பாடம் : 14 பிராணியை அறுக்கும் போது தக்பீர்’ (அல்லாஹ் அக்பர்-அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று) கூறுவது.
அனஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள்.21
Book : 73
(புகாரி: 5565)بَابُ التَّكْبِيرِ عِنْدَ الذَّبْحِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ
«ضَحَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، ذَبَحَهُمَا بِيَدِهِ، وَسَمَّى وَكَبَّرَ، وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا»
மாஷா அல்லாஹ் ! அல்லாஹ் உங்களுக்கு பேரருள் புரிவானாக மிக சிறப்பாக உள்ளது இந்த ஹதீஸின் தரம் பார்க்கும் ஆப்ஷன்
அல்ஹம்துலில்லாஹ்…
அல்ஹம்துலில்லாஹ். இப்பணி மென்மேலும் வளர இதில் ஈடுபடும் அனைவருக்காகவும் துஆச் செய்யவும்.