தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3580

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் வெறுப்புக்குரிய செயல்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

லஞ்சம் வாங்குபவனையும், லஞ்சம் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

(அபூதாவூத்: 3580)

بَابٌ فِي كَرَاهِيَةِ الرَّشْوَةِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ:

«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِي وَالْمُرْتَشِي»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3580.
Abu-Dawood-Alamiah-3109.
Abu-Dawood-JawamiulKalim-3111.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் யூனுஸ்

3 . முஹம்மத் பின் அபூதிஃ-ப்

4 . ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான்

5 . அபூஸலமா

6 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10930-ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் என்பவரை இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள் மட்டுமே அறியப்படாதவர் என்று கூறியுள்ளார். (இதன் காரணம் இவரிடமிருந்து முஹம்மத் பின் அபூதிஃ-ப் அவர்கள் மட்டுமே ஹதீஸை அறிவித்துள்ளார் என்பதால் ஆகும். ஆனால் இவரிடமிருந்து வேறு சிலரும் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.)
  • இப்னு அபூதிஃ-ப் அவர்களின் தாயின் சகோதரரான ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் என்பவரை பற்றி நான் கேட்டபோது, இவரிடமிருந்து இப்னு அபூதிஃப் அறிவித்துள்ளார். இவர் பிரபலமானவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறினார் என உஸ்மான் பின் ஸயீத் தாரிமீ அவர்கள் அறிவித்துள்ளார்.
  • அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவரை நடுத்தரமானவர்-ஹஸன் தரத்தில் உள்ளவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-5/255, அல்காஷிஃப்-2/225, தஹ்தீபுத் தஹ்தீப்-1/333, தக்ரீபுத் தஹ்தீப்-1/211)

எனவே இது ஹஸன் தரமாகும்.


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (4/ 274)
558- وَسُئِلَ عَنْ حَدِيثِ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرحمن، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ لُعِنَ الرَّاشِي وَالْمُرْتَشِي.
فَقَالَ: يَرْوِيهِ الْحَسَنُ بْنُ عَطَاءٍ، وَقِيلَ: هُوَ الْحَسَنُ ابْنُ أَخِي أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ.
وَخَالَفَهُ الْحَارِثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، فَرَوَاهُ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَهُوَ أَشْبَهُ بِالصَّوَابِ.


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் —> அபூஸலமா —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, இப்னு மாஜா-2313, அபூதாவூத்-3580, திர்மிதீ-1337, …


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1336.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.