2146. பெண்களை அடிக்காதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்நிலையில், உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, பெண்கள் கணவன்மார்களை எதிர்த்துப் பேசுகிறார்கள். எல்லா விஷயத்திலும் எல்லை மீறுகிறார்கள் என்று முறையிட்டதும், நபி (ஸல்) அவர்கள் பெண்களை இலேசாக அடித்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கினார்கள்.
(மனைவிமார்களை அடிப்பதற்கு அனுமதி வழங்கிய பிறகு) நபி (ஸல்) அவர்களின் வீட்டிற்கு அதிகமான பெண்கள் வந்து, கணவன்மார்கள் தங்களை அடிப்பதாகப் புகார் செய்தனர். உடனே நபி (ஸல்) அவர்கள் , அதிமான பெண்கள் தங்களது கணவன்மார்கள் அடிப்பதாக முஹம்மதின் குடும்பத்தாரிடம் வந்து புகார் கூறியுள்ளனர். எனவே உங்களில் தனது மனைவியை அடிப்பவர் சிறந்தவரில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இயாஸ் பின் அப்துல்லாஹ் (ரலி)…
«لَا تَضْرِبُوا إِمَاءَ اللَّهِ» فَجَاءَ عُمَرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ذَئِرْنَ النِّسَاءُ عَلَى أَزْوَاجِهِنَّ، فَرَخَّصَ فِي ضَرْبِهِنَّ، فَأَطَافَ بِآلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءٌ كَثِيرٌ يَشْكُونَ أَزْوَاجَهُنَّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ طَافَ بِآلِ مُحَمَّدٍ نِسَاءٌ كَثِيرٌ يَشْكُونَ أَزْوَاجَهُنَّ لَيْسَ أُولَئِكَ بِخِيَارِكُمْ»
சமீப விமர்சனங்கள்