Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-1400

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1400.

திருக்குர்ஆனின் 30 வசனங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அதை ஓதுபவர் மன்னிக்கப்படும் வரை அந்த அத்தியாயம் பரிந்துரை செய்து கொண்டே இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, தபாரகல்லதீ பியதிஹில் முல்கு என்ற அத்தியாயமே அது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


سُورَةٌ مِنَ الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً، تَشْفَعُ لِصَاحِبِهَا حَتَّى يُغْفَرَ لَهُ: تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ


Abu-Dawood-4212

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

4212.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். அவர்கள் சில புறாக்களின் நெஞ்சுப் பகுதியில் உள்ளதைப் போன்ற கருப்பு நிறத்தால் சாயமிட்டுக் கொள்வார்கள். அவர்கள் சொர்க்கத்தின் வாடையைக் கூட பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி­)


«يَكُونُ قَوْمٌ يَخْضِبُونَ فِي آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ، كَحَوَاصِلِ الْحَمَامِ، لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ»


Abu-Dawood-994

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

994.


أَنَّهُ رَأَى رَجُلًا يَتَّكِئُ عَلَى يَدِهِ الْيُسْرَى وَهُوَ قَاعِدٌ فِي الصَّلَاةِ – قَالَ هَارُونُ بْنُ زَيْدٍ، سَاقِطًا عَلَى شِقِّهِ الْأَيْسَرِ، ثُمَّ اتَّفَقَا -، فَقَالَ لَهُ: «لَا تَجْلِسْ هَكَذَا، فَإِنَّ هَكَذَا يَجْلِسُ الَّذِينَ يُعَذَّبُونَ»


Abu-Dawood-992

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தொழுகையில் கையை ஊன்றுவது வெறுக்கத்தக்கது.

992. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் தொழுகையில் தம் கையை ஊன்றி அமர்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

(இது அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் கூறிய வார்த்தையாகும்)

(ஸஜ்தாவிற்காக அமர்ந்தாலும், அத்தஹிய்யாத்திற்காக அமர்ந்தாலும் கையை ஊன்றுவது தடை என்று மேற்கண்ட நபிமொழி குறிப்பிடுகிறது.)

ஒருவர் தொழுகையில் கை ஊன்றுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று இப்னு ஷப்புவைஹி அறிவிக்கிறார். (எல்லா நிலையிலும் கையை ஊன்றுவது தடுக்கப்படுவதாக இந்தச் செய்தி கூறுகிறது)

ஒருவர் தொழுகையில் தம் கையை ஊன்றுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று இப்னு ராஃபிஉ கூறுகிறார். இதை ஸஜ்தாவிலிருந்து எழும்போது பற்றிய பாடத்தில் குறிப்பிடுகிறார்.

ஒருவர் தொழுகையிலிருந்து எழும்போது தம் கையை ஊன்றி எழுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று இப்னு அப்துல் மலிக் அறிவிக்கிறார். (இது ஸஜ்தாவிலிருந்து எழும்போது கை ஊன்றுவது தடுக்கப்படுவதாக குறிப்பிடுகிறது)

 

 


نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ: – أَنْ يَجْلِسَ الرَّجُلُ فِي الصَّلَاةِ، وَهُوَ مُعْتَمِدٌ عَلَى يَدِهِ

وَقَالَ ابْنُ شَبُّوَيْهِ: «نَهَى أَنْ يَعْتَمِدَ الرَّجُلُ عَلَى يَدِهِ فِي الصَّلَاةِ»،

وَقَالَ ابْنُ رَافِعٍ: «نَهَى أَنْ يُصَلِّيَ الرَّجُلُ، وَهُوَ مُعْتَمِدٌ عَلَى يَدِهِ» وَذَكَرَهُ فِي بَابِ الرَّفْعِ مِنَ السُّجُودِ،

وَقَالَ ابْنُ عَبْدِ الْمَلِكِ، «نَهَى أَنْ يَعْتَمِدَ الرَّجُلُ عَلَى يَدَيْهِ إِذَا نَهَضَ فِي الصَّلَاةِ»


Abu-Dawood-4159

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அத்தியாயம்: 32

தலை வாருதல்.

4159. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் விட்டு ஒருநாள் தலைவாருவதைத் தவிர (அடிக்கடி வரம்புமீறி)  தலைவாருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّرَجُّلِ إِلَّا غِبًّا»


Abu-Dawood-4163

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

முடியை ஒழுங்காக பராமரித்தல்.

4163. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)


«مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ»


Abu-Dawood-5177

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5177.

…பனூ ஆமிர் குலத்தைச் சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்)அவர்கள் விட்டில் இருக்கும் போது நான் நுழையலாமா? என்று அனுமதி கோரினார். நபியவர்கள் தன்னுடைய பணியாளருக்கு “நீ வெளியே அவரின் பக்கம் சென்று அவருக்கு அனுமதி பெறும் முறையைக் கற்றுக் கொடு. ” அஸ்ஸலாமு அலைக்கும் (என்று முதல் ஸலாம் கூறி பிறகு ) நான் நுழையலாமா? என்று தான் (அனுமதி பெறும் போது)கூற வேண்டும். “என்று அவருக்குச் சொல்” என்று கூறினார்கள். அம்மனிதர் இதனை செவியேற்றார். உடனே அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறி பிறகு நான் நுழையலாமா? என்று அனுமதி கோரினார் நபியவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


أَنَّهُ اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي بَيْتٍ فَقَالَ: أَلِجُ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِخَادِمِهِ: ” اخْرُجْ إِلَى هَذَا فَعَلِّمْهُ الِاسْتِئْذَانَ، فَقُلْ لَهُ: قُلِ السَّلَامُ عَلَيْكُمْ، أَأَدْخُلُ؟ ” فَسَمِعَهُ الرَّجُلُ، فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، أَأَدْخُلُ؟ فَأَذِنَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ


Abu-Dawood-2536

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2536.


عَجِبَ رَبُّنَا عَزَّ وَجَلَّ مِنْ رَجُلٍ غَزَا فِي سَبِيلِ اللَّهِ فَانْهَزَمَ – يَعْنِي أَصْحَابَهُ – فَعَلِمَ مَا عَلَيْهِ، فَرَجَعَ حَتَّى أُهَرِيقَ دَمُهُ، فَيَقُولُ اللَّهُ تَعَالَى لِمَلَائِكَتِهِ: انْظُرُوا إِلَى عَبْدِي رَجَعَ رَغْبَةً فِيمَا عِنْدِي، وَشَفَقَةً مِمَّا عِنْدِي حَتَّى أُهَرِيقَ دَمُهُ


Abu-Dawood-4727

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4727. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களில் ஒருவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு (அல்லாஹ்விடமிருந்து) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரின் காது சோனையிலிருந்து தோள்புஜம் வரை உள்ள இடைவெளியானது எழுநூறு ஆண்டுகள் பயணிக்கும் தொலைவாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«أُذِنَ لِي أَنْ أُحَدِّثَ عَنْ مَلَكٍ مِنْ مَلَائِكَةِ اللَّهِ مِنْ حَمَلَةِ الْعَرْشِ، إِنَّ مَا بَيْنَ شَحْمَةِ أُذُنِهِ إِلَى عَاتِقِهِ مَسِيرَةُ سَبْعِ مِائَةِ عَامٍ»


Abu-Dawood-3228

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அடக்கத்தலத்தின் மீது உட்காருவது வெறுப்பிற்குரிய செயல்.

3228. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைவதானது, ஓர் அடக்கத்தலத்தின் (கப்ரு) மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ فَتُحْرِقَ ثِيَابَهُ، حَتَّى تَخْلُصَ إِلَى جِلْدِهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»


Next Page » « Previous Page