466. ஹைவா பின் ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உக்பா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, நபி (ஸல்) அவர்கள், பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ‘அவூது பில்லாஹில் அளீம், வபிவஜ்ஹிஹில் கரீம், வ ஸுல்தானிஹில் கதீம், மினஷ்ஷைத்தானிர்ரஜீம்” (பொருள்: மகத்துவ மிக்க அல்லாஹ்வைக் கொண்டும், அவனின் சங்கையான திருமுகத்தைக்கொண்டும், அவனின் புராதான (நிலைத்திருக்கும்) ஆட்சியைக்கொண்டும் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன்)
என்று கூறுவார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாக நீங்கள் அறிவித்தீர்கள் எனக் கேள்விப்பட்டேன் என்று கூறினேன்.
அதற்கு உக்பா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள், இந்த அளவுதானா? (உமக்கு செய்தி கிடைத்தது?) என்று கேட்டார். நான், ஆம் என்று கூறினேன். அதற்கு அவர்கள், இந்த துஆவைக் கூறினால் ஷைத்தான், “இந்த நாள் முழுவதும் இவர் என்னைவிட்டு பாதுகாக்கப்பட்டுவிட்டார் என்று கூறுவான்” எனக் கூறினார்கள்.
لَقِيتُ عُقْبَةَ بْنَ مُسْلِمٍ، فَقُلْتُ لَهُ: بَلَغَنِي أَنَّكَ حَدَّثْتَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ قَالَ: «أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ»، قَالَ: أَقَطْ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ: فَإِذَا قَالَ: ذَلِكَ قَالَ الشَّيْطَانُ: حُفِظَ مِنِّي سَائِرَ الْيَوْمِ
சமீப விமர்சனங்கள்