தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3580

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔

பாடம்:

லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் வெறுப்புக்குரிய செயல்.

3580. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

லஞ்சம் வாங்குபவனையும், லஞ்சம் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.


بَابٌ فِي كَرَاهِيَةِ الرَّشْوَةِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ:

«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِي وَالْمُرْتَشِي»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3580.
Abu-Dawood-Alamiah-3109.
Abu-Dawood-JawamiulKalim-3111.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் யூனுஸ்

3 . முஹம்மத் பின் அபூதிஃ-ப்

4 . ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான்

5 . அபூஸலமா

6 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10930-ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் என்பவரை இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள் மட்டுமே அறியப்படாதவர் என்று கூறியுள்ளார். (இதன் காரணம் இவரிடமிருந்து முஹம்மத் பின் அபூதிஃ-ப் அவர்கள் மட்டுமே ஹதீஸை அறிவித்துள்ளார் என்பதால் ஆகும். ஆனால் இவரிடமிருந்து வேறு சிலரும் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.)
  • இப்னு அபூதிஃ-ப் அவர்களின் தாயின் சகோதரரான ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் என்பவரை பற்றி நான் கேட்டபோது, இவரிடமிருந்து இப்னு அபூதிஃப் அறிவித்துள்ளார். இவர் பிரபலமானவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறினார் என உஸ்மான் பின் ஸயீத் தாரிமீ அவர்கள் அறிவித்துள்ளார்.
  • அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவரை நடுத்தரமானவர்-ஹஸன் தரத்தில் உள்ளவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-5/255, அல்காஷிஃப்-2/225, தஹ்தீபுத் தஹ்தீப்-1/333, தக்ரீபுத் தஹ்தீப்-1/211)

எனவே இது ஹஸன் தரமாகும்.


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (4/ 274)
558- وَسُئِلَ عَنْ حَدِيثِ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرحمن، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ لُعِنَ الرَّاشِي وَالْمُرْتَشِي.
فَقَالَ: يَرْوِيهِ الْحَسَنُ بْنُ عَطَاءٍ، وَقِيلَ: هُوَ الْحَسَنُ ابْنُ أَخِي أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ.
وَخَالَفَهُ الْحَارِثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، فَرَوَاهُ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَهُوَ أَشْبَهُ بِالصَّوَابِ.

…


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் —> அபூஸலமா —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, இப்னு மாஜா-2313, அபூதாவூத்-3580, திர்மிதீ-1337, …


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1336.


 

அபூதாவூத் இமாம்

அபூதாவூத் இமாம்.


இமாம் அபூதாவூத்

முழுப்பெயர்: சுலைமான் இப்னு அஷ்அஸ் இப்னு இஸ்ஹாக் இப்னு பஷீர் இப்னு ஷதாதல் அஸ்தீல் ஸஜிஸ்தானீ (இதில் சில மாற்றங்களுடனும் பெயர் கூறப்படுகிறது) (சுனன் அபூதாவூத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூதாவூத் அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: சுலைமான்

தந்தை பெயர்: அஷ்அஸ்

பிறந்த ஊர்: சஜிஸ்தான் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 202ல் ஷஃபான் மாதம்

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானில் உள்ள குராஸான், இராக்கின் கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஷாம், எகிப்து, ஸஜீரா, ஹிஜாஸ், திமிஷ்க், பல்ஹ் இன்னும் இது போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

சுனன் அபூதாவூத்,

அல்மராஸீல்,

அஸ்ஸுஹ்த் போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார்.

கஃனபீ, அஹ்மத், யஹ்யா இப்னுல்மதீனீ, சயீத் இப்னு சுலைமானுல் வாஸிதிய்யி, சுலைமான் இப்னு ஹர்ப், சுலைமான் இப்னு அப்துர்ரஹ்மானுத் திமிஷ்கீய்யி, யூசுப் இப்னு மூஸா அல்கதான், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

திர்மிதி, அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு தாவூத் இப்னு சுலைம், ஹர்ப் இப்னு இஸ்மாயில் அல்கர்மானீ, ஜகரிய்யா இப்னு யஹ்யா அஸ்ஸாஜி, அப்துர்ரஹ்மான் இப்னு கல்லாது அர்ராமஹுர்முஸி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 275ல் ஷவ்வால் மாதம் 17ல்இறந்தார். அப்போது அவருக்கு 73 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அஹ்மத் பின் யூனுஸ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

முஹம்மத் பின் அபூதிஃ-ப்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான்

حارث بن عبد الرحمن بن عبد الله بن سعد بن أبي ذباب

‌‌2432 - ‌الحارث ‌بْن ‌عَبْد ‌الرَّحْمَن ‌بْن ‌أَبِي ‌ذباب الدوسي،

سَمِعَ يزيد بْن هرمز وعطاء بْن يسار (1) قَالَ لِي عَلِيٌّ حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى قَالَ: أَخْبَرَنِي ‌الْحَارِثُ ‌بْنُ ‌عَبْدِ ‌الرَّحْمَنِ ‌بْنِ ‌أَبِي ‌ذباب قال اخبرني منير ابن عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنْ سَعْدِ بْنِ أَبِي ذُبَابٍ: قَدِمْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَسْلَمْتُ ثُمَّ اسْتَعْمَلَنِي أَبُو بَكْرٍ ثُمَّ عُمَرُ،

حَدَّثَنِي الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا أَنَسُ بْن عِيَاضٍ قَالَ: حَدَّثَنَا ‌الحارث ‌بن ‌عبد ‌الرحمن ‌ابن ‌أَبِي ‌ذُباب عَنْ مُنِيرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنْ سَعْدٍ وَكَانَ مِنْ أَهْلِ

السَّرَاةِ - مِثْلَهُ - فَكَلَّمْتُ قَوْمِي فِي الْعَسَلِ فَأَتَيْتُ عُمَرَ فَجَعَلَ ثَمَنَهُ فِي صَدَقَاتِ الْمُسْلِمينَ،

حَدَّثَنَا القعنبي قَالَ ثنا يزيد بْن زريع عَنْ عبد الرحمن ابن إِسْحَاق: عَنِ ابْن أَبِي ذباب عَنْ أَبِيه عَنْ جده: فرض عُمَر فِي العسل العشر، قَالَ أَبُو عَبْد اللَّه: والأول أصح.


‌‌2433 - ‌الحارث ‌بْن ‌عَبْد ‌الرَّحْمَن ‌بْن ‌أَبِي ‌ذباب (2) الدوسي المديني،

عَنْ عمه وعبد الرَّحْمَن بْن مهران، روى عنه حاتم بن اسماعيل،

وَقَالَ لَنَا الْمَكِّيّ حَدَّثَنَا الْجُعَيْدُ بْنُ عَبْدِ الرحمن: عن الحارث بن عبد الرحمن ابن عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ سَمِعَ عِيَاضًا عَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي النُّخَاعة،

وَقَالَ أَبُو الأَصْبَغِ (1) حَدَّثَنَا مُحَمَّد بْن سَلَمَةَ عن محمد ابن إِسْحَاقَ: عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُغِيرَةَ بْنِ أَبِي ذُبَابٍ عَنْ أَبِي سَلَمَةَ (2) عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: أَكْمَلُكُمْ إِيمَانًا أَحْسَنُكُمْ خُلُقًا،

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: حَدَّثَنِي صَاحِبٌ لَنَا عَنْ أَبِي الأَصْبَغِ.


‌‌الْوَهم الثَّانِي وَالْعشْرُونَ

قَالَ الْبُخَارِيُّ فِي بَابِ الْحَاءِ الْحَارِثُ بن عبد الرَّحْمَن بْنِ أَبِي ذُبَابٍ الدَّوْسِيُّ سَمِعَ يَزِيدَ بْنَ هُرْمُزَ وَعَطَاءَ بْنَ مِينَاءَ وَأَوْرَدَ لَهُ إِثْرَ هَذَا الْكَلامِ حَدِيثًا أَخْبَرَنَاهُ الْقَاضِي أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ الْحَسَنِ الْجِيرِيُّ أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ حَاجِبُ بْنُ أَحْمَدَ الطُّوسِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى عَنِ الْحَارِثِ بن عبد الرَّحْمَن عَن مُنِير بن عبد الله عَنْ أَبِيهِ عَنْ سَعْدِ بْنِ أَبِي ذُبَابٍ قَالَ قَدِمْتُ عَلَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَسْلَمْتُ وَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ اجْعَلْ لِقَوْمِي مَا أَسْلَمُوا عَلَيْهِ مِنْ أَمْوَالِهِمْ فَفَعَلَ وَاسْتَعْمَلَنِي عَلَيْهِمْ ثُمَّ اسْتَعْمَلَنِي أَبُو بَكْرٍ مِنْ بَعْدِهِ ثُمَّ اسْتَعْمَلَنِي عُمَرُ مِنْ بَعْدِهِ قَالَ فَقَدِمْتُ عَلَى قَوْمِي وَكَانَ مِنْ أَهْلِ السَّرَاةِ فَقلت فِي الْعَسَل زكوه هُوَ قَالَ زكوه فَإِنَّهُ لَا خير فِي مَالا لَا يزكّى قَالُوا كم ترى قلت الْعشْر فَأَخَذته مِنْهُمْ ثُمَّ قَدِمْتُ عَلَى عُمَرَ وَأَخْبَرْتُهُ بِمَا فِيهِ فَأَخَذَهُ عُمَرُ فَبَاعَهُ وَجَعَلَهُ فِي صَدَقَاتِ الْمُسْلِمِينَ رَوَاهُ الْبُخَارِيُّ عَنْ عَلِيِّ بْنِ الْمَدِينِيِّ عَنْ صَفْوَانَ بْنِ عِيسَى وَأَتْبَعَهُ عَنِ الصَّلْتِ عَنْ أَنَسِ بْنِ عِيَاضٍ عَنِ الْحَارِثِ بِبَعْضِ هَذِهِ الْقِصَّةِ

ثمَّ قَالَ بعد ذَلِك الْحَارِث بن عبد الرَّحْمَن بن أبي ذُبَاب الدوسي الْمَدِينِيّ عَن عَمه وَعبد الرَّحْمَن بن مهْرَان

وَهَذَا هُوَ الأول لَيْسَ بِغَيْرِهِ روى عَنهُ حَدِيثه عَن يزِيد بن هُرْمُز وَحَدِيثه عَن عَطاء بن ميناء وَحَدِيثه عَن عَمه وَحَدِيثه عَن عبد الرَّحْمَن بن مهْرَان أَبُو ضَمرَة أنس بن عِيَاض اللَّيْثِيّ وَهُوَ الَّذِي روى البُخَارِيّ عَن الصَّلْت عَنهُ حَدِيث الْحَارِث ابْن أبي ذُبَاب عَن مُنِير بن عبد الله الْمُقدم ذكره ...

பிரித்துப் பார்த்தல் (தஃப்ரீக்): ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதுபாப் என்பவர் ஒரே ஒரு நபர் தான். ஆனால் புகாரி இமாம் அவர்கள், ஹதீஸ் அறிவிப்பாளரின் ஆசிரியர்களின் பெயர்கள் மாறுபடுவதைக் கண்டு, அவர்கள் இருவேறுநபர்களாக இருக்கலாம் என்று நினைத்து, தனது 'அத்தாரீக்' எனும் நூலில் இரண்டு இடங்களில் தனித்தனியாக அவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

முதல் இடத்தில்: அறிவிப்பாளர் எண்-2432 இல் வரும் ஹாரிஸ் என்பவரின் ஆசிரியர்கள் யஸீத் பின் ஹுர்முஸ், அதாஉ பின் மீனாஃ ஆகியோர் என்றும்,

இரண்டாவது இடத்தில்: அறிவிப்பாளர் எண்-2433 இல் வரும் ஹாரிஸ் என்பவரின் ஆசிரியர்கள், அவரின் தந்தையின் சகோதர், அப்துர்ரஹ்மான் பின் மிஹ்ரான் ஆகியோர் என்றும்; இவரிடமிருந்து ஹாதிம் பின் இஸ்மாயீல் அறிவித்துள்ளார் என்றும் புகாரி இமாம் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் உண்மையில், இந்த நான்கு பேருமே ஒரே ஹாரிஸின் ஆசிரியர்கள் தான் என்றும், இதற்கு சான்றாக சில அறிவிப்பாளர்தொடர்களையும் கதீப் பஃக்தாதீ அவர்கள் குறிப்பிடுகிறார்.

1 . யஸீத் பின் ஹுர்முஸ்.

பார்க்க: முஸ்லிம்-5159,

2 . அப்துர்ரஹ்மான் பின் அஃரஜ்.

பார்க்க: முஸ்லிம்-5159,

3 . அதாஉ பின் மீனாஃ.

பார்க்க: முஸ்லிம்-5202, 5309,

4 . அப்துர்ரஹ்மான் பின் மிஹ்ரான்.

பார்க்க: முஸ்லிம்-1190,

5 . இயாள் பின் அப்துல்லாஹ் பின் ஸஃத் பின் அபூஸர்ஹ்.

பார்க்க: முஸ்லிம்-1799)


கதீப் ஃபக்தாதீ அவர்களுக்கு முன்பு இப்னு அபூஹாதிம் அவர்களும் இந்த இருவரை ஒருவராகவே குறிப்பிட்டுள்ளார்.

365 - الحارث بن عبد الرحمن بن أبي ذباب الدوسي (3) من أنفسهم

روى عن عمه وعبد الرحمن بن مهران ويزيد بن هرمز وسعيد المقبري وسليمان بن يسار وبسر بن سعيد

روى عنه ابن جريج وعبد العزيز بن محمد وحاتم بن إسماعيل [وعاصم بن عبد العزيز - 1] وأبو خالد الأحمر وصفوان بن عيسى سمعت أبي يقول ذلك.

قال أبو محمد وروى أيضا عن سعيد بن المسيب.

حدثنا عبد الرحمن قال ذكره أبي عن إسحاق بن منصور عن يحيى بن معين أنه قال: الحارث بن عبد الرحمن بن أبي ذباب مشهور.

حدثنا عبد الرحمن قال سألت أبي عن الحارث بن عبد الرحمن ابن أبي ذباب فقال: يروى عنه [الدراوردي - 2] أحاديث منكرة وليس بذاك بالقوي يكتب حديثه.

حدثنا عبد الرحمن قال وسئل أبو زرعة عن الحارث بن عبد الرحمن بن أبي ذباب فقال: مديني لا بأس به.

அபூஸலமா

أبو سلمة بن عبد الرحمن بن عوف

இறப்பு: ஹிஜ்ரி 94 அல்லது 104, மதீனா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ்

தந்தை பெயர்: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்

வம்சம்: குரஷீ அஸ்ஸுஹ்ரீ

புனைப்பெயர்: அபூஸலமா

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: ஹிஜ்ரி 20களின் பிற்பகுதியில், மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 94 அல்லது 104, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரஹ் அவர்கள் அபூஸலமா என்ற குன்யாவால் அறியப்பட்டவர். இவர் மதீனாவில் ஹிஜ்ரி 20களின் பிற்பகுதியில் பிறந்தார். இவர் ஒரு தாபிஈ மற்றும் மதீனாவின் ஏழு ஃபுகஹாக்களில் ஒருவராவார்.

இப்னு ஸஅத், இவர் பலமானவர், ஃபகீஹ், அதிகம் ஹதீஸ் அறிவிப்பவர் என்று கூறியுள்ளார். அபூ ஸுர்ஆ இமாம், இவர் பலமானவர், இமாம் என்று கூறியுள்ளார். இவர் மதீனாவில் ஹிஜ்ரி 94 அல்லது ஹிஜ்ரி 104 இல் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப், உஸ்மான் பின் அஃப்பான், தல்ஹா பின் உபைதுல்லாஹ், உபாதா பின் அஸ்ஸாமித், அபூ தர்ரா, ஆயிஷா பின்த் அபூபக்ர், உம்மு ஸலமா, ஸைனப் பின்த் அபூ ஸலமா, அப்துல்லாஹ் பின் ஸலாம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸஃத் பின் இப்ராஹீம், அப்துல்மஜீத் பின் ஸஹ்ல், ஸுராரா பின் முஸ்அப், அப்துர்ரஹ்மான் பின் ஹர்மாஸ் அல்அஃரஜ், அப்து ரப்பா பின் ஸயீத், உர்வா பின் அஸ்ஸுபைர், அஸ்ஸுஹ்ரீ, முஹம்மத் பின் இப்ராஹீம் பின் அல்ஹாரிஸ், யஹ்யா பின் அபூ கஸீர், அல்அஸ்வத் பின் அல்அலா பின் ஜாரியா, ஹுமைத் பின் ஸியாத், ஸாலிம் அபூ அந்நள்ர்

வேறு பெயர்கள்: அபூஸலமா, அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்


ஆதாரம்: muslimscholars.info (10567) · Should verify

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நபித்தோழர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.