அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கருஞ்சீரக விதையில் (சாம் எனும்) மரணத்தைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறினார்கள்:
‘சாம்’ என்றால் ‘மரணம்’ என்று பொருள். ‘அல்ஹப்பத்துஸ் ஸவ்தா’ என்றால், (பாரசீகத்தில்) ‘ஷூனீஸ்’ (கருஞ்சீரகம்) என்று பொருள்.
அத்தியாயம்: 76
(புகாரி: 5688)حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، وَسَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُمَا: أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«فِي الحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ، إِلَّا السَّامَ»
قَالَ ابْنُ شِهَابٍ: وَالسَّامُ المَوْتُ، وَالحَبَّةُ السَّوْدَاءُ: الشُّونِيزُ
Bukhari-Tamil-5688.
Bukhari-TamilMisc-5688.
Bukhari-Shamila-5688.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
மேலும் பார்க்க: புகாரி-5687.
விமர்சனங்கள்:
மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகம் மருந்தாகும் என இந்தச் செய்தி கூறுகின்றது. ஆனால் இது நடைமுறை உண்மைக்கு மாற்றமானது. அல்லாஹ்வை விட சொல்லில் மிக்க உண்மையாளன் யார்? என்று திருமறை குர்ஆனில் அல்லாஹ் கேட்கிறான்.
4:87 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَؕ لَيَجْمَعَنَّكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِيْثًا
4:87. அல்லாஹ் – அவனைத் தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு கடவுள் இல்லை; நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமை நாளில் அவன் ஒன்று சேர்ப்பான் – இதில் சந்தேகமில்லை; மேலும், அல்லாஹ்வை விட சொல்லில் மிக்க உண்மையாளன் யார்?
கருஞ்சீரகம் பற்றிய மேற்கண்ட செய்தி உண்மைக்கு மாற்றமானது. ஹதீஸ்களும் அல்லாஹ்விடமிருந்து வந்த வஹி தான். அல்லாஹ் உண்மைக்கு மாற்றமாக கூறமாட்டான். இது சரியான செய்தி என்று யாரேனும் கூறினால், அவர்கள் இதை நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்தச் செய்தி சொர்க்கம், நரகம் போன்ற மறைவான விஷயங்களைப் பற்றிப் பேசவில்லை. அப்படி பேசினால் அதை நிரூபித்துக் காட்ட வேண்டுமென்று கேட்க மாட்டோம்.
மாறாக இந்தச் செய்தி தற்போது நமக்கிடையே உள்ள ஒரு பொருளுக்கு அதி பயங்கரமான ஆற்றல் இருப்பதாகக் கூறுகின்றது. உண்மையில் கருஞ்சீரகத்திற்கு இப்படிப்பட்ட ஆற்றல் இருக்கின்றதா? இல்லையா? என்பதை நாமே முடிவு செய்துவிட முடியும்.
இந்தச் செய்தியை நம்பக்கூடியவர்களே இது உண்மை என்று நிரூபித்துக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றார்கள். ஒரு பொருளுக்கு இல்லாத ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாக யாராவது கூறினால் அந்த ஆற்றலை நிரூபிக்குமாறு கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் நமக்கு வழிகாட்டுகிறான்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் ஒரு மன்னன் இறைவனுக்குரிய ஆற்றல் தனக்கு இருப்பதாக வாதிட்டான்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் அவன் பொய்யன் என்பதை நிரூபிக்க ஒரே ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார்கள். என்னுடைய இறைவன் சூரியனை கிழக்கே உதிக்கச் செய்கிறான். மேற்கே மறையச் செய்கிறான்.
உனக்கு இறைத் தன்மை இருந்தால் கிழக்கே உதிக்கும் சூரியனை மேற்கில் உதிக்குமாறு செய்! மேற்கே மறையும் சூரியனை கிழக்கில் மறையுமாறு செய்! என்று கேட்டார்கள். அந்த மன்னன் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப் போனான்.
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன் என்று இப்ராஹீம் கூறிய போது, நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன் என்று அவன் கூறினான். அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்! என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு மன்னன் சொல்வது அசத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். இதே அடிப்படையில் நாமும் கருஞ்சீரகம் தொடர்பான செய்தி தவறானது என்று வாதிடுகிறோம். இது சரியான செய்தி என்று யாரேனும் கூறினாலும் அவர்களின் உள்ளம் இதை மறுக்கவே செய்கிறது. இதை நடைமுறைப்படுத்திக் காட்ட மறுப்பதின் மூலம் இது பொய்யான செய்தி என்பதை நிரூபித்து வருகின்றனர்.
உலக காரிங்களை ஏற்பது நம் விருப்பம்.
ஒரு வாதத்திற்கு இது சரியானது என்று வைத்துக் கொண்டாலும், கருஞ்சீரக மருத்துவம் மறுமை நன்மை சம்பந்தப்பட்டது அல்ல. இது உலக விஷயம் தொடர்பான செய்தி. உலக விஷயங்களில், நாமே அதிகம் அதிகம் அறிந்தவர்கள் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள், எனவே, உண்மைக்கு மாற்றமான இந்த செய்தி ஏற்புடையது அல்ல.
صحيح مسلم
6277 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ كِلاَهُمَا عَنِ الأَسْوَدِ بْنِ عَامِرٍ – قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ – حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ وَعَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَرَّ بِقَوْمٍ يُلَقِّحُونَ فَقَالَ « لَوْ لَمْ تَفْعَلُوا لَصَلُحَ ». قَالَ فَخَرَجَ شِيصًا فَمَرَّ بِهِمْ فَقَالَ « مَا لِنَخْلِكُمْ ». قَالُوا قُلْتَ كَذَا وَكَذَا قَالَ « أَنْتُمْ أَعْلَمُ بِأَمْرِ دُنْيَاكُمْ ».
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டு வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே? என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.
நூல் : முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
4358
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் மற்ற ஹதீஸ்கள், இதன் கருத்து பற்றிய விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
கருஞ்சீரகத்தை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன❓
https://youtu.be/X4PWNJQ8LoY?si=NkMmOo12L75Owsv9
இந்த ஹதீஸிற்க்கு பெரும்பாலான நோயாளிகளுக்கு மருந்து உள்ளது என்று அர்த்தம் வைத்தால் குழப்பம் வராது.
عائشة أم المؤمنين
أسامة بن شريك
بريدة بن الحصيب الأسلمي
عبدالله بن عمر
صهيب بن سنان الرومي
போன்ற ஐந்திற்க்கு மேற்பட்ட சங்கிலி தொடர் மூலம் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
இந்த சங்கி தொடர் எல்லா பொய்யது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
கர்ப்பபை பிரச்சினைக்கு நபி அவர்கள் மருந்து சொல்லும் போது கருஞ்சீரகத்தையும் சேர்த்து சொன்னதாக வரும் ஹதீஸ்:
ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் மகளுக்கு அல்உத்ரா (கருப்பை நோய்) உள்ளது” என்று கூறினாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ போய் குஸ்த் (ஒரு மருத்துவ மூலிகை), முர்ர் (ஒரு வகைப் பிசின்), எண்ணெய் மற்றும் கருஞ்சீரகம் எடுத்து, அவற்றைக் கொடு. பிறகு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை” என்று கூறினார்கள். ஆனால் அந்தப் பெண் தன் மகளுக்கு அந்த மருந்தைக் கொடுக்காமல், அதற்குப் பதிலாக ஒரு தாயத்தைக் கட்டினாள். அதன் காரணமாக அந்தப் பெண்ணின் மகள் இறந்துவிட்டாள். பின்னர் அந்தப் பெண் தன் மகளின் உடலை மூடி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறாக நடந்து கொண்டதால், என் மகளை இழந்ததைவிட இது மிகவும் கடுமையானது” என்று கூறினாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ ஒரு தாய், உன்மீது பாவமில்லை” என்று கூறினார்கள். அப்போது அங்கே பல பெண்கள் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம், “பெண்களே! உங்கள் குழந்தைகளுக்குத் தாயத்துக் கட்டாதீர்கள். ஏனெனில், அது இரகசியமான கொலை” என்று கூறினார்கள்.
2562:علل ابن أبي حاتم
அல்ஹம்ந்த்லில்லாஹ். சிறப்பான விளக்கம்.