1332. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்தார்கள். அப்போது, மக்கள் குர்ஆனை சத்தமிட்டு ஓதுவதைச் செவியேற்றார்கள். எனவே, (தனது கூடாரத்தின்) திரையை விளக்கிவிட்டு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிந்துக் கொள்ளுங்கள்! உங்களில் ஒவ்வொருவரும் தன் இறைவனிடம் இரகசியமாக உரையாடுகிறார். எனவே உங்களில் சிலர், சிலருக்கு சிரமத்தை ஏற்படுத்தவேண்டாம். உங்களில் சிலர், சிலருக்கு இடையூறாக தொழுகையில் குர்ஆனை சத்தமிட்டு ஓத வேண்டாம்.
اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ، فَسَمِعَهُمْ يَجْهَرُونَ بِالْقِرَاءَةِ، فَكَشَفَ السِّتْرَ، وَقَالَ: «أَلَا إِنَّ كُلَّكُمْ مُنَاجٍ رَبَّهُ، فَلَا يُؤْذِيَنَّ بَعْضُكُمْ بَعْضًا، وَلَا يَرْفَعْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ فِي الْقِرَاءَةِ»، أَوْ قَالَ: «فِي الصَّلَاةِ»
சமீப விமர்சனங்கள்