாஈ —> ஸுஹ்ரீ —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-, நஸாயீ-3215, குப்ரா பைஹகீ-,
- அவ்ஸாஈ —> யூனுஸ் பின் யஸீத் —> ஸுஹ்ரீ —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-,
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-3839,
சமீப விமர்சனங்கள்