ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
அத்தியாயம்: 24
கல்வி.
பாடம்:
கல்வி கற்பதற்கு வந்துள்ள ஆர்வமூட்டல்.
3641. கஸீர் பின் கைஸ் என்பவர் கூறியதாவது:
நான் திமிஷ்கி(டமாஸ்கஸி)லிருந்த ஒரு பள்ளிவாசலில் அபுத்தர்தா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் வந்து, அபுத்தர்தா (ரலி) அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு நபிமொழியை அறிவிக்கிறீர்கள் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. (அதைக் கேட்பதற்காகவே நான்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மதீனா நகரத்திலிருந்து இங்கு வந்துள்ளேன். வேறு எந்தத் தேவைக்காகவும் நான் வரவில்லை என்று கூறினார்.
அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்தால் சொர்க்கம் செல்லும் பாதைகளில் அவரை அல்லாஹ் நடத்துகின்றான்.
வானவர்கள் கல்வியைத் தேடும் (மாணவர்) ஒருவரை உவந்து கொண்டதைக் காட்டும் முகமாக தம் இறக்கைகளை கீழே வைக்கின்றனர்.
கற்றறிந்த அறிஞர் ஒருவருக்கே வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தண்ணீரில் வாழும் மீன்கள் உட்பட யாவும் பாவமன்னிப்புக் கோருகின்றன.
பக்தியாளரைவிட கல்வியாளருக்குள்ள சிறப்பு மற்ற நட்சத்திரங்களைவிட சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.
மார்க்க அறிஞர்கள்
كُنْتُ جَالِسًا مَعَ أَبِي الدَّرْدَاءِ، فِي مَسْجِدِ دِمَشْقَ فَجَاءَهُ رَجُلٌ، فَقَالَ: يَا أَبَا الدَّرْدَاءِ: إِنِّي جِئْتُكَ مِنْ مَدِينَةِ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي، أَنَّكَ تُحَدِّثُهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا جِئْتُ لِحَاجَةٍ، قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ،
وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ،
وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ، وَمَنْ فِي الْأَرْضِ، وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ،
وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ، كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ،
وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ، وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا، وَلَا دِرْهَمًا وَرَّثُوا الْعِلْمَ، فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ»
சமீப விமர்சனங்கள்