தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7025

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32 கனவில் அங்கசுத்தி (உளூ) செய்வதைப் போன்று காண்பது44

7025. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது

(ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள், நான் தூங்கிக்கொண்டிரந்த சமயம் (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அஙகு அரண்மனையொன்றின் அருகில் ஒரு பெண் அங்கசுத்தி (உளூ) செய்து கொண்டிருந்தாள். நான், (வானவர்களிடம்) இந்த அரண்மனை யாருக்குரியது என்றேன். அதற்கவர்கள், உமருக்குரியது என்று சொன்னார்கள். அப்போது (அதனுள் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வரவே (அதனுள் நுழையாமல்) திரும்பி வந்துவிட்டேன் என்று சொன்னார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் (ஆனந்தத்தால்) அழுதுவிட்டு அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்! என்றார்கள்.

Book : 91

(புகாரி: 7025)

بَابُ الوُضُوءِ فِي المَنَامِ

حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ

بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي فِي الجَنَّةِ، فَإِذَا امْرَأَةٌ تَتَوَضَّأُ إِلَى جَانِبِ قَصْرٍ، فَقُلْتُ: لِمَنْ هَذَا القَصْرُ؟ فَقَالُوا: لِعُمَرَ، فَذَكَرْتُ غَيْرَتَهُ فَوَلَّيْتُ مُدْبِرًا ” فَبَكَى عُمَرُ وَقَالَ: عَلَيْكَ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ أَغَارُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.