Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-457

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 157

பள்ளிவாசலில் விளக்கேற்றுவது.

457. நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணாகிய மைமூனா பின்த் ஸஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல் பற்றி எங்களுக்கு மார்க்கத்தீர்ப்பு கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்று நீங்கள் தொழுதுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (அது சமயம் அந்த ஊர்களில் யுத்தம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது). நீங்கள் அங்கு சென்று தொழமுடியவில்லையென்றால் அந்தப்பள்ளிவாசலில் விளக்கெரிப்பதற்காக ஆலிவ் எண்ணெயை அனுப்புங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸியாத் பின் அபூ ஸவ்தா


أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَفْتِنَا فِي بَيْتِ الْمَقْدِسِ فَقَالَ: «ائْتُوهُ فَصَلُّوا فِيهِ» وَكَانَتِ الْبِلَادُ إِذْ ذَاكَ حَرْبًا، «فَإِنْ لَمْ تَأْتُوهُ وَتُصَلُّوا فِيهِ، فَابْعَثُوا بِزَيْتٍ يُسْرَجُ فِي قَنَادِيلِهِ»


Abu-Dawood-4998

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நகைச்சுவை.

4998. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே (வாகனத்தில்) என்னை ஏற்றிவிடுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஒட்டகக் குட்டியின் மீது உம்மை நாம் ஏற்றிவிடுவோம் என்று கூறினார்கள். அம்மனிதர் ஒட்டகக் குட்டியை வைத்து நான் என்ன செய்வேன்? (அதில் பயணிக்க முடியாதே) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (எல்லா) ஒட்டகங்களும் தாய் ஒட்டகத்திற்கு குட்டிகளாகத்தானே இருக்கின்றன? என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، احْمِلْنِي، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّا حَامِلُوكَ عَلَى وَلَدِ نَاقَةٍ» قَالَ: وَمَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَهَلْ تَلِدُ الْإِبِلَ إِلَّا النُّوقُ»


Abu-Dawood-1458

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1458.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ يُصَلِّي، فَدَعَاهُ، قَالَ: فَصَلَّيْتُ ثُمَّ أَتَيْتُهُ، قَالَ: فَقَالَ: «مَا مَنَعَكَ أَنْ تُجِيبَنِي؟»، قَالَ: كُنْتُ أُصَلِّي، قَالَ: ” أَلَمْ يَقُلِ اللَّهُ عَزَّ وَجَلَّ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ} [الأنفال: 24]، لَأُعَلِّمَنَّكَ [ص:72] أَعْظَمَ سُورَةٍ مِنَ الْقُرْآنِ – أَوْ فِي الْقُرْآنِ، شَكَّ خَالِدٌ – قَبْلَ أَنْ أَخْرُجَ مِنَ الْمَسْجِدِ “، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَوْلُكَ: قَالَ: «الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ هِيَ السَّبْعُ الْمَثَانِي الَّتِي أُوتِيتُ، وَالْقُرْآنُ الْعَظِيمُ»


Abu-Dawood-5019

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5019. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காலம் சுருங்கும்போது ஒரு இறைநம்பிக்கையாளர் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. உங்களில் (நல்ல) உண்மையான கனவு காண்பவரே உண்மை பேசுகின்றவர் ஆவார்.

கனவுகள் மூன்று வகையாகும். நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும். கவலையளிக்கக்கூடிய கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். இன்னொரு வகை ஒரு மனிதரின் உள்ளத்தில் தோன்றுகின்ற பிரமையாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால், உடனே அவர் எழுந்து (இறைவனைத்) தொழட்டும். அதைப் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஹம்மது பின் ஸீரீன் கூறுகிறார்:)

நான் காலில் விலங்கிடப்படுவதைப் போன்று கனவு காண்பதை விரும்புகிறேன். கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை வெறுக்கிறேன். கால் விலங்கு, மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

காலம் சுருங்கும்போது-நெருங்கும்போது என்பதின் கருத்து, “இரவும் பகலும் சமமாக இருக்கும் போது” என்பதாகும்.


إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُؤْمِنِ أَنْ تَكْذِبَ، وَأَصْدَقُهُمْ رُؤْيَا أَصْدَقُهُمْ حَدِيثًا، وَالرُّؤْيَا ثَلَاثٌ: فَالرُّؤْيَا الصَّالِحَةُ بُشْرَى مِنَ اللَّهِ، وَالرُّؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ، وَرُؤْيَا مِمَّا يُحَدِّثُ بِهِ الْمَرْءُ نَفْسَهُ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُ، فَلْيَقُمْ، فَلْيُصَلِّ وَلَا يُحَدِّثْ بِهَا النَّاسَ “

قَالَ: «وَأُحِبُّ الْقَيْدَ وَأَكْرَهُ الْغُلَّ، وَالْقَيْدُ ثَبَاتٌ فِي الدِّينِ»

قَالَ أَبُو دَاوُدَ: «إِذَا اقْتَرَبَ الزَّمَانُ يَعْنِي إِذَا اقْتَرَبَ اللَّيْلُ وَالنَّهَارُ يَعْنِي يَسْتَوِيَانِ»


Abu-Dawood-2570

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2570.


نَحْوَ هَذَا قَالَ بَعْدَ قَوْلِهِ: «حَقَّهَا»، «وَلَا تَعْدُوا الْمَنَازِلَ»


Abu-Dawood-2569

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2569.


«إِذَا سَافَرْتُمْ فِي الْخِصْبِ فَأَعْطُوا الْإِبِلَ حَقَّهَا، وَإِذَا سَافَرْتُمْ فِي الْجَدْبِ فَأَسْرِعُوا السَّيْرَ، فَإِذَا أَرَدْتُمُ التَّعْرِيسَ فَتَنَكَّبُوا عَنِ الطَّرِيقِ»


Abu-Dawood-2571

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

இரவில் பயணம் செய்தல்.

2571. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் பயணம் மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இரவு நேரத்தில் தான் பூமி சுருட்டப்படுகிறது (சுருக்கப்படுகிறது).

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«عَلَيْكُمْ بِالدُّلْجَةِ، فَإِنَّ الْأَرْضَ تُطْوَى بِاللَّيْلِ»


Abu-Dawood-812

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

812. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓத நான் பார்த்துள்ளேன்” என்று கூறினார்கள்.

இப்னு அபீ முலைகா (ரஹ்) கூறினார்:

நான் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் அந்த இரண்டு மிகப்பெரிய அத்தியாயங்கள் எவை என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல் அஃராஃப் (7 வது) அத்தியாயமும், அல் அன்ஆம் (6 வது) அத்தியாயமும் என்று பதிலளித்தார்.

இப்னு ஜுரைஜ் கூறினார்:

நான் இப்னு முலைகா (ரஹ்) அவர்களிடம் அந்த இரண்டு பெரிய அத்தியாயங்கள் எவை? எனக் கேட்டேன். அதற்கவர் அல் மாயிதா (5 வது) அத்தியாயமும், அல் அஃராஃப் (7 வது) அத்தியாயமும் என்று பதிலளித்தார். இதை அவர் சுயமாக கூறியதாக கருதுகிறேன்.


قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ: مَا لَكَ تَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِطُولَى الطُّولَيَيْنِ»،

قَالَ: قُلْتُ: مَا طُولَى الطُّولَيَيْنِ؟ قَالَ: الْأَعْرَافُ وَالْأُخْرَى الْأَنْعَامُ،

قَالَ: وَسَأَلْتُ أَنَا ابْنَ أَبِي مُلَيْكَةَ، فَقَالَ لِي: مِنْ قِبَلِ نَفْسِهِ الْمَائِدَةُ وَالْأَعْرَافُ


Abu-Dawood-816

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

816. நபி (ஸல்) அவர்கள் சுபுஹுத் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளிலும் ‘‘இதா ஸுல்சிலத்தில் அர்ளு ஸில்ஸாலஹா” என்ற (99 வது அத்தியாயத்தை) ஓத தாம் செவியேற்றதாக ஜுஹைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு நபித்தோழர் அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மறந்து விட்டார்களா? அல்லது வேண்டுமென்றே (அவ்வாறு) ஓதினார்களா? என்பதை நான் அறியமாட்டேன் என்றும் அவர் கூறினார்.

அறிவிப்பவர்: முஆத் பின் அப்துல்லாஹ் (ரஹ்)


أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَقْرَأُ فِي الصُّبْحِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا» فَلَا أَدْرِي أَنَسِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْ قَرَأَ ذَلِكَ عَمْدًا


Abu-Dawood-652

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

652. (காலணிகளுடன் தொழுது) யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் காலணிகளுடனும் காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«خَالِفُوا الْيَهُودَ فَإِنَّهُمْ لَا يُصَلُّونَ فِي نِعَالِهِمْ، وَلَا خِفَافِهِمْ»


Next Page » « Previous Page