Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-2875

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2875. பெரும் பாவங்கள் யாவை?’ என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவை ஒன்பது என்று கூறிவிட்டு,

“முஸ்லிமான பெற்றோருக்கு நோவினை அளிப்பது; உயிருள்ளவருக்கும் இறந்தவர்களுக்கும் கிப்லாவாக இருக்கும் கஃபாவின் புனிதத்தை மறுத்தல்’ என்று (முன்னால் உள்ள ஹதீஸில் கூறப்பட்ட ஏழு பாவங்களுடன் கூடுதலாக இரண்டு பாவங்களை) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: உமைர் பின் கதாதா (ரலி)


أَنَّ رَجُلًا سَأَلَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الْكَبَائِرُ؟ فَقَالَ: «هُنَّ تِسْعٌ»، فَذَكَرَ مَعْنَاهُ زَادَ: «وَعُقُوقُ الْوَالِدَيْنِ الْمُسْلِمَيْنِ، وَاسْتِحْلَالُ الْبَيْتِ الْحَرَامِ قِبْلَتِكُمْ أَحْيَاءً وَأَمْوَاتًا»


Abu-Dawood-461

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 159

பள்ளியை துப்புரவு செய்தல்.

461. பள்ளியிலிருந்து ஒருவர் அகற்றி விடுகின்ற சிறிய தூசிக்கு வழங்கப்படும் கூலி உட்பட எனது சமுதாயத்தவருக்கு வழங்கப்படும் கூலிகள் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டன. எனது சமுதாயத்தவரின் பாவங்களும் என்னிடத்தில் எடுத்துக் காட்டப்பட்டன. ஒருவர் குர்ஆனின் ஒரு அத்தியாயத்தை அல்லது ஒரு வசனத்தை மனனம் செய்த பிறகு அதை அவர் மறந்து விடுகின்ற பாவத்தை விட வேறு ஒரு பெரிய பாவத்தை நான் காணவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீயிலும் பதிவாகியுள்ளது.)


«عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنَ الْمَسْجِدِ، وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي، فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنَ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا»


Abu-Dawood-4194

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4194. நபி (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ القَزَعِ»،

وَهُوَ أَنْ يُحْلَقَ رَأْسُ الصَّبِيِّ فَتُتْرَكَ لَهُ ذُؤَابَةٌ


Abu-Dawood-4193

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் :

குடுமி வைத்தல்

4193. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ القَزَعِ»،

وَالْقَزَعُ: أَنْ يُحْلَقَ رَأْسُ الصَّبِيِّ فَيُتْرَكَ بَعْضُ شَعْرِهِ


Abu-Dawood-4195

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4195. ஒரு சிறுவரின் தலை ஒரு பகுதி சிரைக்கப்பட்டும் இன்னொரு பகுதி சிரைக்கப்படாமலும் இருந்ததை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதற்குத் தடை விதித்தார்கள்.

‘முழுமையாகச் சிரையுங்கள்; அல்லது முழுமையாக விட்டு விடுங்கள்’ என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَأَى صَبِيًّا قَدْ حُلِقَ بَعْضُ شَعْرِهِ وَتُرِكَ بَعْضُهُ، فَنَهَاهُمْ عَنْ ذَلِكَ، وَقَالَ: «احْلِقُوهُ كُلَّهُ، أَوِ اتْرُكُوهُ كُلَّهُ»


Abu-Dawood-4192

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4192. அபூ தாலிபின் மகன் ஜஃபர் (ரலி) மரணித்த பின் மூன்று நாட்கள் நபி (ஸல்) அவர்கள் அவகாசம் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் ஜஃபரின் குடும்பத்தாரிடம் வந்தார்கள். ‘இன்றைய தினத்துக்குப் பின் என் சகோதரருக்காக அழக் கூடாது’ எனக் கூறினார்கள்.

‘என் சகோதரரின் புதல்வர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்’ என்றார்கள். நாங்கள் பறவைக் குஞ்சுகள் போல (தலைமுடி சீர் செய்யப்படாமல்) கொண்டு வரப்பட்டோம். உடனே நாவிதரை அழைத்து வரச் செய்து எங்கள் தலையை மழிக்குமாறு கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْهَلَ آلَ جَعْفَرٍ ثَلَاثًا أَنْ يَأْتِيَهُمْ، ثُمَّ أَتَاهُمْ، فَقَالَ: «لَا تَبْكُوا عَلَى أَخِي بَعْدَ الْيَوْمِ»، ثُمَّ قَالَ: «ادْعُوا لِي بَنِي أَخِي»، فَجِيءَ بِنَا كَأَنَّا أَفْرُخٌ، فَقَالَ: «ادْعُوا لِي الْحَلَّاقَ»، فَأَمَرَهُ فَحَلَقَ رُءُوسَنَا


Abu-Dawood-3131

ஹதீஸின் தரம்: Pending

3131. நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் உடன்படிக்கை எடுத்த போது, ‘இவ்வுடன்படிக்கையை மீறக் கூடாது; துன்பத்தின் போது முகத்தில் கீறக் கூடாது; தீமையை வேண்டக் கூடாது; சட்டையைக் கிழிக்கக் கூடாது; தலை முடியை விரித்துப் போட்டுக் கொள்ளக் கூடாது’ என்று உறுதிமொழி எடுத்தனர்…


كَانَ فِيمَا أَخَذَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَعْرُوفِ الَّذِي أَخَذَ عَلَيْنَا أَنْ لَا نَعْصِيَهُ فِيهِ: «أَنْ لَا نَخْمُشَ وَجْهًا، وَلَا نَدْعُوَ وَيْلًا، وَلَا نَشُقَّ جَيْبًا، وَأَنْ لَا نَنْشُرَ شَعَرًا»


Abu-Dawood-456

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

456. ஸுலைமான் பின் ஸமுரா அவர்கள் கூறியதாவது:

எனது தந்தை ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள், எனக்கு எழுதிய கடிதத்தில் “இறைவாழ்த்துக்கும், நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் கூறிய பின்பு (எழுதுவது என்னவெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் எங்கள் வீடுகளை அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதைப் போன்றே அல்லாஹ்வைத் தொழும் பள்ளிகளையும் அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டுமென எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

 


أَنَّهُ كَتَبَ إِلَى ابْنِهِ: أَمَّا بَعْدُ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَأْمُرُنَا بِالْمَسَاجِدِ أَنْ نَصْنَعَهَا فِي دِيَارِنَا، وَنُصْلِحَ صَنْعَتَهَا وَنُطَهِّرَهَا»


Abu-Dawood-4713

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4713. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம்  அன்சாரிகளில் (இறந்துவிட்ட) ஒரு குழந்தையின் உடல், நல்லடக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல்வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை” என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்தை படைத்து, அதற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்துவிட்டான்;

அல்லாஹ் நரகத்தை படைத்து, அதற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்துவிட்டான்” என்று கூறினார்கள்.


قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، طُوبَى لِهَذَا لَمْ يَعْمَلْ شَرًّا وَلَمْ يَدْرِ بِهِ، فَقَالَ: «أَوْ غَيْرُ ذَلِكَ يَا عَائِشَةُ، إِنَّ اللَّهَ خَلَقَ الْجَنَّةَ وَخَلَقَ لَهَا أَهْلًا، وَخَلَقَهَا لَهُمْ وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ، وَخَلَقَ النَّارَ وَخَلَقَ لَهَا أَهْلًا، وَخَلَقَهَا لَهُمْ وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ»


Abu-Dawood-3187

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

சிறுவர்களுக்கு ஜனாஸா தொழுகை.

3187. நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், 18 மாதத்தில் மரணித்த போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா ரலி)


«مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ ابْنُ ثَمَانِيَةَ عَشَرَ شَهْرًا فَلَمْ يُصَلِّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Next Page » « Previous Page