Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-2522

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(ஷஹீத்) உயிர்த்தியாகியின் பரிந்துரை ஏற்கப்படும்.

2522. நிம்ரான் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (தந்தையை இழந்த) அனாதைகளாக உம்முத்தர்தா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், “ஒரு நற்செய்தியை தெரிந்துக்கொள்ளுங்கள்”. (மறுமை நாளில் ஷஹீது எனும்) ஓரு உயிர்த்தியாகி தமது குடும்பத்தாரில் எழுபது பேருக்கு பரிந்துரை செய்வார். அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று (எனது கணவர்) அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இதில் இடம்பெறும் வலீத் பின் ரபாஹ் அத்திமாரீ என்ற பெயர் ரபாஹ் பின் வலீத் என்பதே சரியாகும்.


دَخَلْنَا عَلَى أُمِّ الدَّرْدَاءِ وَنَحْنُ أَيْتَامٌ، فَقَالَتْ: أَبْشِرُوا، فَإِنِّي سَمِعْتُ أَبَا الدَّرْدَاءَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُشَفَّعُ الشَّهِيدُ فِي سَبْعِينَ مِنْ أَهْلِ بَيْتِهِ»


Abu-Dawood-850

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 287

இரு ஸஜ்தாக்களுக்கு இடையே கூறவேண்டிய பிரார்த்தனை.

850. நபி (ஸல்) அவர்கள், இரு ஸஜ்தாக்களுக்கு இடையே உள்ள இருப்பில், “அல்லாஹும்மஃக்ஃபிர்லீ, வர்ஹம்னீ, வ ஆஃபினீ, வஹ்தினீ, வர்ஸுக்னீ

(பொருள்: அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு உடல் நலத்தை தருவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்கு உணவு வழங்குவாயாக!) என்று பிரார்த்தனை செய்வார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَعَافِنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي»


Abu-Dawood-2369

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2369. …”இரத்தம் குத்தி எடுத்தவரும், எடுக்கப் பட்டவரும் நோன்பை விட்டுவிட்டார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى عَلَى رَجُلٍ بِالْبَقِيعِ، وَهُوَ يَحْتَجِمُ، وَهُوَ آخِذٌ بِيَدِي لِثَمَانِ عَشْرَةَ خَلَتْ مِنْ رَمَضَانَ، فَقَالَ: «أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ»


Abu-Dawood-4338

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4338. கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு தடவை அபூபக்ர் (ரலி) அவர்கள் (உரை நிகழ்த்த எழுந்து நின்று) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். அதில், மக்களே! நீங்கள், “நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர்வழி நடக்கும்போது வழிகெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது” என்ற (அல்குர்ஆன் 5:105) வசனத்தை ஓதுகின்றீர்கள். ஆனால் அதற்கு பொருத்தமில்லாத பொருள் கொள்கின்றீர்கள்.

(அதன் விளக்கம் என்னவெனில்) “மக்கள், அநியாயம் செய்யும் ஒருவனை கண்டும் அவனுடைய கையைப் பிடித்து அதைத் தடுக்காமல் இருந்தால் (நல்லோர், தீயோர்) என அனைவருக்கும் அல்லாஹ் தண்டனையை தந்துவிடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நாங்கள் செவியேற்றுள்ளோம் எனக் கூறினார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

ஹுஷைம் அவர்களிடமிருந்து அம்ர் பின் அவ்ன் அவர்கள் கீழ்கண்டவாறு அறிவித்துள்ளார்:

“ஒரு கூட்டத்தாரில் பாவங்கள் நடைபெறும்போது அதைத் தடுப்பதற்கு சக்தியுள்ள மனிதர்கள் அதைத் தடுக்காவிட்டால், அவர்கள் இறப்பதற்குள் அல்லாஹ்வின் தண்டனை அவர்களை வந்தடையும்”என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

காலித் பின் அப்துல்லாஹ் அவர்கள் அறிவிப்பதைப் போன்றே அபூஉஸாமா

قَالَ أَبُو بَكْرٍ: بَعْدَ أَنْ حَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ: يَا أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ تَقْرَءُونَ هَذِهِ الْآيَةَ، وَتَضَعُونَهَا عَلَى غَيْرِ مَوَاضِعِهَا: {عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105]، قَالَ: عَنْ خَالِدٍ، وَإِنَّا سَمِعْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ النَّاسَ إِذَا رَأَوُا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ، أَوْشَكَ أَنْ يَعُمَّهُمُ اللَّهُ بِعِقَابٍ»

وَقَالَ عَمْرٌو: عَنْ هُشَيْمٍ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي، ثُمَّ يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا، ثُمَّ لَا يُغَيِّرُوا، إِلَّا يُوشِكُ أَنْ يَعُمَّهُمُ اللَّهُ مِنْهُ بِعِقَابٍ»

قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ كَمَا قَالَ خَالِدٌ أَبُو أُسَامَةَ: وَجَمَاعَةٌ، وَقَالَ شُعْبَةُ فِيهِ: «مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي هُمْ أَكْثَرُ مِمَّنْ يَعْمَلُهُ»


Abu-Dawood-4341

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4341.


سَأَلْتُ أَبَا ثَعْلَبَةَ الْخُشَنِيَّ، فَقُلْتُ: يَا أَبَا ثَعْلَبَةَ، كَيْفَ تَقُولُ فِي هَذِهِ الْآيَةِ: {عَلَيْكُمْ أَنْفُسَكُمْ} [المائدة: 105]؟ قَالَ: أَمَا وَاللَّهِ لَقَدْ سَأَلْتَ عَنْهَا خَبِيرًا، سَأَلْتُ عَنْهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «بَلِ ائْتَمِرُوا بِالْمَعْرُوفِ، وَتَنَاهَوْا عَنِ الْمُنْكَرِ، حَتَّى إِذَا رَأَيْتَ شُحًّا مُطَاعًا، وَهَوًى مُتَّبَعًا، وَدُنْيَا مُؤْثَرَةً، وَإِعْجَابَ كُلِّ ذِي رَأْيٍ بِرَأْيِهِ، فَعَلَيْكَ – يَعْنِي – بِنَفْسِكَ، وَدَعْ عَنْكَ الْعَوَامَّ، فَإِنَّ مِنْ وَرَائِكُمْ أَيَّامَ الصَّبْرِ، الصَّبْرُ فِيهِ مِثْلُ قَبْضٍ عَلَى الْجَمْرِ، لِلْعَامِلِ فِيهِمْ مِثْلُ أَجْرِ خَمْسِينَ رَجُلًا يَعْمَلُونَ مِثْلَ عَمَلِهِ»، وَزَادَنِي غَيْرُهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَجْرُ خَمْسِينَ مِنْهُمْ؟ قَالَ: «أَجْرُ خَمْسِينَ مِنْكُمْ»


Abu-Dawood-782

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 266

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை சத்தமின்றி ஓதவேண்டும் என்பவரின் கருத்து.

782. நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ، ” كَانُوا يَفْتَتِحُونَ الْقِرَاءَةَ بِ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]


Abu-Dawood-5242

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

பாதையில் தொல்லை தருவதை அகற்றுவது.

5242. மனிதனின் உடலில் 360 மூட்டுக்கள் உள்ளன. ஒவ்வொரு மூட்டுக்காவும் அவர் தர்மம் செய்தாக வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! யாரால் இதைச் செய்ய முடியும் என நபித்தோழர்கள் கேட்டனர்.

‘பள்ளியில் துப்பப்பட்ட எச்சிலை புதைத்துவிடுவது, பாதையில் தொல்லை தருவதை அகற்றிவிடுவது போன்ற செயல்களால் அந்த தர்மத்தை செய்ய முடியும். அதற்கு சக்தி பெறாவிட்டால் லுஹாவுடைய இரண்டு ரக்அத்துக்கள் உனக்கு அதை ஈடு செய்யும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)


«فِي الْإِنْسَانِ ثَلَاثُ مِائَةٍ وَسِتُّونَ، مَفْصِلًا فَعَلَيْهِ أَنْ يَتَصَدَّقَ عَنْ كُلِّ مَفْصِلٍ مِنْهُ بِصَدَقَةٍ» قَالُوا: وَمَنْ يُطِيقُ ذَلِكَ يَا نَبِيَّ اللَّهِ؟ قَالَ: «النُّخَاعَةُ فِي الْمَسْجِدِ تَدْفِنُهَا، وَالشَّيْءُ تُنَحِّيهِ عَنِ الطَّرِيقِ فَإِنْ لَمْ تَجِدْ فَرَكْعَتَا الضُّحَى تُجْزِئُكَ»


Abu-Dawood-1261

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஃபஜ்ர் தொழுத பின் ஒருக்களித்து படுத்தல்.

1261. உங்களில் ஒருவர் ஸுப்ஹுக்கு முன் (சுன்னத்தான) இரண்டு ரக்அத்கள் தொழுதால் அவர் தனது வலது புறம் ஒருக்களித்து படுத்துக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

….


«إِذَا صَلَّى أَحَدُكُمُ الرَّكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ، فَلْيَضْطَجِعْ عَلَى يَمِينِهِ»، فَقَالَ لَهُ مَرْوَانُ بْنُ الْحَكَمِ: أَمَا يُجْزِئُ أَحَدَنَا مَمْشَاهُ إِلَى الْمَسْجِدِ حَتَّى يَضْطَجِعَ عَلَى يَمِينِهِ، قَالَ عُبَيْدُ اللَّهِ فِي حَدِيثِهِ: قَالَ: لَا، قَالَ: فَبَلَغَ ذَلِكَ ابْنَ عُمَرَ، فَقَالَ: أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ عَلَى نَفْسِهِ، قَالَ: فَقِيلَ لِابْنِ عُمَرَ: هَلْ تُنْكِرُ شَيْئًا مِمَّا يَقُولُ؟ قَالَ: «لَا، وَلَكِنَّهُ اجْتَرَأَ وَجَبُنَّا»، قَالَ: فَبَلَغَ ذَلِكَ أَبَا هُرَيْرَةَ، قَالَ: «فَمَا ذَنْبِي إِنْ كُنْتُ حَفِظْتُ وَنَسَوْا»


Abu-Dawood-3651

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3651.


قُلْتُ لِلزُّبَيْرِ: مَا يَمْنَعُكَ أَنْ تُحَدِّثَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا يُحَدِّثُ عَنْهُ أَصْحَابُهُ، فَقَالَ: أَمَا وَاللَّهِ لَقَدْ كَانَ لِي مِنْهُ وَجْهٌ وَمَنْزِلَةٌ، وَلَكِنِّي سَمِعْتُهُ يَقُولُ: «مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»


Next Page » « Previous Page