Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-3307

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3307. என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், அதை அவரின் சார்பாக நீர் நிறைவேற்றுவீராக! என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ اسْتَفْتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ لَمْ تَقْضِهِ؟ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْضِهِ عَنْهَا»


Abu-Dawood-2401

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2401.


«إِذَا مَرِضَ الرَّجُلُ فِي رَمَضَانَ، ثُمَّ مَاتَ وَلَمْ يَصُمْ أُطْعِمَ عَنْهُ، وَلَمْ يَكُنْ عَلَيْهِ قَضَاءٌ، وَإِنْ كَانَ عَلَيْهِ نَذْرٌ قَضَى عَنْهُ وَلِيُّهُ»


Abu-Dawood-2400

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்து விட்டால்…?

2400. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ»


Abu-Dawood-1681

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1681. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என் தாய்-உம்மு ஸஅது இறந்து விட்டார். (அவர் சார்பில் நான் செய்யும்) எந்த தர்மம் சிறந்த தர்மம்?’ என்று கேட்டேன். அதற்கு ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனவே ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் ஒரு கிணற்றை வெட்டி இது உம்மு ஸஅதின் (நன்மைக்கான) கிணறு என்று கூறினார்.

அறிவிப்பவர் : ஒரு மனிதர்


أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ، فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟، قَالَ: «الْمَاءُ»، قَالَ: فَحَفَرَ بِئْرًا، وَقَالَ: هَذِهِ لِأُمِّ سَعْدٍ


Abu-Dawood-1679

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1679. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘எந்த தர்மம் உங்களிடத்தில் விருப்பமான தர்மம்?’ என்று கேட்டார். அதற்கு தண்ணீர் (வழங்குதல்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்)


أَنَّ سَعْدًا، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَيُّ الصَّدَقَةِ أَعْجَبُ إِلَيْكَ؟ قَالَ: «الْمَاءُ»،


Abu-Dawood-3132

ஹதீஸின் தரம்: Pending

3132. (ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், மூத்தா போரில் கொல்லப்பட்டு மரணித்த செய்தியை மக்களுக்கு அறிவித்துவிட்டு) ‘ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)


«اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا، فَإِنَّهُ قَدْ أَتَاهُمْ أَمْرٌ شَغَلَهُمْ»


Abu-Dawood-3206

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3206.

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாறாங்கல்லை தூக்க முடியாமல் தூக்கி வந்து அவரது தலைமாட்டில் வைத்தார்கள். ‘எனது சகோதரர் உஸ்மானின் கப்ரை நான் அடையாளம் கண்டு என் குடும்பத்தில் யாரேனும் இறந்தால் இவருக்கு அருகில் அடக்குவதற்காக இந்த அடையாளம்’ என்றும் கூறினார்கள்.


لَمَّا مَاتَ عُثْمَانُ بْنُ مَظْعُونٍ، أُخْرِجَ بِجَنَازَتِهِ فَدُفِنَ، فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا أَنْ يَأْتِيَهُ بِحَجَرٍ، فَلَمْ يَسْتَطِعْ حَمْلَهُ، فَقَامَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَسَرَ عَنْ ذِرَاعَيْهِ، قَالَ كَثِيرٌ: قَالَ الْمُطَّلِبُ: قَالَ الَّذِي يُخْبِرُنِي ذَلِكَ: عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ ذِرَاعَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ حَسَرَ عَنْهُمَا ثُمَّ حَمَلَهَا فَوَضَعَهَا عِنْدَ رَأْسِهِ، وَقَالَ: «أَتَعَلَّمُ بِهَا قَبْرَ أَخِي، وَأَدْفِنُ إِلَيْهِ مَنْ مَاتَ مِنْ أَهْلِي»


Abu-Dawood-3225

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3225. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரின் மீது உட்காருவதையும்; அதைக் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியேற்றுள்ளேன்.


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يَقْعُدَ عَلَى الْقَبْرِ، وَأَنْ يُقَصَّصَ وَيُبْنَى عَلَيْهِ»


Abu-Dawood-3213

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3213. நபி (ஸல்) அவர்கள், இறந்தவரின் உடலை குழிக்குள் வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم، َ كَانَ إِذَا وَضَعَ الْمَيِّتَ فِي الْقَبْرِ قَالَ: «بِسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»،

هَذَا لَفْظُ مُسْلِمٍ


Abu-Dawood-3332

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3332. நபி (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவைப் பின் தொடர்ந்தோம். அவர்கள் கப்ருக்கு அருகில் நின்று கொண்டு, ‘கால் பக்கம் விசாலமாக்கு! தலைப் பக்கம் விசாலமாக்கு! என்று குழி வெட்டுபவரிடம் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டேன். பின்பு நாங்கள் (ஜனாஸாவை அடக்கம் செய்துவிட்டு) திரும்பியபோது வழியில் ஒரு பெண்ணின் (சார்பாக அனுப்பப்பட்ட) அழைப்பாளர் எங்களை விருந்திற்கு அழைத்தார். எனவே! நபி (ஸல்) அவர்கள் அந்த அழைப்பை ஏற்று சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம். உணவு கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் உணவில் கையை வைத்தார்கள். கூட்டத்தில் உள்ள அனைவரும் கையை வைத்தனர். பிறகு எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு உணவுக்கவளம் (மெள்ளமுடியாமல் வாயில் சுழன்றுக்கொண்டு) விக்கிக் கொள்வதை (சிறுவர்களாகிய) எங்களின் தந்தையர் கண்டனர். “இந்த ஆட்டிறைச்சி அதனுடைய உரிமையாளர் அனுமதியின்றி எடுக்கப்பட்டதாகக் கருதுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது விருந்திற்கு அழைத்த பெண், அல்லாஹ்வின் தூதரே! ஆடு வாங்கிவர நகீஃ என்ற ஆட்டுச் சந்தைக்கு ஆளனுப்பினேன். ஆடு கிடைக்கவில்லை. பின்பு (ஏற்கனவே) ஆடு வாங்கியிருந்த எனது அண்டைவீட்டாருக்கு ஆளனுப்பி அதற்குரிய கிரயத்தை கொடுத்து ஆட்டை

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْقَبْرِ يُوصِي الْحَافِرَ: «أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ، أَوْسِعْ مِنْ قِبَلِ رَأْسِهِ»، فَلَمَّا رَجَعَ اسْتَقْبَلَهُ دَاعِي امْرَأَةٍ فَجَاءَ وَجِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ يَدَهُ، ثُمَّ وَضَعَ الْقَوْمُ، فَأَكَلُوا، فَنَظَرَ آبَاؤُنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلُوكُ لُقْمَةً فِي فَمِهِ، ثُمَّ قَالَ: «أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا»، فَأَرْسَلَتِ الْمَرْأَةُ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ يَشْتَرِي لِي شَاةً، فَلَمْ أَجِدْ فَأَرْسَلْتُ إِلَى جَارٍ لِي قَدِ اشْتَرَى شَاةً، أَنْ أَرْسِلْ إِلَيَّ بِهَا بِثَمَنِهَا، فَلَمْ يُوجَدْ، فَأَرْسَلْتُ إِلَى امْرَأَتِهِ فَأَرْسَلَتْ إِلَيَّ بِهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَطْعِمِيهِ الْأُسَارَى»


Next Page » « Previous Page