Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-542

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

542. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பிறகு பேசிக் கொண்டிருப்பவர் தொடர்பாக சாபித் அல்பனானி என்பவரிடம் விசாரித்தேன். அப்போது அவர் அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாக அறிவிக்கின்றார்.

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டது. அவ்வாறு இகாமத் சொல்லப் பட்டு விட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் குறுக்கிட்டு (பேசத் துவங்கினார்) இகாமத் சொல்லப்பட்ட பிறகு நபி (ஸல்) அவர்கள் அவருடன் பேச விடாமல் இருந்து விட்டார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரியிலம் இடம் பெறுகின்றது.)


سَأَلْتُ ثَابِتًا الْبُنَانِيَّ، عَنِ الرَّجُلِ يَتَكَلَّمُ بَعْدَمَا تُقَامُ الصَّلَاةُ فَحَدَّثَنِي، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «أُقِيمَتِ الصَّلَاةُ فَعَرَضَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَحَبَسَهُ بَعْدَ مَا أُقِيمَتِ الصَّلَاةُ»


Abu-Dawood-541

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

541. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவிப்பதற்காக தொழுகைக்கான இகாமத் சொல்லப்படும். நபி (ஸல்) அவர்கள் இடம் பிடிப்பதற்கு முன்பே மக்கள் தங்களுடைய இடங்களை பிடித்துக் கொள்வர் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.)


«أَنَّ الصَّلَاةَ كَانَتْ تُقَامُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَأْخُذُ النَّاسُ مَقَامَهُمْ قَبْلَ أَنْ يَأْخُذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Abu-Dawood-540

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

540. மேலுள்ள அதே அறிவிப்பாளர் வரிசையுடன் யஹ்யா வழியாக மஃமர் ——–> ஈஸா ——–> இப்றாஹீம் பின் மூஸா அறிவிக்கும் ஹதீஸ் இடம் பெறுகின்றது.

(வீட்டை விட்டு) வெளியாகி வர என்னை காணும் வரை (எழுந்திருக்க வேண்டாம்) என்று இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

புறப்பட்டு வரும் என்ற இந்த வார்த்தையை மஃமரை தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. மஃமரிடமிருந்து இப்னு உஐனா இந்த ஹதீஸை அறிவிக்கும் போது இந்த வார்த்தையை தெரிவிக்கவில்லை.


قَالَ: «حَتَّى تَرَوْنِي قَدْ خَرَجْتُ»


Abu-Dawood-539

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 189

உட்கார்ந்துக் கொண்டே இமாம் வரும் வரை மக்கள் காத்திருத்தல்.

539. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் என்னை காணும் வரை நீங்கள் எழுந்திருக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் தொடர் : 

அபூகதாதா ——–> அவரது மகன் அப்துல்லாஹ் ——–> மூஸாபின் இஸ்மாயீல் ஆகிய இருவர்.

(அபூகதாதா அவரது மகன் அப்துல்லாஹ்வுக்கு அறிவித்தார், அப்துல்லாஹ் எனக்கு அறிவித்தார் என்று அறிவிக்காமல்) அபூகதாதா மூலம் ——–> அப்துல்லாஹ் மூலம் என யஹ்யா அறிவிக்கின்றார்.

இதே மாதிரிதான் யஹ்யாவிடமிருந்து அய்யூப், ஹஜ்ஜாஜ் அஸ்ஸவ் வாப் ஆகியோர் அறிவிக்கின்றனர்.

எனக்கு இந்த ஹதீஸை யஹ்யா எழுதி கொடுத்தார் என ஹிஷாம் அத்-தஸ்தாவிய்யு என்பவர் தெரிவிக்கின்றார்.

நீங்கள் அமைதியாக என்னை காணும் வரை எழுந்திருக்க வேண்டாம் என இந்த ஹதீஸை யஹ்யாவிடமிருந்து முஆவியா பின் சலாம், அலி பின் முபாரக்

«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا تَقُومُوا حَتَّى تَرَوْنِي»


Abu-Dawood-538

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 188

இரண்டு தடவை அதான் சொல்லுதல்.

538. நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருக்கும் போது லுஹர் அல்லது அஸர் தொழுகையில் ஒருவர் இரண்டாவது தடவை அதான் சொன்னதும், என்னை வெளியே கொண்டு செல்! நிச்சயமாக இது பித்அத்தாகும் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என முஜாஹித் அறிவிக்கின்றார்கள்.


كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ فَثَوَّبَ رَجُلٌ فِي الظُّهْرِ أَوِ الْعَصْرِ، قَالَ: «اخْرُجْ بِنَا فَإِنَّ هَذِهِ بِدْعَةٌ»


Abu-Dawood-537

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 187

முஅத்தின் இமாமை எதிர்பார்த்தல்.

537. பிலால் (ரலி) அதான் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்களுக்காக காத்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் புறப்படக் கண்டதும் தொழுகைக்காக இகாமத் சொல்வார்கள் என்று ஜாபிர் பின் சமூரா அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீயில் இடம் பெறுகின்றது.)


«كَانَ بِلَالٌ يُؤَذِّنُ، ثُمَّ يُمْهِلُ فَإِذَا رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ خَرَجَ أَقَامَ الصَّلَاةَ»


Abu-Dawood-536

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 186

பாங்கு சொன்ன பிறகு பள்ளியிலிருந்து வெளியேறுதல்.

536. நாங்கள் அபூஹுரைரா (ரலி) யுடன் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தோம். முஅத்தின் அவர் தொழுகைக்காக அதான் சொல்லிக் கொண்டிருந்த போது ஒருவர் வெளியே சென்றார். அப்போது அபூஹுரைரா (ரலி) இவர் அபுல் காஸிமி(ன் வழிமுறை)க்கு மாறு செய்து விட்டார் என்று சொன்னார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.)


كُنَّا مَعَ أَبِي هُرَيْرَةَ فِي الْمَسْجِدِ فَخَرَجَ رَجُلٌ حِينَ أَذَّنَ الْمُؤَذِّنُ لِلْعَصْرِ، فَقَالَ أَبُو هُرَيْرَةَ: «أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Abu-Dawood-535

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 185

கண் தெரியாதவர்  அதான் சொல்தல்.

535. அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முஅத்தினாக பணிபுரிந்தார்கள். அவர் கண் பார்வையற்றவராவர் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் இடம் பெறுகின்றது.)


«أَنَّ ابْنَ أُمِّ مَكْتُومٍ، كَانَ مُؤَذِّنًا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ أَعْمَى»


Abu-Dawood-534

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

534. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது இரு கைகளை அகலமாக நீட்டி இவ்வாறு பஜ்ர் நேரம் உனக்கு தெளிவாக தெரியும் வரையில் நீ அதான் சொல்ல வேண்டாம் என்று பிலால் (ரலி) அவர்கள் அறிவித்ததாக ஷத்தாத் என்பவர் அறிவிக்கின்றார்.

இயாள் என்பவரின் அடிமையான ஷத்தாத் பிலால் (ரலி) யை சந்திக்கவில்லை என இமாம் அபூதாவூத் தெரிவிக்கின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «لَا تُؤَذِّنْ حَتَّى يَسْتَبِينَ لَكَ الْفَجْرُ هَكَذَا» وَمَدَّ يَدَيْهِ عَرْضًا


Abu-Dawood-533

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

533. மஸ்ரூஹ் என்ற பெயர் கொண்ட உமர் (ரலி) அவர்களின் முஅத்தின் சுப்ஹு நேரத்திற்கு முந்தி அதான் சொல்லி விட்டார். அவருக்கு உமர் (ரலி) (அதானை திரும்பச் சொல்லுமாறு) உத்தரவிட்டார்கள் என்று மேலுள்ள ஹதீஸை போன்றே நாபிஃஉ வழியாக இந்த அறிவிப்பு இடம் பெறுகின்றது.

மஸ்ரூஹ் என்ற பெயரை கொண்ட அல்லது வேறு பெயர் கொண்ட உமர் (ரலி) அவர்களின் முஅத்தின் என்று நாபிஃஉ அல்லது வேறொருவர் மூலமாக உபைத்துல்லாஹ் பின் உமர் வழியாக ஹம்மாத் பின் சைத் அறிவிக்கின்றார்.

உமர் (ரலி) அவர்களிடம் மஸ்வூத் என்ற பெயர் கொண்ட முஅத்தின் இருந்தார் என்று மேலுள்ள ஹதீஸின் கருத்தை இப்னு உமர் (ரலி) நாபிஃ ——–> உபைத்துல்லாஹ் வழியாக தராவர்தி அறிவிக்கின்றார். இந்த அறிவிப்பே சரியானதாகும் என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.


أَذَّنَ قَبْلَ الصُّبْحِ فَأَمَرَهُ عُمَرُ فَذَكَرَ نَحْوَهُ، قَالَ أَبُو دَاوُدَ: وَقَدْ رَوَاهُ حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ أَوْ غَيْرِهِ أَنَّ مُؤَذِّنًا لِعُمَرَ، يُقَالُ لَهُ: مَسْرُوحٌ أَوْ غَيْرُهُ


Next Page » « Previous Page