4912. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு இறைநம்பிக்கையாளர், மற்றொரு இறைநம்பிக்கையாளரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.
மூன்று நாட்கள் கடந்துவிட்டால், அவரை சந்தித்து அவருக்கு ஸலாம் கூறவேண்டும். அவரும் பதில் ஸலாம் கூறிவிட்டால் இருவரும் நன்மையில் சமமாகிவிடுவார்கள். அவர் பதில் ஸலாம் கூறாவிட்டால் அவர் பாவத்தைச் செய்தவராவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அஹ்மத் பின் ஸயீத் அவர்கள், “முதலில் ஸலாம் கூறியவர் பேசாமல் இருந்த குற்றத்தை விட்டு நீங்கிவிடுவார்” என்ற வாக்கியத்தை கூடுதலாக அறிவித்துள்ளார்.
«لَا يَحِلُّ لِمُؤْمِنٍ أَنْ يَهْجُرَ مُؤْمِنًا فَوْقَ ثَلَاثٍ، فَإِنْ مَرَّتْ بِهِ ثَلَاثٌ، فَلْيَلْقَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَإِنْ رَدَّ عَلَيْهِ السَّلَامَ فَقَدِ اشْتَرَكَا فِي الْأَجْرِ، وَإِنْ لَمْ يَرُدَّ عَلَيْهِ فَقَدْ بَاءَ بِالْإِثْمِ»
زَادَ أَحْمَدُ «وَخَرَجَ الْمُسَلِّمُ مِنَ الْهِجْرَةِ»
சமீப விமர்சனங்கள்