Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-3660

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3660. நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று, அதை மனனமிட்டு மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! ஏனெனில் (என்னிடமிருந்து) கல்விபெறும் சிலர், தன்னை விட புலமையுடையவர்களிடம் கல்வியை சேர்த்துவிடக்கூடும். கல்வியுடையவர்களில் சிலர் அதில் புலமைபெறாமலும் இருக்கின்றனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)


«نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا حَدِيثًا، فَحَفِظَهُ حَتَّى يُبَلِّغَهُ، فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ، وَرُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ»


Abu-Dawood-2328

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2328.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: «هَلْ صُمْتَ مِنْ شَهْرِ شَعْبَانَ شَيْئًا؟» قَالَ: لَا، قَالَ: «فَإِذَا أَفْطَرْتَ فَصُمْ يَوْمًا»، وَقَالَ: أَحَدُهُمَا يَوْمَيْنِ


Abu-Dawood-831

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

831. நாங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த போது எங்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். எங்களில் அரபியரும் அரபியல்லாதவரும் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், எல்லாமே! (அதாவது இரண்டு சாரார் ஓதுவதும்) அழகாகத் தான் உள்ளது. அம்பு வளைவின்றி நேராக ஆக்கப்படுவது போல் குர்ஆனை நேராக ஆக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள்.

(அதாவது, உச்சரிப்புக்கள், ராகங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். அவர்கள் (இம்மையிலேயே) அதன் கூலியை அவசரமாகத் தேடுவார்கள். மறுமைக் கூலிக்காக காத்திருக்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி)


خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَنَحْنُ نَقْتَرِئُ، فَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ كِتَابُ اللَّهِ وَاحِدٌ، وَفِيكُمُ الْأَحْمَرُ وَفِيكُمُ الْأَبْيَضُ وَفِيكُمْا لْأَسْوَدُ، اقْرَءُوهُ قَبْلَ أَنْ يَقْرَأَهُ أَقْوَامٌ يُقِيمُونَهُ كَمَا يُقَوَّمُ السَّهْمُ يُتَعَجَّلُ أَجْرُهُ وَلَا يُتَأَجَّلُهُ»


Abu-Dawood-830

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

படிப்பறிவு இல்லாதோருக்கும், அரபியல்லாதோருக்கும் ஓதும் முறையில் குறைந்த பட்ச அளவு.

830. அரபுகளும், வேற்றுமொழியினரும் கலந்திருந்து நாங்கள் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த போது எங்களிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கல், நீங்கள் ஓதுங்கள்! அனைவர் ஓதுவதும் அழகாக உள்ளன. ஈட்டி சீர்படுத்தப்படுவது போல் குர்ஆனைச் சீர்படுத்துவோர் தோன்றுவார்கள். அவர்கள் இவ்வுலகில் அதன் கூலியை எதிர்பார்ப்பார்கள். மறுமையில் எதிர்பர்க்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ وَفِينَا الْأَعْرَابِيُّ وَالْأَعْجَمِيُّ، فَقَالَ: «اقْرَءُوا فَكُلٌّ حَسَنٌ وَسَيَجِيءُ أَقْوَامٌ يُقِيمُونَهُ كَمَا يُقَامُ الْقِدْحُ يَتَعَجَّلُونَهُ وَلَا يَتَأَجَّلُونَهُ»


Abu-Dawood-4160

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4160. அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் எகிப்தில் இருக்கும் போது, நபித்தோழர்களில் ஒருவர் அவரை சந்திக்க சென்றார். அவர் அவர்களிடம் சென்று, “( ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களே!) உங்களை (வெறுமனே) சந்தித்துவிட்டு செல்ல நான் வரவில்லை. மாறாக நீங்களும், நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஹதீஸை கேட்டுள்ளோம். அதைப்பற்றிய (கூடுதல்) ஞானம் தங்களுக்கு இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

அதற்கு ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், “அது என்ன? என்று கேட்டார். அதற்கு அவர், “இன்னின்ன செய்திகள்” என்று பதில் கூறினார். பின்பு அவர், ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களிடம் நீங்கள் இந்த நிலப்பரப்பின் தலைவராக இருந்தும் சீவாத தலையுடைவர்களாக உங்களை காண்கிறேனே! (அது ஏன்?) என்று கேட்டார். அதற்கு ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், “நாங்கள் (வரம்பு மீறி தலை வாரி) அலங்காரம் செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்று கூறினார். அவர், உங்களை செறுப்பணியாதவராக காண்கிறேனே (அது ஏன்?) என்று கேட்டார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் சில நேரம் செறுப்பணியாமல் நடக்குமாறு கட்டளையிட்டார்கள் என்று கூறினார்கள்.


أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحَلَ إِلَى فَضَالَةَ بْنِ عُبَيْدٍ وَهُوَ بِمِصْرَ، فَقَدِمَ عَلَيْهِ، فَقَالَ: أَمَا إِنِّي لَمْ آتِكَ زَائِرًا، وَلَكِنِّي سَمِعْتُ أَنَا وَأَنْتَ حَدِيثًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجَوْتُ أَنْ يَكُونَ عِنْدَكَ مِنْهُ عِلْمٌ، قَالَ: وَمَا هُوَ؟ قَالَ: كَذَا وَكَذَا، قَالَ: فَمَا لِي أَرَاكَ شَعِثًا وَأَنْتَ أَمِيرُ الْأَرْضِ؟ قَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْهَانَا عَنْ كَثِيرٍ مِنَ الإِرْفَاهِ»، قَالَ: فَمَا لِي لَا أَرَى عَلَيْكَ حِذَاءً؟ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا أَنْ نَحْتَفِيَ أَحْيَانًا»


Abu-Dawood-1649

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1649. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று வகையான கைகள் உள்ளன.

1 . அல்லாஹ்வின் கை. அது மிகவும் உயர்ந்தது.

2 . தர்மம் கொடுப்பவரின் கை. அது அல்லாஹ்வின் கைக்கு அடுத்து இருக்கிறது.

3 . யாசிப்பவரின் கை. அது மிகவும் கீழே இருக்கிறது.

உன் தேவைக்கு போக எஞ்சியதை தர்மம் செய்! (தர்மம் செய்யாதே என்று உன் மனம் கூறும் போது) உன் மனதை கட்டுப்படுத்த இயலாதவனாக ஆகிவிடாதே!

அறிவிப்பவர்: மாலிக் பின் நள்லா (ரலி)

 


الْأَيْدِي ثَلَاثَةٌ: فَيَدُ اللَّهِ الْعُلْيَا، وَيَدُ الْمُعْطِي الَّتِي تَلِيهَا، وَيَدُ السَّائِلِ السُّفْلَى، فَأَعْطِ الْفَضْلَ، وَلَا تَعْجِزْ عَنْ نَفْسِكَ


Abu-Dawood-5138

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5138.


كَانَتْ تَحْتِي امْرَأَةٌ وَكُنْتُ أُحِبُّهَا وَكَانَ عُمَرُ يَكْرَهُهَا فَقَالَ: لِي طَلِّقْهَا فَأَبَيْتُ فَأَتَى عُمَرُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَلِّقْهَا»


Abu-Dawood-2574

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(போட்டி வைத்து) பரிசளித்தல்.

2574. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெற்றி பரிசு என்பது ஒட்டகப் பந்தயம், குதிரைப் பந்தயம், அம்பெறிவது இவைகளுக்கு தான் தகுதியானது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«لَا سَبَقَ إِلَّا فِي خُفٍّ أَوْ فِي حَافِرٍ أَوْ نَصْلٍ»


Abu-Dawood-3546

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஒரு பெண் தன்னுடைய கணவனின் அனுமதியின்றி பிறருக்கு அன்பளிப்பு தருவது.

3546. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவனின் பொறுப்பில் வந்துவிட்டால், (தான் விரும்பியவாறு) அவள் பொருளாதாரத்தை அவள் செலவிட அனுமதியில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَا يَجُوزُ لِامْرَأَةٍ أَمْرٌ فِي مَالِهَا إِذَا مَلَكَ زَوْجُهَا عِصْمَتَهَا»


Next Page » « Previous Page