தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-57

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம் : 43 அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அவர்களில் பொதுமக்களுக்கும் நலம் நாடுவதுதான் மார்க்கம் (தீன்) ஆகும் எனும் நபிமொழி.

அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நலம் நாடுபவர்களாயிருந்தால் (இயலாதவர்கள், நோயாளிகள் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் இருப்பதில் குற்றமில்லை). (9:91).

57. ‘நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்’ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book : 3


بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” الدِّينُ النَّصِيحَةُ: لِلَّهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ المُسْلِمِينَ وَعَامَّتِهِمْ

وَقَوْلِهِ تَعَالَى: {إِذَا نَصَحُوا لِلَّهِ وَرَسُولِهِ} التوبة: 91

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ

بَايَعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ


Bukhari-Tamil-.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-57.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

முஸத்தத் பின் முஸர்ஹத்-அல்அஸதீ

مسدد بن مسرهد

இறப்பு: ஹிஜ்ரி 228, பஸரா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல் மலிக் பின் அப்துல் அஸீஸ்

தந்தை பெயர்: முஸர்ஹத்

வம்சம்: அல்அஸதீ

புனைப்பெயர்: அபூ ஹஸன்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 150

இறப்பு: ஹிஜ்ரி 228, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

முஸத்தத் பின் முஸர்ஹத்-அல்அஸதீ ரஹ் அவர்கள் மிகப் பலமான ஹதீஸ் அறிவிப்பாளர் மற்றும் மனனசக்தி மிக்கவர். இவர் ஹிஜ்ரி 150-ல் பிறந்தார். பஸராவைச் சேர்ந்த இவர், பஸராவில் முதன்முதலில் முஸ்னத் நூலைத் தொகுத்தவர் என்று கூறப்படுகிறது.

இவர் ஹிஜ்ரி 228-ல் பஸராவில் மரணமடைந்தார். புகாரி இமாம், அபூ தாவூத், இமாம் திர்மிதீ போன்றோர் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபூ கஸீர், ஹுஷைம் பின் பஷீர் பின் அல்காஸிம், யஸீத் பின் ஸரீஃ, ஈஸா பின் யூனுஸ் பின் அபூ இஸ்ஹாக், ஃபுளைல் பின் இயாழ் பின் மஸ்ஊத், மஹ்தீ பின் மைமூன் அல்அஸ்தீ, ஜுவைரிய்யா பின் அஸ்மா பின் உபைத், ஜஃபர் பின் ஸுலைமான் அத்தபாஈ, ஹம்மாத் பின் ஸைத், அபூ அஹ்வஸ், ஸலாம் பின் ஸுலைம் அல்ஹனஃபீ, அப்துல் வாரிஸ் பின் ஸயீத் பின் தக்வான்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், அபூ தாவூத், இமாம் திர்மிதீ, முஹம்மத் பின் யஹ்யா, யஹ்யா (இவரது மகன்), அபூ ஸுர்ஆ, அபூ ஹாதிம், யஃகூப் அல்ஃபஸவீ, யஃகூப் அஸ்ஸதூஸீ, முஆத் பின் அல்முஸன்னா, இஸ்மாயீல் அல்காழீ, அபூ கலீஃபா அல்ஜுமஹீ

வேறு பெயர்கள்: முஸத்தத், முஸத்தத் பின் முஸர்ஹத்


ஆதாரம்: muslimscholars.info (30175) · Should verify

யஹ்யா பின் ஸயீத்-அல்கத்தான்

யஹ்யா பின் ஸயீத்-அல்கத்தான்-அல்பஸரீ (ரஹ்) – Yahya bin Sa'id bin Farroukh al-Qatan

இறப்பு: ஹிஜ்ரி 198

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: யஹ்யா பின் ஸயீத் பின் ஃபர்ரூக்

தந்தை பெயர்: ஸயீத் பின் ஃபர்ரூக்

வம்சம்: பனூ தமீம் கோத்திரத்தாரின் அடிமை

புனைப்பெயர்: அபூ ஸயீத்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 120

இறப்பு: ஹிஜ்ரி 198

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 120ல் பிறந்தார். இவர் பஸராவைச் சேர்ந்த மிகப் பலமான ஹதீஸ் அறிவிப்பாளர், இமாம் மற்றும் ஹாஃபிழ் ஆவார். மாலிக் இமாம், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ போன்ற பல அறிஞர்களிடம் ஹதீஸ்களைக் கற்றார்.

அஹ்மத் பின் ஹன்பல், யஹ்யா பின் மஈன், அலீ பின் அல்மதனீ போன்றோர் இவரிடம் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவர் ஹிஜ்ரி 198ல் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ, ஹுமைத் அத்தவீல், இஸ்மாயீல் பின் அபூகாலித், உபைதுல்லாஹ் பின் உமர், யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ, ஹிஷாம் பின் உர்வா, இக்ரிமா பின் அம்மார், யஸீத் பின் அபூஉபைத், மாலிக் இமாம், முஹம்மத் பின் அஜ்லான், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹம்மத் பின் யஹ்யா பின் ஸயீத், அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹ், அலீ பின் அல்மதனீ, யஹ்யா பின் மஈன், அம்ர் பின் அலீ அஸ்ஸைரஃபீ, மஸ்தத் பின் மஸ்ரஹத், அபூபக்ர் பின் அபூஷைபா, ஸுஹைர் பின் ஹர்ப், பிஷ்ர் பின் அல்ககம், ஸதகா பின் அல்ஃபள்ல், உபைதுல்லாஹ் பின் உமர் அல்கவாரிரீ

வேறு பெயர்கள்: யஹ்யா பின் ஸயீத், யஹ்யா அல்கத்தான், அல்கத்தான்


ஆதாரம்: muslimscholars.info (20031) · Should verify

இஸ்மாயீல் பின் அபூகாலித்-அல்பஜலீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

கைஸ் பின் அவ்ஃப்-கைஸ் பின் அபூஹாஸிம்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஜரீர் பின் அப்துல்லாஹ்-அல்பஜலீ

جرير بن عبد الله البجلي

இறப்பு: ஹிஜ்ரி 51, கூஃபா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் பின் ஜாபிர்

தந்தை பெயர்: அப்துல்லாஹ் பின் ஜாபிர்

வம்சம்: பஜலீ, கஸ்ரீ

புனைப்பெயர்: அபூ அம்ர், அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: ஹிஜாஸ்

பயணித்த ஊர்கள்: மதீனா, கூஃபா, கர்கீஸியா

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 51, கூஃபா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

ஜரீர் பின் அப்துல்லாஹ் ரலி ஒரு நபித்தோழர் ஆவார். அவர் ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் இஸ்லாத்தைத் தழுவினார். அவர் கூஃபாவில் வசித்து வந்தார், பின்னர் உஸ்மான் ரலி அவர்களை ஏசும் ஊரில் இருக்க விரும்பாததால் கர்கீஸியாவுக்குச் சென்றார்.

அவர் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அழகுடன் ஒப்பிடப்பட்டவர். அவர் ஹிஜ்ரி 51 ஆம் ஆண்டு கூஃபாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி), முஆவியா பின் அபூஸுஃப்யான்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அல்முன்திர் பின் ஜரீர், உபைதுல்லாஹ் பின் ஜரீர், அய்யூப் பின் ஜரீர், இப்ராஹீம் பின் ஜரீர், அபூ ஸுர்ஆ பின் அம்ர், அனஸ் பின் மாலிக், ஷகீக் பின் ஸலமா அல்அஸதீ, ஸைத் பின் வஹ்ப அல்ஜுஹனீ, ஸியாத் பின் அலாகா, ஆமிர் அஷ்ஷஅபீ, கைஸ் பின் அபூஹாஸிம், ஹம்மாம் பின் அல்ஹாரிஸ்

வேறு பெயர்கள்: ஜரீர் அல்பஜலீ, ஜரீர்


ஆதாரம்: muslimscholars.info (4057) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.