பாடம் : 52 சூனியத்திற்கு அஜ்வா’ எனும் (அடர்த்தியான உயர் ரகப்) பேரீச்சம் பழத்தை மருந்தாகப் பயன்படுத்துவது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
தினந்தோறும் காலையில் சில ‘அஜ்வா’ ரகப் பேரீச்சம் பழங்களை (வெறும் வயிற்றில்) சாப்பிடுகிறவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவு வரை இடரளிக்காது.
என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர் அலீ இப்னு மதீனீ(ரஹ்) அல்லாத மற்றவர்கள் ‘ஏழு பேரீச்சம் பழங்களை’ என்று (எண்ணிக்கைக் குறிப்புடன்) அறிவித்தார்கள். 95
Book : 76
(புகாரி: 5768)بَابُ الدَّوَاءِ بِالعَجْوَةِ لِلسِّحْرِ
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا مَرْوَانُ، أَخْبَرَنَا هَاشِمٌ، أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنِ اصْطَبَحَ كُلَّ يَوْمٍ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرَّهُ سُمٌّ، وَلَا سِحْرٌ ذَلِكَ اليَوْمَ إِلَى اللَّيْلِ» وَقَالَ غَيْرُهُ: «سَبْعَ تَمَرَاتٍ»
சமீப விமர்சனங்கள்